Bloating Home Remedies: வயிறு உப்புசத்தால் அவதியா? இந்த 6 பொருளில் ஒன்னு போதும்

  • SHARE
  • FOLLOW
Bloating Home Remedies: வயிறு உப்புசத்தால் அவதியா? இந்த 6 பொருளில் ஒன்னு போதும்


வயிறு உப்புசம் குறைய வீட்டு வைத்தியம்

இஞ்சி

இஞ்சியில் கார்மினேடிவ் குணங்கள் நிறைந்துள்ளது. இவை வாயு உற்பத்தியைக் குறைத்து, பிடிப்புகள் மற்றும் அஜீரணத்தைக் குறைக்க உதவுகிறது. இவை வாயுவை வெளியேற்றி வயிறு வீக்கம் மற்றும் தொடர்புடைய அறிகுறிகளைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Summer Cold Remedies: கொளுத்தும் வெயிலிலும் சளித்தொல்லையா? இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க

எலுமிச்சை

இது இயற்கையான சிறுநீரிறக்கிகளாக செயல்படுகிறது. இது உடலின் உப்பு அளவைக் குறைத்து உப்பினால் ஏற்படும் வீக்கத்தைப் போக்க உதவுகிறது. வெதுவெதுப்பான நீருடன் இணைப்பது மிதமான மலமிளக்கிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.

பெப்பர்மின்ட் டீ

இதில் ஆன்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் இன்னும் பல்வேறு குணங்கள் நிறைந்துள்ளது. இது வயிறு உப்புசம் போன்ற செரிமான பிரச்சனை கொண்டவர்களுக்கு சிறந்த ஒன்றாகும். இது வாயு மற்றும் பிடிப்புகளிலிருந்து நிவாரணம் தர உதவுகிறது.

பெருஞ்சீரக விதைகள்

இதில் செரிமான குணங்கள் மற்றும் ஆன்டிஸ்பாஸ்மோடிக் கூறுகள் நிறைந்துள்ளது. இவை வயிற்றில் வீக்கம் மற்றும் வாயு பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Sore Throat Remedies: கோடையில் தொண்டை வறட்சியை போக்கும் வீட்டு வைத்தியம் இங்கே…

கிரீன் டீ

இது இயற்கையான டையூரிடிக் மற்றும் ஆக்ஸிஜனேற்றமாக செயல்படுகிறது. மேலும் இதனை அருந்துவது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது வயிறு வீக்கத்தைக் குறைப்பதுடன் வயிற்று பிரச்சனைகள் மற்றும் வாயு திரட்சிக்கு உதவுகிறது.

வாழைப்பழங்கள்

இதில் நார்ச்சத்துகள் மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலில் சோடியம் அளவை சமன் செய்கிறது. மேலும் உப்பினால் ஏற்படும் வயிறு உப்புசத்திற்கு பயனுள்ள சிகிச்சையாக அமைகிறது.

குடல் ஆரோக்கியத்தின் சமநிலையை மீட்டெடுப்பதற்கு செரிமானம் உதவுகிறது. இதில் யோகா அல்லது நடைபயிற்சி போன்ற லேசான உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வீக்கத்தைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Feet Swelling Remedies: கால்கள் அடிக்கடி வீங்கி வலி வருதா? இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Homemade Face Scrub: வெயில் காலத்தில் வீட்டில் ஃபேஸ் ஸ்க்ரப் செய்வது எப்படி?

Disclaimer

குறிச்சொற்கள்