Manathakkali palam benefits: மகத்துவம் நிறைந்த மணத்தக்காளி பழம்! இது தெரிஞ்சா நீங்க தினமும் சாப்பிடுவீங்க

What are the benefits of eating elderberries: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கீரை வகைகளில் மணத்தக்காளி கீரையும் ஒன்று. மணத்தக்காளி இலைகள் மட்டுமல்லாமல், இதன் பழங்களும் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் அன்றாட உணவில் மணத்தக்காளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Manathakkali palam benefits: மகத்துவம் நிறைந்த மணத்தக்காளி பழம்! இது தெரிஞ்சா நீங்க தினமும் சாப்பிடுவீங்க


Health benefits of eating elderberries: நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் மிக்க காய்கறிகள், பழங்கள், கீரைகள், விதைகள், நட்ஸ் மற்றும் பானங்கள் போன்ற பல்வேறு உணவுமுறைகளைக் கையாள்வது அவசியமாகும். அவ்வாறு, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் கீரை வகைகளில் மணத்தக்காளி கீரையும் ஒன்று. மணத்தக்காளியைப் பொறுத்த வரை அதன் இலைகள் மட்டுமல்லாமல், அதன் பழங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எல்டர்பெர்ரி என்றழைக்கப்படும் இந்த மணத்தக்காளி பழம் பல நூற்றாண்டுகளாகவே பல்வேறு மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக மணத்தக்காளி பழம் மிகவும் பொதுவான மருத்துவ தாவரங்களில் ஒன்றாகும். எனவே இது காய்ச்சல், வாத நோய், தொற்று, சியாட்டிகா மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க நாட்டுப்புற மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, எல்டர்பெர்ரி சப்ளிமெண்ட்ஸ் ஆனது சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதில் மணத்தக்காளி பழத்தை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: முடக்கத்தான் கீரையை இப்படி சாப்பிட்டா மூட்டு வலி மட்டுமல்ல இந்த பிரச்சனையும் வராதாம்!

மணத்தக்காளி பழம்

எல்டர்பெர்ரி என்ற மணத்தக்காளி பழம் அடோக்சேசி குடும்பத்தில் ஒரு பூக்கும் தாவரமான சாம்புகஸ் மரத்தின் பல வகைகளைக் குறிக்கிறது. இதன் மிகவும் பொதுவான வகை சாம்புகஸ் நிக்ரா வகையாகும். இது கருப்பு எல்டர்பெர்ரி அல்லது ஐரோப்பிய எல்டர்பெர்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஐரோப்பாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த எல்டர்பெர்ரி பழங்கள் ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த எல்டர்பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. எனவே இது இன்ஃப்ளூயன்ஸாவின் அறிகுறிகள் உட்பட வலி மற்றும் நோய்களைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் உதவுகிறது.

மணத்தக்காளி பழத்தின் ஊட்டச்சத்துக்கள்

மணத்தக்காளி பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி, கால்சியம், இரும்பு, நார்ச்சத்துக்கள், புரதம், கார்போஹைட்ரேட்டுகள், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மணத்தக்காளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஹெல்த் வலைதளத்தில் குறிப்பிட்ட படி, எல்டெர்ப்பெர்ரியில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், கீழே குறிப்பிடப்பட்ட சாத்தியமான நன்மைகளைத் தருகிறது.

அதிகளவு வைட்டமின் சி நிறைந்த

ஒரு கப் அளவிலான மணத்தக்காளி பழத்தில் 52.2 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளதாகக் கூறப்படுகிறது. இது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பை மேம்படுத்தவும், தசைகளை மீட்டெடுக்கவும் உதவுகிறது. மேலும், வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் திசு சரிசெய்தல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை மாற்ற உதவுகிறது. இது தவிர, வைட்டமின் சி செல்லுலார் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. குறிப்பாக, இந்த வைட்டமின் சி ஊட்டச்சத்து உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியம் முதல்.. சர்க்கரை மேலாண்மை வரை.. மணித்தக்காளி ஜூஸ் செய்யும் அற்புதங்கள் இங்கே..

இரத்த சர்க்கரை மேலாண்மைக்கு

எல்டர்பெர்ரி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழமாகும். இது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த பழத்தில் உள்ள பாலிபினால்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்கள் போன்றவை குளுக்கோஸை மிகவும் திறமையாக செயலாக்க உடலுக்கு உதவுகிறது. இது குளுக்கோஸை நிர்வகிப்பதற்கும் அதை சமநிலையில் வைத்திருப்பதற்கும் எல்டர்பெர்ரியை பயனுள்ளதாக மாற்றுகிறது.

வீக்கம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க

எல்டர்பெர்ரியில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் நிறைந்துள்ள பாலிஃபீனால் ஃபிளாவனாய்டுகள் மூளையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இவை இரண்டுமே மன ஆரோக்கியத்தை சாதகமாக பாதிக்கக் கூடியதாகும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த

மணத்தக்காளி பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது குறைக்கவும் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. மேலும், இதில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளடக்கத்தின் காரணமாக இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இது கொலஸ்ட்ராலை பிணைத்து உடலிலிருந்து வெளியேற்றுவதாகக் கூறப்படுகிறது. இது இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. ஏனெனில், இரத்தத்தில் யூரிக் அமில அளவுகள் உயர்ந்து இருப்பது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Manathakkali keerai: நோய்களை விரட்டும் மணத்தக்காளி கீரை.. நன்மைகள் இங்கே..

Image Source: Freepik

Read Next

Garlic Oil: யாரும் அறிந்திடாத பூண்டு எண்ணெயின் 8 நிரூபிக்கப்பட்ட ஆரோக்கிய நன்மைகள்!

Disclaimer