முடக்கத்தான் கீரையை இப்படி சாப்பிட்டா மூட்டு வலி மட்டுமல்ல இந்த பிரச்சனையும் வராதாம்!

  • SHARE
  • FOLLOW
முடக்கத்தான் கீரையை இப்படி சாப்பிட்டா மூட்டு வலி மட்டுமல்ல இந்த பிரச்சனையும் வராதாம்!


குறிப்பாக, மூட்டு வலிக்கு முடக்கத்தான் கீரை ஒரு அருமருந்து என்றே கூறலாம். மூட்டு வலி மட்டுமல்லாமல், சளி, இருமல், வீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது. இது போன்ற பல்வேறு நன்மைகளைத் தரும் முடக்கத்தான் கீரையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே உட்கொள்ளலாம். இது உட்புறம், வெளிப்புறம் இரண்டிலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் முடக்கத்தான் கீரையை எவ்வாறு பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது என்பதையும், அதை எவ்வாறு உட்கொள்ளலாம் என்பது குறித்தும் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hibiscus Tea Benefits: உடலின் ஒட்டுமொத்த நன்மைகளையும் பெற செம்பருத்தி டீ ஒன்னு போதும்!

முடக்கத்தான் கீரை சாப்பிடும் முறை மற்றும் அதன் நன்மைகள்

மூட்டு வலி குணமாக

முடக்கத்தான் கீரை மூட்டு வலியைக் குணமாக்க உதவும் ஒரு சிறந்த மூலிகையாகும். எனவே மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் முடக்கத்தான் தோசை உட்கொள்ளலாம். இதனைத் தயார் செய்வதற்கு, மாவுடன் இரண்டு கைப்பிடியளவு முடக்கத்தான் கீரை, சீரகம் மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த மாவை தோசையாக ஊற்றி சாப்பிடலாம். இத்தகைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முடக்கத்தான் தோசையை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். இது மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிட்டிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்குச் சிறந்த தேர்வாகும்.

சளி, இருமல் குணமாக

சளி, இருமல் போன்ற சுவாசக்கோளாறு பிரச்சனைகளுக்கு முடக்கத்தான் கீரை ஒரு சிறந்த தேர்வாகும். இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட முடக்கத்தான் கீரை சூப் தயார் செய்யலாம். இந்த சூப் தயார் செய்வதற்கு முதலில் மிளகு, சீரகம், 2 பல் பூண்டு போன்றவற்றை தட்டி எடுத்துக் கொள்ளலாம். பின் இதை கடாய் ஒன்றில் சேர்த்து வதக்கி, சிறிதளவு நெய் சேர்க்க வேண்டும். அதன் பிறகு இரு கைப்பிடியளவு முடக்கத்தான் கீரையை சேர்க்கலாம். இலைகள் நன்கு வதங்கிய பிறகு, தண்ணீர் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்கலாம். சிறிது நேரம் வைத்து அடுப்பிலிருந்து இறக்கினால், சூடான சூப் தயாராகி விட்டது. குழந்தைகளுக்கு சளி ஏற்பட்டால், இந்த சூப் கொடுக்கலாம். இது சளியிலிருந்து உடனடி நிவாரணம் தருகிறது.

ஆர்த்ரிட்டிஸ் குணமாக

முடக்கத்தான் கீரையைத் துவையலாக உட்கொள்வதன் மூலம் ஆர்த்ரிட்டிஸைக் குணமாக்கலாம். இந்த துவையலை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இந்த துவையல் தயார் செய்ய கடாய் ஒன்றில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் வரமிளகாய், உளுந்து போன்றவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு முடக்கத்தான் கீரையைச் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின், அரை கப் தேங்காய் துருவல், புளி சிறிதளவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த துவையலை சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டால் ஆர்த்ரிட்டிஸ் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: பற்களுக்கு பலம் தரும் பொரிவிளங்கா உருண்டை! உங்க வீட்டில் இப்படி ஈஸியா செய்யுங்க

முடக்கத்தான் கீரையில் வெளிப்புற பயன்பாடு

மூட்டு வலிக்கு முடக்கத்தான் கீரை எண்ணெய்

முடக்கத்தான் இலைகளை விளக்கெண்ணெயில் சேர்த்து காய்ச்சி, நன்றாக வதக்க வேண்டும். பின் அதை வெள்ளை பருத்தி துணியில் கட்டி பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க, வலியிலிருந்து விடுபடலாம்.

தலைமுடி ஆரோக்கியத்திற்கு

தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த முடக்கத்தான் கீரை எண்ணெயை நல்லெண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி தயார் செய்யலாம். இந்த எண்ணெயைத் தலையில் அரிப்பு உள்ள இடங்களில் அடிக்கடி தடவி வர, அரிப்பு நீங்கும். மேலும், இந்த கீரையை வேகவைத்த தண்ணீரில் சேர்த்து, அந்த தண்ணீரைக் கொண்டு தலையை அலசுவதன் மூலம் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

முடக்கத்தான் கீரையின் நன்மைகள்

  • பொதுவாக குளிர்காலத்தில் பெரிதும் பாதிக்கப்படும் வாத நோய்களுக்கு முடக்கத்தான் கீரை ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.
  • சொறி சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு முடக்கத்தான் கீரை பற்று வைக்க நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • காது வலி பிரச்சனைகளுக்கு முடக்கத்தான் கீரை உதவுகிறது.
  • தலைவலி பிரச்சனைகளுக்கும் முடக்கத்தான் கீரை மிகவும் நன்மை பயக்கும்.

இது போன்ற ஏராளமான நன்மைகளைப் பெற முடக்கத்தான் கீரை உதவுகிறது. எனவே நம் அன்றாட உணவில் முடக்கத்தான் கீரையைச் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் ஒரு ஸ்பூன் மொரிங்கா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

Image Source: Freepik

Read Next

தினமும் ஒரு ஸ்பூன் மொரிங்கா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

Disclaimer