$
How To Stop Bad Breath From Mouth: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை ஒவ்வொரு உறுப்பையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் வாய் ஆரோக்கியம் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றாக அமைகிறது. ஏனெனில், சில சமயங்களில் ஒருவருடன் பேசும் போது நம் வாயிலிருந்து வெளிவரும் வாசனை காரணமாக, அந்த உரையாடலைத் தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இது அவர்களுக்கும், எதிரே உள்ளவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அதாவது வாய் துர்நாற்றம் ஆனது ஒருவரது நம்பிக்கையையும் மற்றவர்களுடனான அவர்களத் தொடர்புகளையும் பாதிக்கிறது. இதில் வாய் துர்நாற்றத்தை சமாளிப்பது என்பது வாய் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதைக் குறிக்கிறது.
வாய் துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணம் வாயில் பாக்டீரியாக்கள் குவிவதே ஆகும். இந்த பாக்டீரியாக்களின் காரணமாக, வாயில் துர்நாற்றம் வீசும் கந்தக கலவைகள் உருவாகலாம். இது வறண்ட வாய், வாய் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் உணவுகள், மோசமான வாய்வழி சுகாதாரம் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இந்த வாய் துர்நாற்றத்தை சரியான நேரத்தில் சரிசெய்யப்படாவிட்டால் அது பற்சிதைவு, ஈறு நோய் மற்றும் தொற்று நோய்கள் தொற்றுநோய்கள் போன்ற கடுமையான வாய்வழி சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாயில் பாக்டீரியாக்கள் செழித்து வளரும் சமயத்தில் அவை, ஈறுகளில் பிளேக் உருவாக்கம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம். நாளடைவில் இது பற்களை ஆதரிக்கும் திசுக்கள் மற்றும் எலும்புகளை சேதப்படுத்துகிறது. எனவே நீண்ட கால வாய் ஆரோக்கியத்திற்கு, ஆரம்பத்திலேயே துர்நாற்றம் பிரச்சனையை எதிர்த்துப் போராடுவது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Bad Breath: வாய் துர்நாற்றத்தால் அவதியா? இந்த வைத்தியத்த ட்ரை பண்ணுங்க!
துர்நாற்றத்தை எதிர்த்துப் போராட உதவும் பயனுள்ள வீட்டு வைத்தியங்கள்
நீரேற்றமாக இருப்பது
உடலில் பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது நீரிழப்பு ஆகும். இதில் வாய் துர்நாற்றமும் ஒன்று. வாய் துர்நாற்றத்தை எளிதில் தீர்க்க உதவும் வழிகளில் உள்ள ஒன்று நீரேற்றமாக இருப்பதாகும். ஏனெனில், வாய் துர்நாற்றம் ஏற்பட வறண்ட வாய் ஒரு பொதுவான காரணமாக அமைகிறது. இவ்வாறு நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிப்பது வாயை ஈரமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், நீரேற்றமாக இருப்பது உணவுத் துகள்களைக் கழுவுவதுடன், துர்நாற்றம் வீசும் பாக்டீரியாக்களின் செறிவைக் குறைக்கிறது. சரியான நீரேற்றத்துடன் வாய் ஆரோக்கியத்தைப் பராமரிக்க ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உப்பு நீர் கொப்பளிப்பு
உப்பு நீரைக் கொண்டு வாயைக் கழுவுவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடலாம். இது எளிதான மற்றும் பயனுள்ள தீர்வாக அமைகிறது. இதற்கு ஒரு கிளாஸ் அளவிலான நீரைக் கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் அளவிலான உப்பைச் சேர்த்துக் கொள்ளலாம். இந்த நீரை வாயில் ஊற்றி 30 விநாடிகள் வரை வாயைச் சுற்றிக் கழுவுவது பாக்டீரியாவை அகற்றவும், ஈறுகளில் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. உப்பு நீரில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இந்த நீரைக் கொண்டு வாயைச் சுத்தம் செய்யும் போது, அது வாயை சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்துதல்
உண்மையில் ஆப்பிள் சைடர் வினிகர் இயற்கையான அமில பண்புகளைக் கொண்டுள்ளது. இவை வாயில் உள்ள pH அளவை சமநிலைப்படுத்துவதன் மூலம் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்களை அழிக்கிறது. இதற்கு ஒரு தேக்கரண்டி அளவிலான ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் நீரில் கரைத்து, பல் துலக்குவதற்கு முன் மவுத்வாஷாக பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்தும் போது, அது வாயின் துர்நாற்றத்தை நீக்குவதுடன், ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Bad Breath: காலையில் எழுந்ததும் வாயில் துர்நாற்றம் வீசிகிறதா? இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்!
சரியாக பல் துலக்குதல்
மோசமான வாய் பராமரிப்பின் காரணமாக வாய் துர்நாற்றம் ஏற்படலாம். இதில் பல் துலக்குதலும் அடங்கும். ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்குதலை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு இரு முறை பல் துலக்குவது உணவுத் துகள்கள் மற்றும் துர்நாற்றத்திற்கு பங்களிக்கும் பிளேக்கை அகற்றுவதற்கு உதவுகிறது. அதே சமயம், பற்களுடன் நாக்கை சுத்தப்படுத்துதலிலும் கவனம் வேண்டும். ஏனெனில், இது பாக்டீரியாக்களின் இனப்பெருக்கத்திற்கு இடமாக அமைகிறது. எனவே தினமும் காலை மற்றும் இரவு என இரு நேரங்களிலும் நாக்கை மெதுவாக சுத்தம் செய்ய நாக்கு ஸ்கிராப்பர்கள் மென்மையான முட்கள் கொண்ட டூத் பிரஷைப் பயன்படுத்த வேண்டும். நாக்கைத் துலக்குவதன் மூலம் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அகற்றலாம் என கூறப்படுகிறது.

மூலிகைகளைப் பயன்படுத்துதல்
வாய் ஆரோக்கியத்திற்கு சில மூலிகைகளும் உதவிபுரிகின்றன. அதன் படி, புதினா, துளசி அல்லது வோக்கோசு போன்றவை வாயில் உள்ள துர்நாற்றத்தை நடுநிலையாக்க உதவுகிறது. இதற்கு காரணம் இந்த மூலிகைகளில் உள்ள இயற்கையான டியோடரைசராக செயல்படும் குளோரோபில் இருப்பதே ஆகும். இவை துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சேர்மங்களை நடுநிலையாக்கி துர்நாற்றத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதில் குறிப்பாக, வோக்கோசு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் இவை உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டி, வாயை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
இவ்வாறு பல்வேறு வீட்டு வைத்திய முறைகளின் உதவியுடன் வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபடுவதுடன், வாய் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: அல்சரால் வாய்துர்நாற்றமா? இந்த இரண்டையும் அடித்து விரட்ட இந்த ஒரு பானம் குடிங்க போதும்!
Image Source: Freepik