Foods recommended by doctors to relieve bloating: அன்றாட வாழ்வில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை போன்றவற்றால் பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் வயிறு உப்புசம் ஒரு பொதுவான பிரச்சனையாகும். வயிற்று உப்புசம் என்பது மலச்சிக்கல் அல்லது அதிகப்படியான வாயு காரணமாக ஏற்படக்கூடிய ஒரு பொதுவான செரிமானப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது. இந்த வயிறு வீக்கம் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். இது நிறைவு, இறுக்கம் மற்றும் வயிற்றில் அழுத்தம் போன்ற உணர்வுகளால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த அறிகுறிகள் லேசானதாக இருந்தாலும், சிலருக்குக் கடுமையான வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்டவசமாக, சில வாழ்க்கை முறை மாற்றங்களின் உதவியுடன் வீக்கத்தைத் திறம்பட நிர்வகிக்க முடியும். பொதுவாக, நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்கள் வீக்கம் மற்றும் பிற செரிமானப் பிரச்சினைகளை கணிசமாக பாதிக்கிறது. எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணருமான "குடல் மருத்துவர்" என்று பிரபலமாக அறியப்படும் டாக்டர் சௌரப் சேத்தி அவர்கள் விரைவாக அகற்ற உதவும் உணவுகளின் பட்டியலைக் குறித்து இன்ஸ்டாகிராம் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: காலை நேரத்தில் வீங்கிய உணர்வா? உடனே சரியாக நிபுணர் சொன்ன இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
வீக்கத்தைப் போக்க உதவும் சிறந்த உணவுகள்
பெருஞ்சீரக விதைகள்
பொதுவாக உணவு உட்கொண்ட பிறகு பெருஞ்சீரகம் விதைகளை மென்று சாப்பிடுவது வீக்கத்தைக் குறைப்பதுடன், ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த சிறிய விதைகளைச் சாப்பிடுவது செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இவை உணவை மேலும் உடைக்க வழிவகுக்கிறது.
மிளகுக்கீரை
இது குளிர்ச்சியூட்டும் பண்புகளைக் கொண்டதாகும். இதை உட்கொள்வது செரிமான தசைகளை தளர்த்துவதன் மூலம் செரிமானத்தை திறம்பட அதிகரிக்க உதவுகிறது. மிளகுக்கீரை உட்கொள்ளல் வாயு மற்றும் குமட்டலை திறம்பட குறைக்க உதவுகிறது.
பப்பாளி
இந்த பழத்தில் செரிமான நொதிகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை ஆரோக்கியமான சிற்றுண்டிக்கு சரியான தேர்வாக அமைகிறது. பப்பாளியில் முதன்மையாக பப்பேன் எனப்படும் நொதி நிறைந்துள்ளது. இந்த நொதியானது புரதங்களை உடைக்க உதவுகிறது.
அன்னாசிப்பழம்
இது செரிமானத்திற்கு உதவும் புரோமெலைன் எனப்படும் நொதிகளால் நன்கு நிறைந்ததாகும். கூடுதலாக, இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலேட் மற்றும் பல ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த நல்ல மூலமாகும்.
இஞ்சி
இது வீக்கம் மற்றும் செரிமானப் பிரச்சினைகளுக்கு நன்கு அறியப்பட்ட தீர்வாகக் கருதப்படுகிறது. இஞ்சியில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் செரிமான பண்புகளால் நிறைந்துள்ளது. இது மலச்சிக்கல்லையும், வீக்கத்திற்கான பிற காரணங்களையும் திறம்பட குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ஆசையா 2 பஜ்ஜி சாப்பிட்டதும் வயிறு உப்புசம் ஏற்படுத்தா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!
வெள்ளரி
வெள்ளரி உட்கொள்வது உடலுக்குப் புத்துணர்ச்சியூட்டும் கூடுதலாக அமைகிறது. இதன் அதிகளவிலான நீர் உள்ளடக்கம் மற்றும் குளிர்ச்சியூட்டும் பண்புகள் வீக்கத்திற்கு ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது.
சியா விதைகள்
இது நார்ச்சத்துக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாவர புரதத்தின் சிறந்த மூலமாக விளங்குகிறது. இவை சீரான செரிமானத்தை ஆதரிக்கவும், எடை இழப்புக்கும் உதவுகின்றன.
எலுமிச்சை நீர்
எலுமிச்சை நீரை அருந்துவது உடலுக்கு மேம்பட்ட நீரேற்றம் மற்றும் செரிமானம் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல், இதில் அதிகளவிலான ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது.
தயிர்
கிரீமி தயிர் என்பது புரோபயாடிக் நிறைந்த சிறந்த பால் பொருளாகும். இதை உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், சீரான செரிமானத்தை உறுதி செய்யவும் உதவுகிறது.
கிவி
கிவி பழம் வைட்டமின் சி, அதிக நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளடக்கம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதை அன்றாட உணவில் சேர்ப்பது ஒரு சிறந்த கூடுதலாக இருக்கும். இவை நல்ல செரிமானத்தை ஆதரிக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் உதவுகிறது.
வீக்கத்தை திறம்பட சமாளிப்பதற்கு அன்றாட உணவில் இந்த உணவுகள் மற்றும் பானங்களை முயற்சிக்க வேண்டும். எனினும், இதை எடுத்துக் கொண்ட பிறகும் வீக்கம் தொடர்ந்தால், மருத்துவ உதவியை நாடுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: சாப்பிட்ட பிறகு கிராம்பு டீ குடிப்பதில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?
Image Source: Freepik