Benefits of eating bael leaves for constipation relief: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனையும் அடங்குகிறது. இதற்கு பலர் வீட்டு வைத்தியங்களைக் கையாள்கின்றனர். எனினும், மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனையிலிருந்து விடுபட சில விதைகளும் உதவுகின்றன. இந்த வரிசையில் வில்வ இலைகளும் அடங்கும். இந்த வில்வ இலைகள் அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக நன்கு அறியப்படுகிறது.
இவை உடல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய நன்மை பயக்கும் பல பண்புகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் வில்வ இலைகளில் அதிகம் உள்ளது. மேலும் இதனுடன் கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்களும் அதிக அளவில் காணப்படுகின்றன. நல்ல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட வில்வ இலையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.
வில்வ இலை
ஆயுர்வேதத்தில், வில்வ இலையை ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகக் கூறலாம். பல்வேறு ஆரோக்கிய பண்புகளைக் கொண்ட வில்வ இலையை சரியான அளவிலும், சரியான முறையிலும் எடுத்துக் கொள்வதன் மூலம் அது வயிறு தொடர்பான பல பிரச்சினைகளைக் குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: சம்மரில் அசிடிட்டி பிரச்சனையா? விரைவில் விடுபட நிபுணர் சொன்ன இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க
எப்படி உட்கொள்வது?
நல்ல பலன்களைப் பெற, காலையில் வெறும் வயிற்றில் இரண்டு வில்வ இலைகளை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு உட்கொள்வது சில வாரங்களிலேயே பலன்களைக் காணலாம். வில்வ இலைகள் உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தையும் சிறந்த முறையில் பராமரிக்கிறது.
வயிறு தொடர்பான பிரச்சனைகள்
அஜீரணம், வாய்வு, அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் இன்னும் பிற வயிறு சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு வில்வ இலையின் மருத்துவ குணங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இவை வயிற்றை சுத்தப்படுத்தி மலச்சிக்கலைப் போக்க பெரிதும் உதவுகின்றன.
வில்வ இலைகளின் மற்ற நன்மைகள்
வில்வ இலைகளில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நமது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக, இது கடுமையான மற்றும் ஆபத்தான இதயம் தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்க பெரிதும் உதவுகிறது. இது கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு - இதய பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். இந்நிலையில், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த வில்வ இலைகளை உட்கொள்வது இதய நோய்களைத் தடுக்கவும், இதய தசைகளை பலப்படுத்தவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.
நீரிழிவு நோய்க்கு - வில்வ இலையில் காணப்படும் நார்ச்சத்துக்கள் மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: சுட்டெரிக்கும் வெயிலில் குளுகுளுனு இருக்க நிபுணர் சொன்ன இந்த மூன்றை மட்டும் எடுத்துக்கோங்க
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க - காலையில் குறிப்பாக வெறும் வயிற்றில் வில்வ இலைகளை உட்கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இதன் மூலம் பல்வேறு நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
வில்வ இலைகளை எப்படி உட்கொள்வது?
வில்வ இலைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும். குறிப்பாக, வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று இலைகளைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த இலைகளை நன்றாகக் கழுவி, அதிலிருந்து கஷாயத்தைத் தயார் செய்யலாம். இதைத் தேனுடன் சேர்ப்பது கூடுதல் நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Vilvam Fruit Benefits: வில்வ பழத்தில் உள்ள இந்த நன்மைக்காக நீங்க இத கட்டாயம் சாப்பிடணும்
Image Source: Freepik