Best Hair Oil For Hair Growth And Thickness: தலைமுடி கருமையாக மற்றும் நீளமாக வளர வேண்டும் என்பதில் யாருக்குத் தான் ஆசை இருக்காது. இது போன்ற நீளமாக, அடர்த்தியாக மற்றும் கருமையாக முடி வளர்வதற்கு வேதிப்பொருள்கள் அல்லது இரசாயனங்கள் கலந்த ஷாம்பு அல்லது எண்ணெய் போன்ற சந்தையில் கிடைக்கும் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை யாரும் சிந்திப்பது இல்லை.
இது போன்ற இரசாயனம் கலந்த வேதிப்பொருள்கள் அடங்கிய எண்ணெய், ஷாம்பூ போன்றவற்றைப் பயன்படுத்துவதால் பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகள் அடங்கும். அதில் முடி உடைதல், முடி உதிர்வு, முடி வறட்சி, மற்றும் இளம் வயதிலேயே முடி நரைத்து போவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழலாம். இதில் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடியை வலுவாக்கவும் உதவும் வகையில் சில இயற்கையான எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். இதில் முடி வளர்ச்சிக்கு உதவும் இயற்கை எண்ணெய்கள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Collagen Rich Foods: டபுள் மடங்குல முடி வேகமா வளரணுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்
அடர்த்தியாக முடி வளர உதவும் எண்ணெய்
முடி நீளமாக மற்றும் அடர்த்தியாக வளர உதவும் எளிதாகக் கிடைக்கக் கூடிய சில இயற்கையான எண்ணெய் வகைகளைக் காணலாம்.
தேங்காய் எண்ணெய்
பெரும்பாலான வீடுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளில் தேங்காய் எண்ணெய் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்களின் உதவியுடன் சேதமடைந்த முடியை சரிசெய்து, கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க முடியும்.
இது இயற்கையாகவே முடி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது முடியின் நுண்ணறைகளுக்குள் ஊடுருவி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் முடிக்குத் தேவையான ஈரப்பதத்தையும் வழங்குகிறது. இது பிளவு முனைகளைத் தவிர்த்து அடர்த்தியான முடிக்கு வழிவகுக்கிறது.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்த எண்ணெயாகும். இந்த வைட்டமின் ஈ சத்துக்கள் முடியின் ஈரப்பதத்தை பராமரிக்கவும், உலர்ந்த மற்றும் உயிரற்ற கூந்தல் பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவுகிறது. இதில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமம் மற்றும் முடி ஆரோக்கியம் இரண்டிற்கும் உதவுகிறது. கூடுதலாக, இவை உச்சந்தலையில் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது.
ஆய்வு ஒன்றில் ஆலிவ் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவை முடி உதிர்தல் மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகளை குறைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய் வைட்டமின் பி, ஈ, மற்றும் கே போன்ற பல்வேறு வைட்டமின்கள் நிறைந்த நல்ல மூலமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே முடி வளர்ச்சிக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. கூடுதலாக, பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் பி7 சத்துக்கள் பயோட்டின் என அழைக்கப்படுகிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகின்றன.
மேலும் இந்த பாதாம் எண்ணெய் கரடுமுரடான மற்றும் வறண்டு போன முடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. இந்த எண்ணெயை நேரடியாக தலைமுடியில் தடவலாம் அல்லது சமையல் எண்ணெயாக உட்கொள்ளலாம். இவ்வாறு எடுத்துக் கொள்வது தலைமுடியின் ஈரப்பதத்தை சீர் செய்யவும், முடி உதிர்தல் பிரச்சனையைக் குறைக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Oiling Before Shampooing: ஷாம்பு போடும் முன் முடிக்கு எண்ணெய் தடவுவது நல்லதா? என்னனு தெரிஞ்சிக்கோங்க
பிரிங்கராஜ் எண்ணெய்
பிரிங்கராஜ் எண்ணெய் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்த மூலமாகும். இது முடி உதிர்வதைத் தடுக்க உதவுகிறது. இந்த எண்ணெய் சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதால், இந்த எண்ணெயைத் தினமும் தடவி வருவது தலைமுடியை வேகமாக வளர்வதை ஊக்குவிக்கிறது. இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் எரிச்சலைத் தணித்து உச்சந்தலையை அமைதிப்படுத்த உதவுகிறது. மேலும் இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் ஸ்கர்ஃப் மற்றும் ஸ்கால்ப் போன்ற நோய்களைத் தடுக்கிறது.
பிரிங்கராஜ் எண்ணெயில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஃபீனால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், முடியின் மயிர்க்கால்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுத்து, ஆரம்ப கால நரைமுடி பிரச்சனைக்கு தீர்வு தருகிறது. இதன் கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரோட்டீன்கள் போன்றவை பிளவு முனைகளைக் குறைக்கிறது.
ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெயில் ஒலிக் அமிலம் மற்றும் ரிசினோலிக் போன்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இவை முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. முடி உதிர்தல் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆமணக்கு எண்ணெய் சிறந்த தேர்வாக அமைகிறது. எனினும், இந்த ஆமணக்கு எண்ணெய் ஆனது மிகவும் கடினமாகவும், ஒட்டும் தன்மையுடனும் இருப்பதால், எப்போதும் இதை வேறு ஏதாவது எண்ணெயுடன் கலந்து தடவ வேண்டும்.
இந்த எண்ணெய் முடியை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் முடியின் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. மேலும் இந்த எண்ணெய் பூஞ்சை மற்றும் நுண்ணுயிர் தொற்றுக்களிலிருந்து உச்சந்தலை மற்றும் முடி தண்டுகளைப் பாதுகாக்கிறது.
இது போன்ற இயற்கையான எண்ணெய்களைப் பயன்படுத்துவது தலைமுடியை மிகவும் அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளர உதவுகிறது. எனினும், இந்த எண்ணெய்களைப் பயன்படுத்தும் போது எரிச்சல், அரிப்பு போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளைச் சந்தித்தால் உடனடியாக இதைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அழகு சார்ந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Coconut And Amla Oil: ஆம்லா பொடியை தேங்காய் எண்ணெயுடன் கலந்து முடிக்கு பயன்படுத்தலாமா?
Image Source: Freepik