Vilvam Fruit Benefits: வில்வ பழத்தில் உள்ள இந்த நன்மைக்காக நீங்க இத கட்டாயம் சாப்பிடணும்

  • SHARE
  • FOLLOW
Vilvam Fruit Benefits: வில்வ பழத்தில் உள்ள இந்த நன்மைக்காக நீங்க இத கட்டாயம் சாப்பிடணும்


Vilvam Fruit Health Benefits: வில்வம் என்பதற்கு உயிர் என்று பொருள். வில்வம் பழத்தில் உயிரைப் பாதுகாக்கக்கூடிய பிராணசத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. வில்வ பழத்தினை உட்கொள்வது மனித உடலின் நரம்புகளில் இரத்த அலைகளில் உருவாகும் ஏற்ற இறக்கத்தை சரிசெய்து, உடலை ஆரோக்கியமாகவும், மேனியை அழகாக வைக்கவும் வைக்க உதவுகிறது. அதே போல கொளுந்து வில்வ இலைகள் பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைக்குத் தீர்வு தருகிறது.

அதன் படி, பெண்கள் தங்களது மூன்ற் முதல் ஐந்து நாள்கள் வரை தினமும் காலையில் குளித்த பிறகு ஒரு சுண்டைக்காய் அளவிலான வில்வக் கொழுந்தை எடுத்து அரைத்து பாலில் கலந்து குடிக்கலாம். இது மாதந்தோறும் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும் ஆண்களின் விந்தணுவில் உயிரணுக்களைச் சேர்ப்பதற்கு வில்வ இலைகளைப் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Benefits Of Chewing Food: நொறுங்கத் தின்றால் நூறு வயது.! சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌…

வில்வ பழத்தின் ஊட்டச்சத்துக்கள்

வில்வ பழத்தில் ரைபோஃப்ளேவின், பீட்டா கரோட்டின், புரதம், மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி1 மற்றும் பி2, தயாமின், நியாசின், கரோட்டின் போன்றவையும் நிறைந்து காணப்படுகிறது. இது தவிர, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் மற்றும் நல்ல அளவிலான தாதுக்களும் நிறைந்துள்ளது. கூடுதலாக, இதில் நல்ல கொழுப்புகள் காணப்படுகிறது.

வில்வ பழத்தில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இது மருத்துவ மற்றும் சிகிச்சை பண்புகளுக்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆயுர்வேதம், சித்தா மற்றும் பிற மாற்று மருந்துகளில் பயன்பாடுகளில் காணப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Health Benefits of Garlic: தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

வில்வ பழம் சாப்பிடுவதன் நன்மைகள்

  • நாம் உண்ணும் உணவுகள் அன்றாடம் செரிக்கும் போதே உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆனால் சில வகை உணவுகள் உடலில் சீற்றங்கள் ஏற்பட்டு அஜீரணங்களை உண்டாக்கி குடல் ஆரோக்கியத்தின் நலனைக் கெடுக்கிறது. இந்த பிரச்சனையை வில்வம் பழத்தை உட்கொள்வதன் மூலம் எளிதாகத் தீர்த்து விடலாம்.
  • உணவு சரியாக செரிமானம் அடையாமல் சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம். இதற்கு நிவாரணம் அளிக்கும் விதமாக வில்வ பழத்தின் ஓடு மற்றும் விதையை நீக்கி விட்டு சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் பால், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து சர்பத் தயார் செய்து எடுத்துக் கொள்ளலாம்.
  • காது நோய்களுக்கு வில்வ இலையை நல்லெண்ணெயில் காய்ச்சி காதில் விடலாம். மேலும் வில்வ பழத்தின் பாகு தயாரித்து தினந்தோறும் தண்ணீரில் ஓரிரு டீஸ்பூன் கலந்து அருந்தலாம்.
  • வில்வ பழங்களில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இது மாரடைப்பு ஏற்படாமல் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது. இது நீண்ட நாள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
  • உளவியல் ரீதியாக அதிலும் முக்கியமாக மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வில்வம் ஒரு தலைசிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. வில்வ இலையை நன்கு கொதிக்க வைத்து கஷாயமாக செய்து சாப்பிடுவது மன அழுத்தத்தைப் படிப்படியாகக் குறைக்க உதவுகிறது.
  • வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வில்வ இலைகள் சிறந்த தேர்வாகும். இந்த நேரத்தில் வில்வ பழத்தோடு பனங்கற்கண்டு சேர்த்து சாறாக அருந்தி வருவது வயிற்றுப் பிரச்சனைகளை எளிதில் தீர்க்க உதவுகிறது.

இவ்வாறு பல்வேறு வழிகளில் வில்வ இலைகளில் நிறைந்துள்ள மருத்துவ பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Palada Pradhaman Recipe: கேரளா ஸ்டைல் பாலடை பிரதமன் ரெசிபி இங்கே..

Image Source: Freepik

Read Next

Roasted Garlic Benefits: பூண்டை வறுத்து சாப்பிட்டா இவ்ளோ நன்மையா?!

Disclaimer