Tea For Hair: பொசு பொசுனு முடி வளர உதவும் டீ வகைகள். எப்படி பயன்படுத்துவது?

  • SHARE
  • FOLLOW
Tea For Hair: பொசு பொசுனு முடி வளர உதவும் டீ வகைகள். எப்படி பயன்படுத்துவது?

முடி வளர்ச்சிக்கு எந்த தேநீர் பெஸ்ட்

தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்க முடி பராமரிப்பு வழக்கத்தில் பல்வேறு வகையான தேநீரைச் சேர்த்துக் கொள்ளலாம். எந்த வகையான தேநீர் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது என்பதைக் காண்போம்.

பிளாக் டீ

பிளாக் டீ காஃபின் நிறைந்த தேநீராகும். இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இதன் பண்புகள் உச்சந்தலையை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது. இதில் உள்ள அதிகளவு ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் காஃபின் உள்ளடக்கம் போன்றவை உச்சந்தலை மற்றும் முடியின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது. இவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், உச்சந்தலை ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Best Hair Shampoo: உங்க முடிக்கு ஏற்ற சரியான ஷாம்புவை எப்படி தேர்ந்தெடுப்பது? நிபுணர் தரும் விளக்கம்

கிரீன் டீ

கிரீன் டீ அதிகளவு ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த தேநீர் பானமாகும். இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முடி உதிர்தலைத் தடுக்க உதவுகிறது. மேலும் இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் முடியின் மயிர்க்கால்களை புத்துயிர் பெற உதவுகிறது. முடிக்கு ஆழமாக வேரிலிருந்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கிரீன் டீயில் எபிகல்லோகேடசின் கேலேட் நிறைந்துள்ளது. இவை முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

ஜாஸ்மின் டீ

உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் பண்புகளுடன் ஜாஸ்மின் டீ இரட்டை நன்மைகளை அளிக்கிறது. இது உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இது முடியை சீராக வைப்பதுடன், இயற்கையான நிறம் மற்றும் பளபளப்பைத் தருகிறது.

ரோஸ்மேரி டீ

இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தின் சுழற்சியை அதிகரிக்க உதவுகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டம் முடியின் மயிர்க்கால்களுக்குத் தேவையான சிறந்த ஊட்டச்சத்தை வழங்குகிறது. இவ்வாறு முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முடி உதிர்தல் பிரச்சனையைக் குறைப்பதற்கு உதவுகிறது.

பெப்பர்மின்ட் டீ

பெப்பர்மின்ட் ஆன்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அகற்றி, உச்சந்தலையை பராமரிக்க உதவுகிறது. இந்த தேநீரில் நிறைந்துள்ள பண்புகள் முடியின் மயிர்க்கால்கள் வரை இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. இவை முடி வளர்ச்சியை ஆரோக்கியமாக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Banana Hair Mask: சுருள் முடிபிரச்சனைக்கு வாழைப்பழ ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க

கெமோமில் டீ

கெமோமில் டீயின் இனிமையான பண்புகள் உச்சந்தலை ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது. இது பொடுகு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது. பொடுகு போன்றவற்றால் ஏற்படும் முடியிழப்பு பிரச்சனைக்கு கெமோமில் டீ உதவுகிறது.

முடிக்கு தேநீர் பயன்படுத்தும் முறை

தலைமுடிக்கு தேநீர் பயன்படுத்துவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. எனினும், இதைச் சரியாகப் பயன்படுத்துவது அவசியமாகும்.

தேநீரைக் கொண்டு அலசுவது

தேநீரைப் பயன்படுத்துவதற்கு முன் முடி வகைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். சாதாரண மற்றும் எண்ணெய் முடி கொண்டவர்கள் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தேநீரில் கழுவலாம். இது அதிகப்படியான எண்ணெய் தன்மையை ஏற்படுத்தாமல் உச்சந்தலையை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. எனினும், உலர்ந்த அல்லது சேதமடைந்த முடி கொண்டவர்கள் வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம். ஏனெனில் அதிகப்படியான பயன்பாடு வறட்சியை அதிகரிக்கலாம். ஹைட்ரேட்டிங் ஹேர்பேக் அல்லது கண்டிஷனர்களைப் பயன்படுத்துவது ஈரப்பதத்தின் அளவை பராமரிக்க உதவுகிறது.

தேயிலை ஹேர்பேக்

தேன், தயிர் அல்லது கற்றாழை போன்ற பொருள்களுடன் காய்ச்சிய தேநீரைக் கலந்து ஹேர் மாஸ்க்காக தயார் செய்யலாம். இது முடி மற்றும் உச்சந்தலையில் தேநீரில் கரைந்துள்ள சத்துக்களை ஆழமாக ஊடுருவ உதவுகிறது. இந்த தேயிலை ஹேர் பேக்கை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்.

சில தேநீர் வகைகளுக்கு ஒவ்வாமை எதிர்விளைவுகள் ஏற்படலாம். எனவே தலைமுடிக்கு ஏதேனும் புதிய தேநீர் வகையைப் பயன்படுத்தும் முன்னதாக, பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Spinach For Hair Growth: போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளரணுமா? கீரையை இப்படி எடுத்துக்கோங்க

Image Source: Freepik

Read Next

Shiny Hair: உங்களுக்கு கரு கருன்னு நீளமான கூந்தல் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க!

Disclaimer