Homemade Banana Hair Mask For Curly Hair: சுருள் முடி உள்ளவர்கள் பலரும் நேரான கூந்தலையே விரும்புவர். சுருளாக இருப்பதால், அதிக ஈரப்பதம் இல்லாமல் இருப்பது முடியை சேதமடையச் செய்யலாம். கூந்தலில் கவனம் இல்லாத போது, சுருள் முடி உதிர்வு வேகமாக நடக்கும். பெரும்பாலானோர் சுருள் முடியைப் பராமரிக்க பல்வேறு வகையான பொருள்களை பயன்படுத்துகின்றனர். இவை சில சமயங்களில் விலை உயர்ந்தவையாகவும், பக்க விளைவை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம்.
இந்த சூழ்நிலையில், சுருள் முடியைப் பராமரிக்க வாழைப்பழ ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்குகள் முடிக்கு ஊட்டமளிப்பதுடன், சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. வாழைப்பழத்தில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் முடியை வலுப்படுத்துவதுடன், சுருள் முடி பிரச்சனைகளை சமாளிக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Best Hair Shampoo: உங்க முடிக்கு ஏற்ற சரியான ஷாம்புவை எப்படி தேர்ந்தெடுப்பது? நிபுணர் தரும் விளக்கம்
முடிக்கு வாழைப்பழ ஹேர் மாஸ்க்
சுருள் முடி பிரச்சனைகளை சமாளிக்க வாழைப்பழ ஹேர் மாஸ்க் உதவுகிறது. இதில் முடிக்கு உதவும் வாழைப்பழ ஹேர் மாஸ்க் குறித்து காணலாம்.
வாழைப்பழம் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்
தேவையானவை
- பழுத்த வாழைப்பழம் - 1
- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை
வாழைப்பழம், தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க் செய்வதற்கு இந்த பொருள்களைக் கலந்து கலவையாகத் தயார் செய்யவும். பிறகு, இந்த பேஸ்ட்டை முடியில் தடவி 1 மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பிறகு லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவலாம். இந்த மாஸ்க் பயன்படுத்துவது உச்சந்தலையில் ஊட்டமளிப்பதுடன் பொடுகுத் தொல்லையைக் குறைக்க உதவுகிறது. இந்த ஹேர் மாஸ்க் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முடியை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
வாழைப்பழம் மற்றும் கற்றாழை ஹேர் மாஸ்க்
தேவையானவை
- பழுத்த வாழைப்பழம் - 1
- கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி
செய்முறை
இந்த ஹேர் மாஸ்க் செய்ய இதில் கொடுக்கப்பட்ட பொருள்களைக் கலந்து பேஸ்ட்டாகத் தயார் செய்ய வேண்டும். இப்போது இந்த பேஸ்ட்டை முடி மற்றும் வேர்களில் தடவி 1 மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பிறகு, தலைமுடியைத் தண்ணீரில் கழுவுவதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Spinach For Hair Growth: போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளரணுமா? கீரையை இப்படி எடுத்துக்கோங்க
வாழைப்பழம், தேன் மற்றும் பப்பாளி ஹேர் மாஸ்க்
தேவையானவை
- பழுத்த வாழைப்பழம் - 1
- தேன் - 1 தேக்கரண்டி
- பப்பாளி - 2 ஸ்பூன்
செய்முறை
இந்த மூன்று பொருள்களைச் சேர்த்து கலவையைத் தயார் செய்ய வேண்டும். அதன் பிறகு இந்தக் கலவையை முடியில் தடவி 1 மணி நேரம் தடவ வேண்டும்.பின் ஷாம்பு கொண்டு முடியைக் கழுவலாம். இந்த ஹேர் மாஸ்க் முடிக்கு ஊட்டமளிப்பதுடன், முடி உதிர்தல் பிரச்சனையை நீக்குகிறது.
சுருள் முடியை பராமரிப்பதற்கு இந்த வழிமுறைகளில் வாழைப்பழ ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்தலாம். எனினும், ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Homemade Hibiscus Shampoo: நீளமா, அடர்த்தியா, மொத்தமா முடி வேணுமா? செம்பருத்தி ஷாம்பு யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik