Leaves For Hair: ஒரே வாரத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த இலைகளை யூஸ் பண்ணுங்க!

முடி உதிர்வு பிரச்சினையை தடுக்க சில செடிகளின் இலைகளை பயன்படுத்தலாம் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
  • SHARE
  • FOLLOW
Leaves For Hair: ஒரே வாரத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த இலைகளை யூஸ் பண்ணுங்க!

Best Leaves To Reduce Hair Fall: இயற்கை நமக்கு வழங்கிய மரம், பழம், செடி, கொடி, இல்லை ஆகிய அனைத்தும் பல உடல்நல பிரச்சனைகளை தீர்க்கக்கூடியது. அதனால் தான் பண்டைய காலம் முதல் இன்று வரை எந்த ஆரோக்கிய பிரச்சினையாக இருந்தாலும், இயற்கையான முறையில் செய்யப்படும் வைத்தியங்களை மக்கள் நம்புகின்றார்கள்.

 

இன்றைய காலத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று முடி உதிர்வு. இதற்கு நாம் செய்யாத சிகிச்சையே இருக்க முடியாது. இருப்பினும் நமக்கு எந்த பலனும் கிடைத்திருக்காது. முடி உதிர்வை தடுக்க காலம் காலமாக நமது முன்னோர்கள் சில மூலிகை இலைகளை பயன்படுத்துகின்றனர்.

 

அவை முடிக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில், உள்ள அத்தியாவசிய பண்புகள் வேர்களை வலுப்படுத்த உதவும். அந்த மூலிகை இலைகள் மற்றும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம் : Oily Hair: ஆயில் ஹேர் உள்ளவர்கள் கண்டிஷனர் பயன்படுத்தலாமா?

 

முடி உதிர்வதை தடுக்க இந்த 5 இலைகளை பயன்படுத்தவும்:

 

Hair Care Tips: इन 6 कारणों से झड़ते हैं आपके बाल, इस समस्या से राहत पाने  के लिए अपनाएं ये उपाय - monsoon hair care tips causes of hair loss and  baldness

 

கறிவேப்பிலை

 

காலம் காலமாக முடி சமந்தமான பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் இலைகளில் ஒன்று கறிவேப்பிலை. இதில், வைட்டமின்-பி, வைட்டமின்-சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. இது உச்சந்தலைக்கு ஊட்டமளிப்பதுடன் முடி உதிர்வையும் தடுக்கிறது.

 

மேலும், இதில் அமினோ அமிலங்கள், கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை இதில் காணப்படுகின்றன. இது கூந்தலுக்கு பளபளப்பைத் தருவதோடு, கூந்தலை வலுவாக வைத்திருக்கும். கறிவேப்பிலையை கூந்தலுக்கு பயன்படுத்த, அதில் இருந்து எண்ணெய் தயாரித்து தடவலாம். இது தவிர, ஹேர் மாஸ்க் மற்றும் ஷாம்புவில் பயன்படுத்தலாம்.

 

ரோஜா இதழ்கள்

 

ரோஜா இதழ்கள் உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அரிப்பு மற்றும் எரிச்சலைக் குறைக்க உதவும். ரோஜாவில் அஸ்ட்ரிஜென்ட் என்றழைக்கப்படும் கலவை உள்ளது. இது உச்சந்தலையில் உருவாகும் அதிகப்படியான எண்ணெயைத் தடுக்க உதவுகிறது.

 

ரோஜா இதழ்களை பேஸ்ட் செய்து தலையில் தடவலாம். இது தவிர, ஹேர் ஆயிலில் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

 

இந்த பதிவும் உதவலாம் : வேர் வேரா முடி கொட்டுதா? வீட்டிலேயே தயார் செய்த இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க


செம்பருத்தி இலைகள்

 

செம்பருத்தி இலைகளில் அதிக ஈரப்பதம் உள்ளது. எனவே, இது உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. இது முடியை பலப்படுத்துவதோடு, முடி உதிர்தலையும் குறைக்கிறது.

 

செம்பருத்தி இலையை தயிருடன் கலந்து ஹேர் மாஸ்க் செய்து பயன்படுத்தலாம். இது தவிர, செம்பருத்தி இலையை சாறு பிழிந்து, ஹேர் ஆயிலில் கலந்து தடவலாம்.

 

கொய்யா இலைகள்

 

Guava Leaves Health Benefits | HerZindagi

 

கொய்யா இலைகளில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது முடி உதிர்வை குறைக்க உதவுகிறது. இது உச்சந்தலையில் புரதத்தை உற்பத்தி செய்கிறது. இதனால், முடி வலுவடையும்.

 

முடி உதிர்வை தடுக்க, கொய்யா இலையை பொடி செய்தும் பயன்படுத்தலாம். இல்லையெனில், இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தலை முடிக்கு பயன்படுத்தலாம்.

 

இந்த பதிவும் உதவலாம் : உங்க முடிக்கு எந்த ஹேர் மாஸ்க் யூஸ் பண்றதுனு தெரியலையா? இத பாருங்க

 

வேப்ப இலைகள்

 

வேம்பு இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் செப்டிக் பண்புகளை கொண்டது. எனவே, இது உச்சந்தலையில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். இதன் பயன்பாடு பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபடுவதுடன் முடி உதிர்தலையும் குறைக்கிறது.

 

வேப்பிலையை அரைத்து கூந்தலில் தடவலாம், அல்லது பொடியை பயன்படுத்தலாம். இது தவிர, வேப்ப இலைகளை வேகவைத்து, உங்கள் தலைமுடியை அதன் நீரில் கழுவவும்.

 

இந்த இலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். ஆனால், உச்சந்தலையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

 

Pic Courtesy: Freepik

Read Next

Eggs for Hair: முடிக்கு முட்டை பயன்படுத்த போறீங்களா? இப்படி யூஸ் பண்ணுங்க

Disclaimer