Moringa Leaves For Hair Growth: இன்றைய மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் மாசு காரணமாக முடி உதிர்வு ஏற்படுகிறது. இதனை தடுக்க சந்தையில் கிடைக்கக்கூடிய பல பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இது தவிர வீட்டு வைத்தியத்தையும் முயற்சிக்கிறார்கள்.
முடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்க, நாங்களும் உங்களுக்கு ஒரு வழி சொல்கிறோம். கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க. முடி வளர முருங்கை கீரையை பயன்படுத்துங்கள். இது முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. முடி வளர்ச்சிக்கு முருங்கை கீரையின் நன்மைகள் என்ன? இதனை பயன்படுத்துவது எப்படி? என்பதை இங்கே காண்போம்.
முக்கிய கட்டுரைகள்

முடி வளர்ச்சிக்கு முருங்கை கீரையின் நன்மைகள் (Moringa Leaves Benefits For Hair )
முடி உதிர்வதைத் தடுக்கும்
முருங்கை கீரை இரும்புச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக திகழ்கிறது. இவற்றை முடியில் தடவுவதால் உங்கள் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அதிகரிக்கிறது, முடிக்கு தேவையான இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
முருங்கை கீரையில் வைட்டமின் ஏ, பி, சி, பயோட்டின் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இது மயிர்க்கால்களை ஆரோக்கியமாக வைத்து கொலாஜனை உற்பத்தி செய்கிறது. அவை கெரட்டின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்
முருங்கை கீரையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது முடியில் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் இது முடியின் அடர்த்தி மற்றும் pH அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது.
மேலும் முருங்கை கீரையில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் துத்தநாகங்கள் நிறைந்துள்ளன. இது முடி வறட்சியைத் தடுக்கிறது மற்றும் இயற்கையான ஈரப்பதத்தை பராமரிக்கிறது.
முடியின் வேர்க்கால்களை ஊக்குவிக்கும்
முருங்கை கீரை உங்கள் மயிர்க்கால்களை மேம்படுத்துவதில் மிகவும் நன்மை பயக்கும். இது உங்கள் சருமத்தை சமநிலைப்படுத்துவதன் மூலம் உங்கள் மயிர்க்கால்களை அதிகரிக்கிறது. இது முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
பொடுகுத் தொல்லையிலிருந்து நிவாரணம்
பொடுகு ஒரு பொதுவான முடி பிரச்சனை. ஆனால் அது எந்த நேரத்திலும் உங்களை சங்கடப்படுத்தலாம். பொடுகைச் சமாளிக்க முருங்கை கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கீரை முடிக்கு ஊட்டமளிக்கிறது. மேலும் இது முடியை வறட்சியடையாமல் காக்கிறது.
கூந்தல் பராமரிப்பில் முருங்கை கீரை எப்படி பயன்படுத்துவது? (How To Use Moringa Leaves For Hair)
* முருங்கை இலையை அரைத்து பேஸ்ட் தயார் செய்து, தேன் அல்லது ஏதேனும் அத்தியாவசிய எண்ணெயும் கலந்து தடவவும்.
* முருங்கை இலையை அரைத்து அதன் சாற்றை தலையில் தடவி வந்தால், உச்சந்தலை ஆரோக்கியமாக இருக்கும்.
* முருங்கை கீரை எண்ணெய் தடவிய பின் அரை மணி நேரம் கழுத்து முடியை அலசினால், முடி ஆரோக்கியமாக இருக்கும்.
* முருங்கை இலையின் பொடியை ஜோஜோபா அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து உச்சந்தலையில் ஆழமாக மசாஜ் செய்யவும். இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
Image Source: Freepik