Hair Loss Prevention: முடி உதிர்வை இயற்கையாக கட்டுப்படுத்த இதை மட்டும் செய்யுங்க!

  • SHARE
  • FOLLOW
Hair Loss Prevention: முடி உதிர்வை இயற்கையாக கட்டுப்படுத்த இதை மட்டும் செய்யுங்க!

சில சமயங்களில் நல்ல முடிவுகளை பெற்றாலும், அந்த பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்தியதும் மீண்டு முடி உதிர்வு பிரச்சினை அதிகரிக்கும். நாம் செய்யும் சில தவறுகள் முடி உதிர்வை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? டாக்டர் அனுப்ரியா கோயல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும் சில விஷயங்களை பற்றி நமக்கு கூறியுள்ளார். அவற்றை பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Hair Fall Food: உங்களுக்கு அதிகமா முடி கொட்டுதா? இந்த உணவுகள் தான் காரணம்!

குடி காட்டுவதற்கான பொதுவான காரணம்

முடி உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆண்ட்ரோஜன் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் முடி உதிர்வு ஏற்படும். அதே வேளையில், பிஸியான வாழ்க்கை, உணவுப் பழக்கம் மற்றும் புதிய மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை போன்றவற்றாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது. இது தவிர முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதே சமயம் இவற்றை கவனித்தால் முடி உதிர்தல் பிரச்சனையை தவிர்க்கலாம்.

இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்

  • ஒரு நாளைக்கு பல முறை முடியை சீவினாலும், முடி அதிகமாக உதிரும். அவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • நீங்கள் மீண்டும் மீண்டும் ட்ரையர் அல்லது ஹேர் ஸ்ட்ரெய்ட்னரைப் பயன்படுத்தினாலும், முடி உடையும் பிரச்சனை தொடங்குகிறது. எனவே, உலர்த்தி அல்லது சூடான ஸ்ட்ரைட்னர் மூலம் முடியை உலர்த்தக்கூடாது.

இந்த பதிவும் உதவலாம் : Shiny Hair: உங்களுக்கு கரு கருன்னு நீளமான கூந்தல் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க!

  • டவலால் வலுவாக தேய்த்து முடியை உலர்த்தினாலும், முடி உதிர்தல் பிரச்னை ஏற்படும். அதனால் அதை செய்யக்கூடாது.
  • முடியை மிகவும் இறுக்கமாக கட்டுவதும் முடி உதிர்தல் பிரச்சனைக்கு வழிவகுக்கும். எனவே, முடிந்தவறை, உங்கள் முடியை இறுக்கமாக கட்ட வேண்டாம்.

Pic Courtesy: Freepik

Read Next

Lemon for Hair: முடி கொத்து கொத்தா கொட்டுதா? இதே உங்களுக்கான வீட்டு வைத்தியம்!

Disclaimer