How To Use Keerai For Hair Growth: அன்றாட வாழ்வில் கீரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறலாம். கீரையில் இரும்பு, புரதம், வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடல் ஆரோக்கியத்துடன், முடி ஆரோக்கியத்திற்கும் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
இந்த ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், மயிர்க்கால்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான கூந்தலைப் பெற விரும்புபவர்கள் கீரையை சிறந்த தேர்வாகக் கருதலாம். உணவில் கீரையை சேர்த்துக் கொள்வதால் முடிக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து, முடி வளர்ச்சிக்குக் கீரையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Black Cumin Seeds For Hair: கரு கரு அடர்த்தியான முடிக்கு கருஞ்சீரகத்தை இப்படி யூஸ் பண்ணுங்க
முடி வளர்ச்சிக்கு கீரை தரும் நன்மைகள்
ஃபோலேட் நிறைந்த கீரைகள்
வைட்டமின் B9 என்ற ஃபோலேட்டுகள் கீரையில் உள்ளது. இவை மயிர்க்கால்களை உருவாக்கும் செல்கள் உட்பட செல் பிரிவுக்கு முக்கியமானதாகும். ஃபோலேட் குறைபாடு முடி மெலிவதை வழிவகுக்கலாம்.
முடி வளர்ச்சியை ஊக்குவிக்க
பசலைக்கீரையில் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது மயிர்க்கால்களின் சரியான ஆக்ஸிஜனேற்றத்திற்கு உதவுவதுடன், ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் முடி உதிர்வைத் தடுக்கிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த
கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து மயிர்க்கால் மற்றும் உச்சந்தலையைப் பாதுகாக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Sesame Seeds Hair Mask: முடியை ஸ்ட்ராங்கா வைக்க உதவும் எள் விதை ஹேர் மாஸ்க். எப்படி பயன்படுத்துவது?
முடி வளர்ச்சிக்கு கீரையை பயன்படுத்துவது எப்படி?
முடி வளர்ச்சியை ஊக்குவிக்க சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் உதவுகின்றன. அவற்றில் சிலவற்றை இதில் காண்போம்.
கீரை சாறு
தேவையான பொருள்கள்
- தண்ணீர்
- கீரை
செய்முறை
புதிய கீரை சாற்றைக் குடிப்பதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். இதில் இரும்பு, ஃபோலேட், வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை நிறைந்துள்ளன. இவை அனைத்தும் முடி வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: Homemade Hibiscus Shampoo: நீளமா, அடர்த்தியா, மொத்தமா முடி வேணுமா? செம்பருத்தி ஷாம்பு யூஸ் பண்ணுங்க
கீரை மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்
தேவையான பொருள்கள்
- கீரை
- தயிர்
செய்முறை
- ஹேர் மாஸ்க்கைத் தயாரிக்க, வெற்று தயிருடன் கீரை ப்யூரியைக் கலக்கலாம்.
- இதை உச்சந்தலை மற்றும் முடிக்கு தடவி 20-30 நிமிடங்கள் வைத்து பின்னர் நன்கு கழுவி விடலாம்.
- கீரை மற்றும் தயிர் கலவையானது முடியை வலுப்படுத்துவதுடன், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
கீரை மற்றும் முட்டை ஹேர் மாஸ்க்
தேவையானவை
- கீரை
- முட்டை
செய்முறை
- முட்டை புரோட்டீன்கள் நிறைந்ததாகும். முட்டை மற்றும் கீரை ப்யூரியைக் கொண்ட கலவையைத் தயார் செய்யலாம்.
- பிறகு இந்த கலவையை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் நன்கு தடவி, 30 நிமிடங்கள் வைத்து பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு முடியைக் கழுவ வேண்டும்.
- இது முடிக்கு ஊட்டமளிப்பதுடன் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

கீரை ஹேர் மாஸ்க்
தேவையான பொருள்கள்
- கீரை
- தண்ணீர்
செய்முறை
- புதிய கீரையை சிறிதளவு நீரில் கலந்து மென்மையான ப்யூரியை உருவாக்க வேண்டும்.
- பின் இந்த கலவையை உச்சந்தலை மற்றும் முடிக்கு தடவி 30 நிமிடங்கள் வரை வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
- இது உச்சந்தலையில் ஊட்டமளித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இவ்வாறு முடி வளர்ச்சிக்கு கீரை பெரிதும் உதவுகிறது. மேலும் பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளைத் தடுக்கிறது. எனினும், கீரைக்கு ஒவ்வாமை எதிர்விளைவுகளை அனுபவிப்பர். எனவே பாதகமான எதிர்விளைவுகளைத் தடுக்க கீரையை முடி சிகிச்சைக்கு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் கீரையை அளவாக உட்கொள்ள வேண்டும் மற்றும் மற்ற உடல் நல பிரச்சனைகளைத் தவிர்க்க சுகாதார நிபுணரை அணுகி பயன்பெறுவது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Best Hair Shampoo: உங்க முடிக்கு ஏற்ற சரியான ஷாம்புவை எப்படி தேர்ந்தெடுப்பது? நிபுணர் தரும் விளக்கம்
Image Source: Freepik