What happens if you drink clove tea everyday: அன்றாட வாழ்வில் பலரும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதிலும், மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக வயிறு தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக அதிக உணவு உட்கொண்ட பிறகு வயிறு உப்புசம், வீக்கம் பிரச்சனைகள் பலரும் அனுபவிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். அதிர்ஷ்டவசமாக, இது போன்ற வயிறு உப்புசம் பிரச்சனைகளிலிருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம்.
அவ்வாறு, வயிறு உப்புசத்தைக் குறைக்கும் சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றாக கிராம்பு உதவுகிறது. கிராம்பு டீ உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது திடீர் அசௌகரியம் மற்றும் வாய்வு பிரச்சனையை சரிசெய்ய வழிவகுக்கிறது. கிராம்பு மற்றும் அதன் எண்ணெய், அவற்றின் சக்திவாய்ந்த மருத்துவ நன்மைகளுக்கு பெயர் பெற்றதாகும். இவை செரிமானத்தை மேம்படுத்தவும், பதட்டத்தைக் குறைக்கவும், வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இதில் அதிக உணவுக்குப் பிறகு கிராம்பு டீயை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Clove Tea Benefits: சாப்பிட்டவுடன் வயிறு உப்புசமா இருக்கா? அப்போ இந்த மூலிகை டீயை ட்ரை பண்ணுங்க!
உணவுக்குப் பிறகு கிராம்பு தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
செரிமானத்தை ஆதரிக்க
மதிய உணவு அல்லது இரவு உணவுக்குப் பின்னதாக கிராம்பு தேநீர் அருந்துவது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த டீ குடிப்பது செரிமான நொதிகளின் சுரப்பை மேம்படுத்துவதன் மூலம் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் வீக்கம், அஜீரணம் மற்றும் வாய்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.
அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த
கிராம்புகளில் யூஜெனால் போன்ற அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த ஆரோக்கியமான பண்புகள் உள்ள கிராம்பு டீ குடிப்பது அதிக உணவு சாப்பிட்ட பிறகு ஏற்படக்கூடிய அசௌகரியத்தைத் தணிக்க உதவுகிறது.
ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த
கிராம்புகளில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்து காணப்படுகின்றன. இது உடலில் ஃப்ரீ ரேடிக்கல்கள் இருப்பதால் ஏற்படும் சேதத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த தேநீரைக் குடிப்பது, உடலில் ஆக்ஸிஜனேற்றிகளை அதிகரிக்கிறது. இவை சேதத்தைக் குறைப்பதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
சிறந்த இன்சுலின் ஒழுங்குமுறைக்கு
பல ஆய்வுகளில், கிராம்புகளை மெல்லுவது சிறந்த இன்சுலின் மேலாண்மைக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது. உண்மையில், கிராம்பு டீ அருந்துவது இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் நிலையான வெளியீட்டை உறுதி செய்யவும், உடலில் திடீரென இரத்த சர்க்கரை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்த டீ குடிங்க..
வாய்வழி ஆரோக்கியத்திற்கு
உணவுக்குப் பிறகு, கிராம்பு டீயைக் குடிப்பது வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது பற்களின் துவாரங்களில் சிக்கியிருக்கும் உணவுப் பொருள்களை அகற்றவும், பற்களை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது. கிராம்புகளின் சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்க உதவுகிறது.
கிராம்பு தேநீர் தயாரிப்பது எப்படி
கிராம்பு டீயை எளிதான முறையில் வீட்டிலேயே தயார் செய்யலாம்.
- முதலில் இரண்டு கப் அளவிலான தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் முழு கிராம்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- இந்தக் கலவையை நன்கு காய்ச்ச வேண்டும்.
- இந்த தேநீரை வடிகட்டி, தேன் சேர்த்து அருந்தலாம்.
- இவ்வாறு உணவுக்குப் பிறகு, கிராம்பு டீ அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: வாய் துர்நாற்றத்தால் அவதியா? கிராம்புவை இப்படி யூஸ் பண்ணுங்க.. மருத்துவர் தரும் டிப்ஸ் இதோ
Image Source: Freepik