How To Get Rid Of Constipation: இன்றைய நவீன காலகட்டத்தில் உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் போதிய ஊட்டச்சத்து இல்லாமையால் பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக குறைந்த நீர்ச்சத்து மற்றும் போதுமான நீரேற்றம் இல்லாமை போன்றவற்றால் பல்வேறு நபர்களும் மலச்சிக்கல் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். பல்வேறு காரணங்களால் குடல் இயக்கங்கள் அரிதாகவோ அல்லது கடினமாகவோ இருக்கலாம். இந்நிலையிலேயே மலச்சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக, இது இரைப்பை குடல் கோளாறுகள் அல்லது மன அழுத்தம் காரணமாக ஏற்படலாம்.
மலமிளக்கிகள் தற்காலிக நிவாரணம் அளிக்கும் போது, இவை எப்போதும் சிறந்த தேர்வாக அமையாது. மேலும் மலமிளக்கிகள் உடலில் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் திரவங்களின் இயற்கையான சமநிலையை சீர்குலைக்கிறது. இது நீரிழப்பு அல்லது சமநிலையின்மைக்கு வழிவகுக்கலாம். அதிகப்படியான பயன்பாடு செரிமான மண்டலத்தின் புறணிக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. எனவே மலச்சிக்கலில் இருந்து விரைவான நிவாரணம் பெற சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம். இதன் மூலம் மலச்சிக்கல்லை எளிதில் போக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Constipation In Babies: உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல் இருக்கா? இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்
மலச்சிக்கல்லை எளிதில் நீக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்
நீரேற்றமாக இருப்பது
எப்போதும் நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிப்பது மலத்தை மென்மையாக்குகிறது. இது எளிதாக வெளியேற்ற உதவும். மேலும் உடல் போதுமான நீரேற்றத்துடன் இருப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும் கடினமான, வறண்ட மலத்தைத் தடுக்க உதவுகிறது. எனவே தினந்தோறும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீரைக் குடிக்க வேண்டும். மேலும் உடலுக்கு நீரேற்றத்தை அளிக்கும் சில வகை பானங்களை அருந்தலாம்.
நார்ச்சத்து உட்கொள்ளல்
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மலத்தை எளிதாக வெளியேறச் செய்கிறது. அதன் படி, ஓட்ஸ் மற்றும் ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. மேலும் சியா விதைகள் போன்ற விதைகளும் அதிக நார்ச்சத்துக்கள் கொண்டதாகும். இவை தண்ணீரை உறிஞ்சி ஜெல்லை உருவாக்குகிறது. அதே சமயம், முழு தானியங்கள் மற்றும் காய்கறிகளில் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை செரிமானப் பாதை வழியாக மலத்தை நகர்த்த உதவுகிறது.
வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்
தினந்தோறும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழச்சாறு சேர்த்து அருந்துவது செரிமானத்தை தூண்டுகிறது. இந்த எலுமிச்சை சாறு பித்த உற்பத்தியை ஊக்குவிக்கவும், செரிமான அமைப்பு மூலம் உணவை நகர்த்தவும் உதவுகிறது. மேலும், வெதுவெதுப்பான நீர் உட்கொள்வது குடல் இயக்கத்தை ஆதரிக்கவும், செரிமான மண்டலத்தை தளர்த்தவும் உதவுகிறது
உடல் செயல்பாடு
இன்றைய உட்கார்ந்த வாழ்க்கை முறை பலருக்கும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே தினந்தோறும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் இந்த பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நடைபயிற்சி அல்லது மென்மையான யோகா போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது குடல் செயல்பாட்டை ஆதரித்து மலச்சிக்கல்லை நீக்குகிறது. உடற்பயிற்சி செய்வது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்டுகிறது. மேலும், குடல்களின் சீரான இயக்கத்தை ஊக்குவிக்கிறது. எனவே வாரத்தின் பெரும்பாலான நாட்களில் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியமாகும். இது மலச்சிக்கல் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Constipation Home Remedy: மலச்சிக்கல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் வீட்டு வைத்தியம்!
கற்றாழை சாறு
கற்றாழை சாற்றை சிறிதளவு உட்கொள்வதன் மூலமே மலச்சிக்கலைப் போக்க முடியும். இதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள இயற்கையான மலமிளக்கிய பண்புகளே ஆகும். இது குடலில் உள்ள நீரின் அளவை அதிகரித்து, மூலம் குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. எனினும், உடலின் உட்புற பயன்பாட்டிற்காக ஒரு பொருளை எடுத்துக் கொள்ளும் முன் அதற்கான பரிந்துரைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஆளி விதைகள்
ஆளி விதைகள் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். உணவில் அரைத்த ஆளிவிதைகளைச் சேர்ப்பதன் மூலம், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற முடியும். மேலும், ஆளி விதைகள் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இரண்டையுமே வழங்குகிறது. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மலச்சிக்கல்லை போக்குகிறது. அரைத்த ஆளிவிதைகளை நம் அன்றாட உணவில் தயிர், ஓட்ஸ், ஸ்மூத்திகள் அல்லது ஓட்மீல் போன்றவற்றில் சேர்க்க வேண்டும். இவை ஊட்டச்சத்துக்களை மேம்படுத்துவதுடன், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
மெக்னீசியம் நிறைந்த உணவுகள்
மெக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது குடல் தசைகளை தளர்த்தவும், மலச்சிக்கல்லை எளிதாக்கவும் உதவுகிறது. எனவே மக்னீசியம் நிறைந்த நட்ஸ், விதைகள் மற்றும் இலை கீரைகள் போன்ற உணவுகளை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது தவிர, மெக்னீசியம் உள்ள உணவுகள் ஒட்டுமொத்த தசை செயல்பாட்டை மேம்படுத்தி, வழக்கமான குடல் இயக்கங்களுக்கு வழிவகுக்கிறது.
இவ்வாறு எளிமையான வீட்டு வைத்தியங்களின் உதவியுடன், மலச்சிக்கல்லை விரைவில் போக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Constipation Remedies: மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்க இந்த இரண்டு பொருள் போதும்
Image Source: Freepik