Hibiscus Shampoo Homemade In Tamil: இன்று பெண்கள் பலரும் விரும்புவது நீளமான, அடர்த்தியான கூந்தலைத் தான். இதனால் விரும்பிய முடியைப் பெற விரும்புபவர்கள் விலையுயர்ந்த ஷாம்புகளைப் பயன்படுத்துகின்றனர். அது மட்டுமல்லாமல் பெண்கள் தலைமுடியின் நீளத்தை அதிகரிக்க பல முடி பராமரிப்பு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.
ஆனால், இயற்கையான முறையில் தலைமுடியின் நீளத்தை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு செம்பருத்தி பூக்கள் மிகவும் நன்மை பயக்கும். செம்பருத்தி பூக்களால் தயாரிக்கப்படும் ஷாம்பூவைப் பயன்படுத்தலாம். சந்தைகளில் பல்வேறு செம்பருத்தி ஷாம்புக்கள் விற்பனை செய்யப்பட்டாலும் இயற்கையான முறையில் வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்துவது கூடுதல் நன்மையைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Black Cumin Seeds For Hair: கரு கரு அடர்த்தியான முடிக்கு கருஞ்சீரகத்தை இப்படி யூஸ் பண்ணுங்க
வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செம்பருத்தி ஷாம்புவின் நன்மைகள்
கூந்தலின் அழகை அதிகரிக்கவும், நீளமாக மற்றும் மென்மையாக வளரவும் செம்பருத்தி ஷாம்பு உதவுகிறது. செம்பருத்தி பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் ஷாம்புவைப் பயன்படுத்துவது முடி தொடர்பான பல பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.
- செம்பருத்தி பூக்களை உபயோகிப்பதால் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம்.
- செம்பருத்தி மலர் கொண்டு தயாரிக்கப்பட்ட ஷாம்பு உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
- இந்த ஷாம்புவைப் பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம். மேலும் உச்சந்தலையில் உள்ள தொற்றுக்களை நீக்கலாம்.
- மேலும் செம்பருத்தி ஷாம்பு முடியின் வேர்களை பலப்படுத்தி முடிக்கு ஊட்டமளிக்கிறது.
- செம்பருத்தி ஷாம்புவைப் பயன்படுத்துவது முடி வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Mask For Straighten: தலைமுடி நேராக வளர இந்த ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க
வீட்டிலேயே செம்பருத்தி ஷாம்பு செய்வது எப்படி?
வீட்டிலேயே எளிதான முறையில் செம்பருத்தி ஷாம்பு தயார் செய்யும் முறைகள் குறித்து காணலாம்.
- முதலில் செம்பருத்திப் பூக்களை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். விரும்பினால் செம்பருத்தி இலைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.
- இதனுடன் தண்ணீர் சேர்த்து 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- இதை பேஸ்ட்டாக செய்து கொள்கலனில் சேமித்துக் கொள்ளவும். இந்த ஷாம்புவை தலைமுடியில் பயன்படுத்தலாம்.
செம்பருத்தி பூக்களால் தயார் செய்யப்பட்ட ஷாம்பு முடியை மென்மையாக மற்றும் அழகாக மாற்ற உதவுகிறது. இது தவிர, முடி உதிர்தல் பிரச்சனைக்கும், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. எனினும் முடி தொடர்பான பிரச்சனை அதிகமிருப்பின் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்க உதவும் பூசணி விதை எண்ணெய். எப்படி பயன்படுத்துவது?
Image Source: Freepik