$
Health Benefits Of Eating Lychee Fruit: கோடைக்காலம் என்றாலே பழங்களின் மீதான நாட்டம் அதிகரித்தே காணப்படும். இந்த காலகட்டத்தில் உடலை நீரேற்றமாக வைக்க நிறைய பழங்களை எடுத்துக் கொள்வர். அதே சமயம் இந்த பழங்கள் உடலை நீரேற்றமாக வைப்பதுடன், உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. அந்த வகையில் லிச்சி பழம் சிறந்த கோடைக்கால பழங்களில் ஒன்றாகும்.
லிச்சி பழம் இந்தியாவில் அனைத்தும் பகுதிகளிலும் பரவலாகக் கிடைக்கும் பழமாகும். இதை புதியதாகவோ அல்லது ஐஸ்கிரீம்கள், பழச்சாறுகள் போன்ற வடிவிலோ எடுத்துக் கொள்ளலாம். இதன் இனிப்பு சுவை அனைவரையும் மீண்டும் கேட்கத் தூண்டும். மேலும் இந்த பழத்தின் உயர் நீர் உள்ளடக்கம் காரணமாக கோடைக்காலத்தில் எடுத்துக் கொள்வது பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Cranberries Benefits: குருதிநெல்லியை சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்!
லிச்சி பழம் சாப்பிடுவதன் நன்மைகள்
அதிகளவு வைட்டமின் சி
லிச்சி பழத்தில் அதிகளவிலான வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை தினசரி உட்கொள்வதன் மூலம் 9% வைட்டமின் சி சத்துக்கள் உடலுக்குக் கிடைப்பதாக நம்ப முடிகிறது. மேலும், இந்த வைட்டமின் சி உட்கொள்ளலின் மூலம் உடலில் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 42% ஆகக் குறைக்கிறது.
கொழுப்பைக் குறைக்க
பொதுவாக லிச்சி பழம் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதன் மூலம் உடல் பருமன் பிரச்சனையைத் தவிர்க்கலாம். கணையம் வெளியிடும் லிபேஸ் என்சைம் கொழுப்பை வேகமாக உறிஞ்சும் தன்மையைக் கொண்டுள்ளதால், இதை கட்டுப்படுத்தும் தன்மையானது லிச்சி பழத்தில் நிறைந்துள்ளது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த லிச்சி
மற்ற பழங்களை விட லிச்சி பழத்தில் அதிகளவிலான பாலிபினால்கள் நிறைந்துள்ளன. இந்த பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நீரிழிவு மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் எபிகாடெச்சினின் களஞ்சியமாக விளங்குகிறது.
மேலும் லிச்சி பழத்தில் ருட்டின் அதிகளவு உள்ளது. இவையும் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் பிற இதய பிரச்சனைகள் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க ஏதுவாக அமைகிறது.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு
உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும், மெட்டபாலிசத்தை சீராக்கவும் கல்லீரல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க லிச்சி பழம் பெரிதும் உதவுகிறது. இதற்கு லிச்சி பழத்தில் பாலிபினால்கள் நிறைந்திருப்பதே காரணமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Stomach Bloating: இந்த பழங்களை சாப்பிட்டா வயிறு உப்புசமா இருக்குமாம்! வயிறு வீக்கத்தைத் தடுக்க என்ன செய்வது?
இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க
இதய நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளாக அமைவது உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிரோஸ்கிளிரோஸ் போன்றவை ஆகும். இதில் குறிப்பாக, அதிரோஸ்கிளிரோஸ் என்பது இரத்தக் குழாய்களில் கொழுப்பை அதிகரிக்கும் பிரச்சனையின் காரணமாக ஏற்படுவதாகும். இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க லிச்சி பழம் பெரிதும் உதவுகிறது. இதற்கு லிச்சியில் உள்ள ஃபெனோலிக் என்ற பண்பே காரணமாகும். இவை இரத்த அழுத்தத்தை குறைக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் அடர்த்தியைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
மூளை ஆரோக்கியத்திற்கு
லிச்சி பழத்தில் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவக்கூடிய ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. லிச்சியின் விதைகள் மூளை பாதிப்பான அல்சைமர் நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் நிறைந்துள்ளது. எனவே, மூளை செயல்பாடுகளில் ஏதேனும் பாதிப்பைக் கொண்டவர்கள் லிச்சி பழம் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரலாம்.

புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்க
பல்வேறு ஆய்வுகளில் லிச்சி பழம் உட்கொள்வது புற்றுநோய் பாதிப்புகளைத் தவிர்க்க உதவுவதாகக் கூறப்படுகிறது. லிச்சி பழமானது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. அதன் படி, நுரையீரல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், குறிப்பாக மார்பக புற்றுநோய் செல்களைத் தடுக்க உதவுகிறது.
இவ்வாறு லிச்சி பழத்தின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலவைகள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளிலிருந்து நம்மை விடுவிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Hibiscus Flower Benefits: கொலஸ்ட்ரால் முதல் புற்றுநோய் வரை! செம்பருத்தி பூ தரும் அதிசய நன்மைகள்
Image Source: Freepik