Dermatologist reveals the right hair washing routine: இன்றைய காலத்தில் மோசமான உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பாதிப்புகளும் அடங்கும். அதாவது முடி உதிர்வு, முடி உடைதல், வறட்சியான முடி மற்றும் நுனிமுடி பிளவு உள்ளிட்ட பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இது தவிர, தலைமுடியைப் பராமரிக்கும் போது, அனைவரும் எதிர்கொள்ளக்கூடிய மிகப்பெரிய குழப்பங்களில் ஒன்றாக ஷாம்பு பயன்படுத்துவது அடங்கும். ஆம். உண்மையில், மிகவும் சர்ச்சைக்குரிய கேள்விகளில் ஒன்றாக ஒருவர் எவ்வளவு அடிக்கடி தலைமுடியைக் கழுவ வேண்டும் என்பதே ஆகும்.
சிலர் தினமும் ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்துவதை நம்புகின்றனர். ஆனால், இன்னும் சிலர் வாரத்திற்கு இருமுறை ஷாம்பு பயன்படுத்துவதை வலியுறுத்துகின்றனர். இதில் எது சரியானது? எவ்வாறு செய்வது தலைமுடிக்கு பாதுகாப்பானது என்பது குறித்து தோல் மருத்துவரான குர்வீன் கரேக்கர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பகிர்ந்துள்ள குறிப்புகள் குறித்து விரிவாகக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Hair Loss: டெய்லி தலைக்கு குளித்தால் முடி உதிர்வு பிரச்சனை அதிகரிக்குமா? பத்தி இதோ!
தோல் மருத்துவரின் கூற்று
தோல் மருத்துவர் குர்வீன் கரேக்கர் அவர்களின் கூற்றுப்படி, “மக்கள் உச்சந்தலை மற்றும் முடி பராமரிப்பில் செய்யும் மிகவும் பொதுவான தவறு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?. அது ஷாம்பு செய்யும் அதிர்வெண் ஆகும். பொதுவாக, தலைமுடிக்கு அதிகமாக ஷாம்பு பயன்படுத்தும் போது முடி உதிர்தல் அல்லது முடி வளர்ச்சியுடன் எந்த தொடர்பும் இல்லை. இவை உச்சந்தலையின் வகை, செயல்பாட்டு நிலை, வானிலையை பாதிப்பு போன்ற காரணிகளைப் பொறுத்ததாகும் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வளவு நாளைக்கு ஒரு முறை ஷாம்பு செய்ய வேண்டும்?
குர்வீன் கரேக்கர் அவர்களின் கூற்றுப்படி, “ஒருவருக்கு வறண்ட உச்சந்தலை இருப்பின், அவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு செய்ய வேண்டும். எண்ணெய் பசையுள்ள உச்சந்தலைக்கு வாரத்திற்குக் குறைந்தது மூன்று முறை ஷாம்பு போட வேண்டும். இது மாற்று நாள்களில் இருக்கலாம். பொடுகு நிறைந்த முடிக்கு, ஒவ்வொரு நாளும் ஷாம்பு போட வேண்டும். தினசரி உடற்பயிற்சியின் போது, அதிக வியர்வையை எதிர்கொள்ளும் நபர்கள் தினமும் ஷாம்பு செய்ய வேண்டும்.
கூடுதலாக, ஒருவருக்கு வறண்ட உச்சந்தலை இருப்பின், அவர்கள் மென்மையான சல்பேட் இல்லாத ஷாம்புவைப் பயன்படுத்துவது அவசியமாகும். எண்ணெய் பசையுள்ள உச்சந்தலைக்கு, சல்பேட் ஷாம்புகள் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் பொடுகு இருந்தால், சாலிசிலிகோல் கொண்ட ஷாம்பூவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் அவர் கூறியதாவது, “தினசரி ஷாம்பு செய்வதற்கு, மென்மையான ஷாம்பு அல்லது தினசரி பயன்பாட்டிற்கான லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள ஷாம்புவைப் பயன்படுத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Hair Wash Mistakes: மழைக்காலத்தில் ஹேர் வாஷ் செய்யும் போது தவிர்க்க வேண்டியவை..
முடி மற்றும் உச்சந்தலையை பராமரிப்பதற்கு ஒரு சிந்தனைமிக்க அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்நிலையில், உச்சந்தலையின் வகையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப ஷாம்பு செய்யும் அதிர்வெண்ணை சரிசெய்ய வேண்டும். மேலும், உச்சந்தலையின் வகைக்கு ஏற்ப சரியான ஷாம்பூவைத் தேர்வு செய்ய வேண்டும். இது அவரவர்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டுபிடிக்கும் வரை பரிசோதனை செய்ய பயப்பட வேண்டாம். சரியான கவனிப்பு மற்றும் கவனத்துடன், எப்போதும் விரும்பும் ஆரோக்கியமான, அழகான முடியை அடையலாம்.
முடி மற்றும் உச்சந்தலைப் பராமரிக்க தோல் மருத்துவர் பரிந்துரைத்த வழிமுறைகளைக் கையாளலாம். இவை முடி ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது. இதனுடன், சீரான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கையாள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Daily hair washing: தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா? இதன் தீமைகள் இங்கே!
Image Source: Freepik