தீராத மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியா? இந்த யோகாசனம் செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
தீராத மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியா? இந்த யோகாசனம் செய்யுங்க


Best yoga poses to relieve constipation: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை ஆரோக்கியமான உணவுடன் உடல் செயல்பாடுகளும் முக்கியமானதாகும். எனவே தான் தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. ஆனால், இன்றைய மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்குப் பலதரப்பட்ட பிரச்சனைகளைத் தருகிறது. இதில் மலச்சிக்கல் பிரச்சனையும் அடங்கும். யோகா செய்வது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு நன்மை பயக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் மலச்சிக்கலைப் போக்க உதவும் யோகாசனங்கள் சிலவற்றைக் காணலாம்.

மலச்சிக்கல் தீர யோகாசனங்கள்

மர்ஜாரியாசனம் - பிடிலாசனம் (Marjaryasana-Bitilasana)

இந்த ஆசனம் கேட்-கவ் போஸ் என்றழைக்கப்படுகிறது. கேட்-கவ் போஸ் செய்யும் போது வயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டத்தைத் தூண்ட உதவுகிறது. மேலும், இந்த ஆசனத்தில் உள்ள இயக்கம் செரிமான உறுப்புகளை மசாஜ் செய்ய உதவுகிறது. இதன் மூலம் மலச்சிக்கலைக் குறைக்கவும், செரிமான செயல்முறையை மேம்படுத்தவும் வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Yoga For Skin: முகம் சுருக்கம் இல்லாம சைனிங்கா மாறணுமா? இந்த யோகா டெக்னிக் ஃபாலோ பண்ணுங்க

பலாசனா (Balasana)

குழந்தை போஸ் என்றழைக்கப்படும் இந்த ஆசனம் செய்யும் போது, அடிவயிற்றை மெதுவாக அழுத்தி, செரிமானத்தைத் தூண்டுகிறது. மேலும் மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் முன்னோக்கி நாம் மடக்கும் போது, அடிவயிற்றை மெதுவாக அழுத்தினால், அது உள் உறுப்புகளை மசாஜ் செய்ய உதவுகிறது. இதன் மூலம் கட்டமைக்கப்பட்ட பதற்றத்தை விடுவிக்க உதவுகிறது.

பவன்முக்தாசனம் (Pawanmuktasana)

இந்த ஆசனம் ஆனது விண்ட் ரிலீவிங் போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பவன்முக்தாசனத்தில் வயிற்றுப் பகுதியில் மென்மையான அழுத்தத்தைப் பயன்படுத்துவதன் மூலம் செரிமான அமைப்பைத் தூண்ட உதவுகிறது. இதில் முதுகில் படுத்து, மார்பை நோக்கி ஒரு முழங்காலை இழுத்து, பக்கங்களை மாற்றுவதற்கு முன் சில சுவாசங்களை வைத்திருக்க வேண்டும். இது சிக்கிய வாயுக்கள் வெளியேற்றப்பட்டு குடலியக்கத்தை ஆதரிக்கிறது.

மலாசனா (Malasana)

கார்லண்ட் போஸ் என்றழைக்கப்படும் இந்த ஆசனத்தில் வயிற்றுப் பகுதியை அழுத்தி செய்யப்படுகிறது. இவை செரிமானத்தைத் தூண்டி, மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. இந்நிலையில் உட்காருவது பெருங்குடலை சீரமைப்பதன் மூலமும், குடல்கள் கழிவுகளை திறமையாக நகர்த்துவதற்கான இடத்தை உருவாக்குகிறது. இவை ஆரோக்கியமான வெளியேற்றத்திற்கு உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: Yoga for constipation: மலச்சிக்கலில் இருந்து உடனே நிவாரணம் பெற இந்த ஒரு யோகாசனம் போதும்!

தனுராசனம் (Dhanurasana)

பௌவ் போஸ் என்றழைக்கப்படும் இந்த தனுராசனம், செரிமானத்திற்கு உதவும் வயிற்று தசைகள் உட்பட உடலின் முழு முன் பகுதியையும் நீட்ட ஏதுவாக அமைகிறது. மேலும், இந்த ஆசனத்தில் மார்பு மற்றும் கால்களைத் தூக்கும் போது, வயிற்றில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு செரிமான உறுப்புகளைத் தூண்டி, மலச்சிக்கல்லைப் போக்க உதவுகிறது. இவை காலப்போக்கில் குடல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.

சேது பந்தாசனம் (Setu Bandhasana)

பிரிட்ஜ் போஸ் என்றழைக்கப்படும் இந்த போஸ் ஆனது வயிற்று தசைகளை மெதுவாக நீட்டவும், செரிமான மண்டலத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த ஆசனத்தில் இடுப்பை உயர்த்துவதன் மூலம் குடல்களை மசாஜ் செய்ய உதவுகிறது. மேலும் இவை செரிமானத்தைத் தூண்டுகிறது. இவ்வாறு மையத்தை வலுப்படுத்தும் போது மலச்சிக்கல்லில் இருந்து நிவாரணம் தருகிறது.

பச்சிமோத்தாசனம் (Paschimottanasana)

இந்த ஆசனம் உட்கார்ந்த முன்னோக்கி வளைவு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தில் அடிவயிற்றை அழுத்தும் போது முழு பின்புறத்தையும் நீட்ட உதவுகிறது. இதன் மூலம் செரிமான உறுப்புகளைத் தூண்டவும், குடல்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இவ்வாறு சிறந்த செரிமானம் மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தர உதவுகிறது.

இந்த வகை யோகாசனங்களின் உதவியுடன் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து எளிதில் நிவாரணம் பெறலாம். எனினும், புதிதாக யோகாசனங்கள் செய்பவர்கள், யோகாசிரியர்களின் முன்னிலையில் செய்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Yoga For Constipation: மலச்சிக்கலை போக்கும் யோகாசனங்கள்!

Image Source: Freepik

Read Next

Yoga for Hair: முடி உதிர்வைக் குறைத்து ஸ்ட்ராங்கான முடியைப் பெற இந்த யோகாசனம் செய்யுங்க!

Disclaimer