Homemade Hair Mask: முடி அதிகமா உதிருதா? இந்த ஹேர்பேக்குகள் யூஸ் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Homemade Hair Mask: முடி அதிகமா உதிருதா? இந்த ஹேர்பேக்குகள் யூஸ் பண்ணுங்க


Best Hair Mask For Hair Fall At Home: இன்று அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்றாக முடி பிரச்சனையும் அமைகிறது. ஏனெனில் நவீன காலகட்டத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கையாள்வது போன்றவற்றால் தலைமுடி உதிர்வு ஏற்படலாம்.

இந்த சூழ்நிலையில் தலைமுடி ஆரோக்கியமாக இல்லாத போது முடி உதிர்வு ஏற்படலாம். அதிலும் கெமிக்கல் நிறைந்த ஷாம்புகள், மாசுபாடு போன்றவை தலைமுடியில் பாதிப்புகளை உண்டாக்கி, தலைமுடியை உதிரச் செய்கிறது. இந்நிலையில் முடி உதிர்வைத் தடுத்து, முடி அடர்த்தியாக வளர ஹேர் மாஸ்க்குகள் உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: கரு கரு கூந்தலைப் பெற ஆம்லா உடன் இந்த ஒரு பொருளைச் சேர்த்து பயன்படுத்துங்க.

முடி உதிர்வைத் தடுக்க உதவும் ஹேர் மாஸ்க்குகள்

சில வகையான ஹேர் பேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

தேங்காய் பால் ஹேர் பேக்

தேங்காய் பாலில் வைட்டமின் பி, சி, மற்றும் ஈ போன்றவை நிறைந்துள்ளன. இது தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராக இருப்பதுடன், தலைமுடியின் ஆரோக்கியத்திற்குத் தேவையான புரோட்டீனை வழங்குகிறது. அதனுடன் இது பொடுகுத் தொல்லையில் இருந்து விடுவிக்க உதவுகிறது. தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி தலைமுடியில் தடவி மென்மையாக மசாஜ் செய்யலாம். இரவு முழுவதும் வைத்து பின் மறுநாள் தலைக்குக் குளிக்கலாம். இவ்வாறு வாரத்திற்கு இரு முறை செய்துவர முடி அடர்த்தியாக வளர்கிறது.

தயிர், தேன், எலுமிச்சைச் சாறு ஹேர்பேக்

எலுமிச்சைச் சாறு பொடுகுத் தொல்லையை நீக்க உதவுகிறது. மேலும் தேன் முடிக்கு ஊட்டமளிப்பதுடன், தயிர் முடிக்குத் தேவையான புரோட்டீன்களைக் கொடுக்கிறது. இவை மூன்றையும் கலந்து பயன்படுத்துவது முடியை நன்கு அடர்த்தியாக வளர வைக்கிறது. 1 டேபிள் ஸ்பூன் அளவு தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மூன்றையும் கலந்து தடவி 1/2 மணி நேரம் வைத்து லேசான ஷாம்புவைப் பயன்படுத்தலாம். இந்த ஹேர் பேக்கை வாரம் ஒரு முறை பயன்படுத்துவது முடி அடர்த்தியாக வளர்வதுடன் பொலிவாக வைக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Curry Leaves For Hair: கறிவேப்பிலையை இப்படி யூஸ் பண்ணா இந்த முடி பிரச்சனை எதுவும் வராதாம்.

நெல்லிக்காய், தேங்காய் எண்ணெய் ஹேர்பேக்

ஆம்லா என்று அழைக்கப்படும் நெல்லிக்காய் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், ஃபிளவனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளது. இது தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. தேங்காய் எண்ணெய் தலைமுடியை ஈரப்பதமாக்குகிறது. இந்த பேக்கில் சீகைக்காய் பயன்படுத்துவது தலைமுடியை வேரில் இருந்து வலுவாக்குகிறது. 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாறு, 1 டேபிள் ஸ்பூன் சீகைக்காய் பவுடர், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் போன்றவற்றை ஒன்றாகக் கலந்து தலைக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். 2 மணி நேரத்திற்கு பின் முடியை அலசலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை, ஆலிவ் ஆயில் ஹேர்பேக்

கற்றாழை தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுவதுடன், வறட்சியைத் தடுத்து தலைமுடியை மென்மையாக மாற்றுகிறது. சிறிது ஆலிவ் ஆயிலை சூடாக்கி, அதில் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்த கலவையை தலையில் தடவி சிறிது மசாஜ் செய்யலாம். அதன் பிறகு 15 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரால் லேசான ஷாம்புவை பயன்படுத்தி அலச வேண்டும்.

வெங்காய சாறு ஹேர்பேக்

வெங்காய சாறு தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த சாற்றினை முடியில் தடவி வர இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதற்கு பெரிய வெங்காயத்தை அரைத்து சாறு தயாரித்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பயன்படுத்தலாம். பின் அரை மணி நேரம் ஊறவைத்து, லேசான ஷாம்புவைப் பயன்படுத்தித் தலைமுடியை அலச வேண்டும். இவ்வாறு மாதம் 3 முறை பயன்படுத்துவது தலைமுடி நீளமாக மற்றும் அடர்த்தியாக வளர உதவுகிறது.

இந்த ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்துவது முடி உதிர்வைத் தடுப்பதுடன், முடியை ஆரோக்கியமாக வளர வைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Vetrilai For Hair: வெறித்தனமா முடி வளரணுமா? வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்க போதும்

Image Source: Freepik

Read Next

Hair care Tips: தலைக்கு குளித்த பின் ஈரமான முடியை சீவுவது நல்லதா?

Disclaimer