Worst Foods That Cause Hair Loss: முடி உதிர்தல் என்பது இரண்டில் ஒருவர் சந்திக்கும் பொதுவான பிரச்சனை. முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருக்கலாம். முடி உதிர்வை தடுக்க நம்மில் பலர், நாம் பயன்படுத்தும் முடி தயாரிப்புகளை மீண்டும் மீண்டும் மாற்றிக்கொண்டே இருப்போம். ஆனால், அவை நமக்கு பயனளிப்பதில்லை. உங்கள் உடலில் சில ஊட்டச்சத்து குறைவதே இதற்கு காரணம். இதனால், மயிர்க்கால்கள் வலுவிழந்து முடி உடையும்.
இதற்கு முதலில் உங்கள் உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். நீங்கள் அதை உணராமல் இருக்கலாம், ஆனால் சில நேரங்களில் சில மோசமான உணவுப் பழக்கங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கும் உங்கள் தலைமுடிக்கும் தீங்கு விளைவிக்கும். எந்த உணவுகள் முடி உதிர்வு பிரச்சினையை அதிகரிக்கும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Leaves For Hair Fall: முடி உதிர்வு பிரச்சனையை ஈஸியா தடுக்க இந்த இலைகளைப் பயன்படுத்துங்க
குறைந்த அளவு புரதம் உட்கொள்வது

நீங்கள் தொடர்ந்து முடி உதிர்வதை அனுபவித்து வருகிறீர்கள் என்றால், உங்களுக்கு புரத சத்து குறைபாடாக கூட இருக்கலாம். முடியின் கட்டுமானத் தொகுதி கெரட்டின் எனப்படும் புரதமாகும். எனவே, உணவில் புரதச் சத்து குறைவாக இருந்தால், முடி உதிர்வு அபாயம் அதிகரிக்கும். லீன் புரோட்டின், பருப்பு வகைகள், கீரை, பீன்ஸ் மற்றும் டோஃபு போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்கவும்.
அதிக அளவு சர்க்கரை உட்கொள்வது
உங்கள் உணவில் பதப்படுத்தப்பட்ட சர்க்கரையை அதிகமாக உட்கொள்வதால், முடி உதிர்வு பிரச்சினை அதிகரிக்கும். ஏனென்றால், அதிகப்படியான சர்க்கரை உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக, மயிர்க்கால்கள் தொந்தரவு மற்றும் முடி உதிர்தல் ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Black Cumin Seeds For Hair: கரு கரு அடர்த்தியான முடிக்கு கருஞ்சீரகத்தை இப்படி யூஸ் பண்ணுங்க
அதிக கிளைசெமிக் உணவுகளை உட்கொள்வது

நீங்கள் அதிக கிளைசெமிக் உணவுகளை சாப்பிட்டால், அது உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அதிக கிளைசெமிக் உணவுகள் எளிதில் சர்க்கரையாக உடைந்து போவதால் இது நிகழ்கிறது. சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது உடலில் இன்சுலின் மற்றும் ஆண்ட்ரோஜனை அதிகரிக்கும். இது முடி ஆரோக்கியத்தை கண்டிப்பாக பாதிக்கும். இதனால், நீங்கள் முடி உதிர்தல் பிரச்சனையை சந்திக்க நேரிடலாம்.
துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து குறைவு
உங்கள் உணவில் அயர்ன் மற்றும் ஜிங்க் இருப்பதை கவனிக்கவில்லை என்றால், அதிகப்படியான முடி உதிர்வு பிரச்சனையையும் நீங்கள் சந்திக்க நேரிடும். துத்தநாகம் மற்றும் இரும்பு இரண்டும் கெரட்டின் உருவாவதற்கு உதவுகின்றன. அதுமட்டுமின்றி, உங்கள் உணவில் போதுமான இரும்புச்சத்து இல்லாததால், மயிர்க்கால்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளை குறைந்து, முடி உதிர்தல் மற்றும் மெலிந்துவிடும். கடல் உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சி போன்றவற்றை உங்கள் உணவில் சேர்க்க முயற்சிக்கவும். நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால் பீன்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Hair Growth Secret: முடி நீளமாக வளர வல்லுநர்கள் கூறும் சீக்ரெட் டிப்ஸ் இதோ!
உணவில் கொழுப்பு அமிலங்கள் இல்லாதது

முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க, உணவில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதும் அவசியம். உணவில் இந்த அத்தியாவசிய ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களின் குறைபாடு இருந்தால், உங்கள் முடி வலுவிழந்து வறண்டு போகும். இதன் காரணமாக, உங்கள் முடி உதிர்தல் மற்றும் உதிர்வு அபாயம் அதிக அளவில் அதிகரிக்கிறது.
Pic Courtesy: Freepik