How to stop feeling bloated after every meal: வயிறு வீங்குவது என்பது வெறும் கொழுப்பு உணர்வு மட்டுமல்லாமல், வலி, வாயு அல்லது வயிற்றில் சத்தம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய நிலையாகும். பொதுவாக மூன்றில் ஒருவருக்கு லேசானது முதல் கடுமையான வீக்கம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதில் சிலருக்கு வீக்கம் எப்போதாவது ஏற்பட்டு விரைவாகக் கடந்து செல்லும். ஆனால் மற்றவர்களுக்கு வீக்கம் ஒரு தொடர்ச்சியான அசௌகரியமாக இருக்கலாம். இது போன்ற சூழ்நிலையில் வயிறு உப்புசம் ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிவது அவசியமாகும். இதன் மூலம் வயிறு உப்புசத்தைத் தடுக்கலாம்.
வயிறு உப்புசம்
இது குடலில் வாயு தேங்குவதால் ஏற்படும் வயிறு அல்லது வயிற்றில் வீக்கம் அல்லது வயிறு நிரம்பிய உணர்வைக் குறிக்கிறது. பெரும்பாலானோர் சாப்பிடும் போதோ அல்லது குடிக்கும்போதோ, சிறிது காற்றை விழுங்குவார்கள். ஆனால் அதிகமாக விழுங்குவது கூடுதல் வாயு சேமிக்க வழிவகுக்கிறது. மேலும் வீக்கம் மற்றும் ஏப்பம் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் மற்றும் பானங்கள் அதிக வாயுவை ஏற்படுத்தக்கூடியதாகும். சில நேரங்களில் இது வயிற்றை பெரிதாக்கி வீங்கியவாறு காட்டுகிறது. இது வயிறு வீக்கம் என்று அழைக்கப்படுகிறது. இது சிலருக்கு அசௌகரியம் அல்லது வலியை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Stomach Bloating: இந்த பழங்களை சாப்பிட்டா வயிறு உப்புசமா இருக்குமாம்! வயிறு வீக்கத்தைத் தடுக்க என்ன செய்வது?
முக்கிய கட்டுரைகள்
சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசத்தை எவ்வாறு தடுப்பது?
மெதுவாக உணவை உண்பது
சாப்பிட்ட பிறகு வயிற்று உப்புசத்தைக் கட்டுப்படுத்த உணவை மெதுவாகவும் முழுமையாகவும் மென்று சாப்பிட வேண்டும். ஏனெனில், இது அதிகப்படியான காற்றை விழுங்குவதைத் தவிர்க்க உதவுகிறது. அடிக்கடி ஏப்பம் விடுகிறீர்கள் என்றால் இது மிகவும் உதவியாக இருக்கும். இந்த எளிய வழியின் மூலம் உணவை சிறிய துகள்களாக உடைப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால், சாப்பிட்டதை குடல் செயலாக்குவதை எளிதாக்குகிறது. இது ஒரு எளிமையான மாற்றமாகும். இது தவிர, இந்த முறையில் சிறிய அளவில் உணவை எடுத்துக்கொள்ளலாம். விழுங்குவதற்கு முன்னதாக அதிக முறை மெல்ல வேண்டும். மேலும் உணவின் போது தண்ணீர் பருகுவதன் மூலம் சிறிய இடைவெளிகளை எடுத்துக் கொள்ளலாம்.
உணவை மெதுவாக உண்பதில் மற்ற சில நன்மைகளும் உள்ளது. இவ்வாறு மெதுவாக உண்பதில் நேரத்தை எடுத்துக் கொள்வது குறைவாக சாப்பிட உதவவும், வயிறு நிரம்பிய உணர்வைத் தரவும் உதவுகிறது. இது எடை மேலாண்மைக்கு உதவக்கூடியதாகும். வயிறு நிரம்பியதை மூளை உணர சுமார் 20 நிமிடங்கள் ஆகும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. மாறாக, மிக வேகமாக சாப்பிடுவது கூடுதல் எடை அதிகரிப்புடன், வயிறு உப்புசத்தையும் தரக்கூடியது.
நடைபயிற்சி செய்வது
வயிற்று உப்புசத்தைத் தடுக்க நடைபயிற்சி மேற்கொள்வது சிறந்த தீர்வாகும். இது மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. நடைபயிற்சி செய்வது வயிறு உப்புசத்தைக் குறைக்க வழிவகுக்குகிறது. உணவுக்குப் பிறகு நடப்பது, கடுமையான வீக்கம் மற்றும் வலி ஏற்படுவதற்கு முன்பு சிக்கிய வாயுவை வெளியிட உதவுகிறது. எனவே சாப்பிட்ட பிறகு குறைபட்ச உடல் செயல்பாடுகளில் ஈடுபடுதல் அதாவது 10 நிமிடங்கள் அல்லது 1,000 அடிகள் நடப்பது வாயு மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Bloating Home Remedies: வயிறு உப்புசம் பிரச்னைக்கு சூப்பர் தீர்வு
நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ளல்
குடல் இயக்கத்திற்கு போதுமான அளவு உணவை உட்கொள்வது செரிமான அமைப்பு வழியாக உணவை நகர்த்த உதவுகிறது. இதன் மூலம் வாயு மற்றும் வீக்கத்தைக் குறைக்கலாம். வாயு அல்லது வீக்கம் ஏற்படாமல் இருக்க தேவையான நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். ஆராய்ச்சியின் படி , கார்போஹைட்ரேட்டுகளுடன் நார்ச்சத்து சாப்பிடுவது வயிறு உப்புசத்தைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. அதிக கார்போஹைட்ரேட் உணவை விட அதிக நார்ச்சத்து மற்றும் அதிக புரத உணவை சாப்பிடுவது வயிறு உப்புசத்தைக் குறைப்பதாகக் கூறபப்டுகிறது. மேலும் செரிமான அமைப்புக்கு ஏற்ப நேரம் கொடுக்க, நார்ச்சத்து உட்கொள்ளலை மெதுவாக அதிகரிக்க வேண்டும்.
கவனத்துடன் சாப்பிடுவது
உணவு நேர நடத்தையை மாற்றுவது, அந்த உணவு வயிற்றை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் மாற்றக்கூடும். அதன் படி, உணவு நேரத்தில் மெதுவாக சாப்பிட வேண்டும் மற்றும் சாப்பிடும் போது பேசக்கூடாது. ஏனெனில், இது உணவு விழுங்கும் போது காற்றினை விழுங்குவதையும் அதிகரிக்கலாம். வயிறு உப்புசத்திற்கு அதிகம் சாப்பிடுவதும் காரணமாக இருக்கலாம். எனவே அடிக்கடி சிறிய அளவில் சாப்பிட முயற்சிக்கலாம். ஒரு நேரத்தில் குறைந்த அளவு உணவை மட்டுமே பதப்படுத்த வேண்டியிருக்கும் சமயத்தில் இரைப்பை குடல் பாதை சிறப்பாக செயல்படும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Stomach Bloating: மேல் வயிறு உப்பிக் கொண்டு வலிக்கிதா.? இத மட்டும் பண்ணுங்க.. சரி ஆகிடும்.!
Image Source: Freepik