Doctor Verified

Best Hair Shampoo: உங்க முடிக்கு ஏற்ற சரியான ஷாம்புவை எப்படி தேர்ந்தெடுப்பது? நிபுணர் தரும் விளக்கம்

  • SHARE
  • FOLLOW
Best Hair Shampoo: உங்க முடிக்கு ஏற்ற சரியான ஷாம்புவை எப்படி தேர்ந்தெடுப்பது? நிபுணர் தரும் விளக்கம்

இதில், பாராபென் என்பது அழகுசாதனப் பொருள்கள் மற்றும் உணவுத் தொழில்களில் பாதுகாப்புப் பொருள்களாகப் பயன்படுத்தப்படும் சேர்மங்களின் குழுவே ஆகும். இதற்கு கெமிக்கல் இல்லாத ஷாம்பூவைப் பயன்படுத்த வேண்டுமென நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இது முடிக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. மேலும் முடி ஈரப்பதமடைவதுடன், முடிக்கு ஊட்டமளிக்கவும் உதவுகிறது. தலைமுடிக்கு சரியான ஷாம்புவைத் தேர்வு செய்வது அவசியமாகும். இதில் தலைமுடிக்கு உகந்த ஷாம்புவைத் தேர்வு செய்யும் முறை குறித்து தாது மருத்துவ மையத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான தோல் மருத்துவர் நிவேதிதா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Mask For Straighten: தலைமுடி நேராக வளர இந்த ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க

தலைமுடிக்கு சரியான ஷாம்புவைத் தேர்வு செய்யும் முறை

தலைமுடி மற்றும் உச்சந்தலையின் வகையைப் பொறுத்து, சரியான ஷாம்புவைத் தேர்ந்தெடுப்பது எளிதாகும். இதில் முடிக்ஷாகு ஏற்ற ஷாம்பு தயார் செய்யும் முறை குறித்துக் காணலாம்.

எண்ணெய் முடி (Oily Scalp)

மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு முறை, மற்றும் அதிகரித்து வரும் மாசுபாடு போன்றவற்றால் முடி மற்றும் உச்சந்தலையில் மோசமான விளைவு ஏற்படலாம். ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தால் முடி மற்றும் உச்சந்தலையில் எண்ணெய் பசை ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபட, இஞ்சி சாறு கலந்த ஷாம்பூவைப் பயன்படுத்தலாம். இஞ்சி சாறு பயன்பாடு உச்சந்தலையில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை நிறுத்தி. முடியை பட்டுப் போல தோற்றமளிக்க வைக்கிறது.

உலர் உச்சந்தலை (Oily Scalp)

வறண்ட கூந்தல் அல்லது உச்சந்தலையைக் கொண்டிருப்பவர்கள், எந்த வகையான ஷாம்புவைத் தேர்ந்தெடுப்பது நல்லது தெரியுமா? ஷாம்புவில் கிளிசரின் இருக்கிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்க வேண்டும். ஏனெனில், கிளிசரின் நிறைந்த ஷாம்புகள் முடி மற்றும் உச்சந்தலையை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். மேலும் இது முடிக்கு ஊட்டமளிக்கிறது. இதன் மூலம் முடி வறட்சியை நீக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Hibiscus Shampoo: நீளமா, அடர்த்தியா, மொத்தமா முடி வேணுமா? செம்பருத்தி ஷாம்பு யூஸ் பண்ணுங்க

இரண்டும் கலந்த (Combination Scalp)

வறண்ட மற்றும் உலர் உச்சந்தலை இரண்டும் கலந்த கலவையே கூட்டு உச்சந்தலை எனப்படுகிறது. இந்த வகையில், உச்சந்தலை ஈரப்பதத்துடன் இருப்பது அவசியமாகும். இவை செய்யாவிடில், முடி வலுவிலந்து விழத் தொடங்கலாம். இந்த வகைக்கு, T-Treat Oil Zinc Zinc Pyrithione கலவையுடன் ஷாம்பூவைப் பயன்படுத்தலாம். இவை கூந்தலுக்கு நன்மை பயக்கும்.

கெமிக்கல் இல்லாத ஷாம்புவைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

கெமிக்கல் இல்லாத ஷாம்புவை பயன்படுத்துவதால் முடி வறட்சி நீங்கப்பெறும். இயற்கை பொருள்களால் செய்யப்பட்ட ஷாம்பூவைப் பயன்படுத்துவதன் மூலம் முடி ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும் இது முடி பிளவு முனைகளை நீக்குவதுடன், பொடுகைக் குறைக்கிறது.

ரசாயனக் கலவையான, சல்பேட் மற்றும் பாராபென் இல்லாத ஷாம்புகளைப் பயன்படுத்துவது உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவை முடியின் வேர்களை பலப்படுத்துவதுடன், முடியையும் பலப்படுத்துகிறது.

நீண்ட நேரம் கூந்தலில் இரசாயனங்கள் இருப்பது முடி உதிர்வை அதிகரிக்கலாம். இதற்கு மூலிகை ஷாம்பு பயன்படுத்துவது முடி உதிர்வைக் குறைப்பதுடன், இழந்த பளபளப்பையும் மீட்டெடுக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Sesame Seeds Hair Mask: முடியை ஸ்ட்ராங்கா வைக்க உதவும் எள் விதை ஹேர் மாஸ்க். எப்படி பயன்படுத்துவது?

Image Source: Freepik

Read Next

Yoga for Hair Growth: ஒரே வாரத்தில் முடி உதிர்வு குறைந்து தாறுமாறாக முடி வளர இந்த 2 யோகாவை செய்யுங்க!

Disclaimer