How to use cloves to cure bad breath: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் பாதுகாப்பாக மற்றும் ஆரோக்கியமாக வைப்பது அவசியமாகும். இதில் வாய் ஆரோக்கியமும் அடங்கும். இந்நிலையில், வாய் துர்நாற்றம் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக அமைகிறது. வாய் சுகாதாரத்தை கவனிக்காததால் இது ஏற்படலாம். பெரும்பாலும், பற்களைச் சரியாக சுத்தம் செய்யாதபோது, வாயில் பாக்டீரியாக்கள் வளரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் பற்களில் புழுக்கள் உருவாகத் தொடங்குகிறது. இது சரியானது அல்ல. வாய் துர்நாற்றம் மக்களின் நம்பிக்கையை பாதிக்கிறது. இதை சமாளிக்க கிராம்புகளைப் பயன்படுத்தலாம். கிராம்பில் வாய் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கக்கூடிய கூறுகள் உள்ளன. இவை வாய் துர்நாற்றத்தை அகற்றுவதற்கு நன்மை பயக்கும். இதில் வாய் துர்நாற்றத்தை நீக்க கிராம்புகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். இது குறித்து ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் பயிற்சி பெறும் ஆயுர்வேதச்சார்யா டாக்டர் ஷ்ரே சர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: World Oral Health Day 2025: கொஞ்சம் கவனம் பாஸ்!! வாயை சுத்தமா வச்சிக்கலைன்னா... இந்த மூணு நோய்களும் வர வாய்ப்பிருக்கு...!
வாய் துர்நாற்றத்தைப் போக்க கிராம்புவை பயன்படுத்துவது எப்படி?
கிராம்புகளை மெல்லுவது
வாய் மிகவும் துர்நாற்றம் வீசும் போது, ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை வாயில் வைத்திருக்கலாம். அதில் உள்ள இயற்கை எண்ணெயின் காரணமாக இதை லேசாக மென்று சாப்பிடலாம். இவ்வாறு செய்யும் போது கிராம்பு எண்ணெய் வெளியாகிறது. இது துர்நாற்றத்தை நீக்க உதவுகிறது. உண்மையில், கிராம்பை மென்று சாப்பிடும்போது, அந்த எண்ணெய் வாயில் உள்ள உமிழ்நீரில் கரைகிறது. இது துர்நாற்றத்தை நறுமணமாக மாற்றும். அது மட்டுமல்லாமல், கிராம்பை மென்று சாப்பிடுவது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து பாக்டீரியா வளர்ச்சியின் அபாயத்தைக் குறைக்கிறது.
முக்கிய கட்டுரைகள்
கிராம்பு டீ குடிப்பது
பற்களின் ஆரோக்கியத்திற்கு, கிராம்புகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீரை அருந்தலாம். இந்த தேநீர் தயாரிப்பது மிகவும் எளிதானதாகும். இதற்கு சில கிராம்புகளைத் தண்ணீரில் 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு, இதை வடிகட்டி குடிக்கலாம். இந்த தயாரிக்கப்பட்ட தேநீரை அருந்துவது வாய் துர்நாற்றத்தை நீக்க உதவுவதுடன், பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதன் ஆக்ஸிஜனேற்றிகள் வீக்கத்தைக் குறைக்கவும், வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
கிராம்பு எண்ணெயைக் கொண்டு வாய் கொப்பளிப்பது
வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் கிராம்பு எண்ணெயைக் கலக்க வேண்டும். இப்போது இந்த நீரை வாயில் சிறிது நேரம் வைத்திருந்து கழுவலாம். கிராம்பில் நிறைந்திருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. இது வாய் துர்நாற்றத்தை நீக்குவது மட்டுமல்லாமல், பற்களை பலப்படுத்தவும் உதவுகிறது. கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்துவது வாய் சுகாதாரத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: வாய் துர்நாற்றம் சட்டுனு நீங்க... டக்கரான வீட்டு வைத்தியம்..
பற்களுக்கு கிராம்பு பயன்படுத்துவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை
கிராம்புகளின் உதவியுடன் பற்களை ஆரோக்கியமாக்க வைக்க முடியும் என்பது உண்மை தான். இவை வாய் துர்நாற்றத்தை நீக்கி, பற்களை வலிமையாக்க உதவுகிறது. இது போன்ற சூழ்நிலையில், தொடர்ந்து பல் துலக்குவதும், நல்ல வாய்வழி சுகாதாரத்தைப் பேணுவதும் அவசியமாகும்.
கிராம்பு பயன்படுத்திய பிறகும் கூட, வாய் துர்நாற்றம் வீசுவதாக இருப்பின், அதை லேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது வேறு ஏதேனும் நோயின் அறிகுறியாகவும் கூட இருக்கலாம். குறிப்பாக, பல் மருத்துவ நிலைகளும் பல் வலியை ஏற்படுத்துகிறது.
கிராம்பு சிலருக்குப் பொருந்தாத இருக்கலாம். அவர்கள், அதைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மேலும், அவர்கள் பற்களை வெண்மையாக்குவதற்கு வேறு பாதுகாப்பான வீட்டு வைத்திய முறைகளைத் தேர்வு செய்யலாம். எனினும், இது தொடர்பான மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: தாங்க முடியாத வாய் துர்நாற்றமா? இவைதான் காரணங்கள்.. குறைக்க இதை எல்லாம் செய்யுங்கள்...!
Image Source: Freepik