How to prepare vembalam pattai hair oil in tamil: ஆரோக்கியமான, நீளமான முடி வளர்ச்சியை விரும்பாதவர்கள் எவர் உள்ளனர். ஆனால், மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். இதனால் முடி உதிர்வு, வறட்சியான முடி மற்றும் இன்னும் பிற பிரச்சனைகளைச் சந்திக்கலாம். இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட சிலர் இரசாயனங்கள் நிறைந்த முடி பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இது சில சமயங்களில் பிரச்சனையை அதிகரிக்கலாம்.
இந்நிலையில், முடி சார்ந்த பராமரிப்புக்கு சில இயற்கையான வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம். அதன் படி, முடி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், முடி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் வேம்பாளம் பட்டை ஒரு சிறந்த தேர்வாகும். இந்த வேம்பாளம் பட்டை ஒரு வகை மரத்தினுடைய பட்டை ஆகும். இது உடல் ஆரோக்கியம் முதல் அழகு சார்ந்த பிரச்சனை அனைத்திற்கும் தீர்வு தரக்கூடிய சிறந்த மற்றும் அற்புதமான மூலிகையாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Pumpkin seed oil: கருகருனு, அடர்த்தியான முடிக்கு இந்த விதையோட எண்ணெயை யூஸ் பண்ணி பாருங்க
வேம்பாளம் பட்டை என்றால் என்ன?
இது ஆங்கிலத்தில் ரத்தன் ஜோட் (Ratan Jot) என்று அழைக்கப்படுகிறது. வேம்பாளம் மரத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு இயற்கை மருந்துப் பொருள் வேம்பாளம் பட்டை ஆகும். இந்த பொருளை பட்டையாகவும், பொடியாகவும் எடுத்துக் கொள்ளலாம். இது தலைமுடி, சருமம் மற்றும் தலைப்பகுதி தொடர்பான பிரச்சனைகளுக்குப் பயன்படுகிறது. முடி சார்ந்த பிரச்சனைகளான முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு, பேன் தொல்லை மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வேம்பாளம் பட்டை சிறந்த தீர்வாகும்.
இது தவிர, 'வெரிகோஸ் வெயின்' எனப்படும் நரம்பு சுருட்டல் பாதிப்பு, படுக்கைப் புண்கள் மற்றும் சரும வடுக்கள் போன்றவற்றிற்கும் வேம்பாளம் பட்டை சிறந்த தீர்வாகும். மேலும் இது அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தலைவலியைக் குறைக்கிறது. இதன் வேர் தலைவலிக்கு சிறந்த மருந்தாகும். இதில் தலைமுடி ஆரோக்கியத்திற்கு வேம்பாளம் பட்டை எண்ணெயைத் தயார் செய்யும் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து காணலாம்.
வேம்பாளம் பட்டை எண்ணெய் தயார் செய்யும் முறை
தேவையானவை
- வேம்பாளம் பட்டை - 10 கிராம்
- தேங்காய் எண்ணெய் (அ) கடுகு எண்ணெய் - 200 மில்லி
தயாரிக்கும் முறை
- பாத்திரம் ஒன்றில் தேங்காய் எண்ணெயை ஊற்றி டபுள் பாயிலிங் முறையில் சூடு செய்ய வேண்டும். டபுள் பாயிலிங் என்பது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதற்கு மேல் இந்த எண்ணெய் உள்ள பாத்திரத்தை சூடாக்க வேண்டும்.
- இந்த எண்ணெயில், எடுத்து வைத்த வேம்பாளம்பட்டையைச் சேர்த்து சூடு செய்யலாம்.
- இதில் எண்ணெய் சூடாக சூடாக, பட்டையிலுள்ள நிறம் முழுவதும் எண்ணெயில் இறங்கும். இந்த எண்ணெய் நன்கு சூடானதும் அடுப்பை அணைத்துவிட்டு எண்ணெயை ஒரு ஓரமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது பட்டையை வெளியே எடுத்து விடலாம் அல்லது பட்டை எண்ணெய்க்குள் ஊறிக் கொண்டு இருந்தாலும் பிரச்சனை எதுவும் இல்லை. இவ்வாறு வேம்பாளம்பட்டை எண்ணெய் தயாராகி விட்டது.
- பிறகு, இந்த எண்ணெயைத் தொடர்ந்து 3 நாட்கள் நல்ல சூரிய வெளிச்சத்தில் வைத்து எடுத்துக் கொள்ளலாம். அதன் பின், தலைமுடிக்கு இதைப் பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன்கள் பெறலாம்.
முடிக்கு வேம்பாளம்பட்டை எண்ணெயை பயன்படுத்துவது எப்படி?
தலைமுடிக்கு வழக்கமாக எண்ணெய் தேய்ப்பது போல வேம்பாளம்பட்டை எண்ணெயை தினமும் தேய்க்கலாம்.
குறிப்பாக, தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தேய்த்து, முடியின் வேர்க்கால்களிலும் நன்கு மசாஜ் செய்துவிட்டு பிறகு குளிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Hair moisturizing tips: வறண்ட, சுருண்ட முடியை மென்மையாக மாற்ற நீங்க செய்ய வேண்டியவை
முடிக்கு வேம்பாளம் பட்டை எண்ணெய் தரும் நன்மைகள்
முடி உதிர்வைத் தடுக்க
வேம்பாளம்பட்டை எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. இது தலைமுடிக்குப் போதிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், மாய்ஸ்சரைசரையும் தருகிறது. இதன் மூலம் போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதால், இது முடியின் வேர்க்கால்களை உறுதியாக்கி தலைமுடி உதிர்வைத் தடுக்கிறது.
முடியை பலப்படுத்துவதற்கு
வேம்பாளம்பட்டை எண்ணெயை முடிக்கு பயன்படுத்துவது தலைமுடியின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரித்து முடி உடைதலைத் தடுக்கிறது. மேலும் இது உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இது முடியை வலிமையாக்கி தலைமுடியின் பல்வேறு அடுக்குகளுக்குள் எண்ணெய் சென்று முடிக்கத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வலிமையைப் பெற ஊக்குவிக்கிறது.
சூரிய கதிர்களிலிருந்து பாதுகாக்க
வேம்பாளம்பட்டை எண்ணெயில் உள்ள பிளான்ட் பீனைல்கள் முடி மற்றும் சருமத்தை புற ஊதா கதிர்வீச்சின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இந்த எண்ணெய் அதிகப்படியான சூரிய வெப்பத்தைக் கட்டுப்படுத்தி, புறஊதா கதிர்களால் ஏற்படும் முடியின் சேதத்தைக் குறைத்து முடிக்கு பாதுகாப்பை வழங்குகிறது.
முடி வளர்ச்சியை ஆதரிக்க
தலைமுடி மற்றும் வேர்க்கால்களுக்குப் போதிய அளவு நீர்ச்சத்துக்களை அளித்து முடியைப் பலப்படுத்த இந்த எண்ணெய் உதவுகிறது. குறிப்பாக, முடியின் வேர்க்கால்கள் முதல் நுனிப்பகுதி வரை முடியை உறுதியாக்கி முடி உடைவதைத் தடுக்கிறது. மேலும் இது முடியின் வளர்ச்சியையும் வேகமாகத் தூண்டுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Sunflower seeds for hair: மென்மையான, நீளமான முடிக்கு சூரியகாந்தி விதைகளை இப்படி யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik