முடி கொட்டும் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பலர் தினமும் எண்ணெய் தடவியும், விலை உயர்ந்த ஹேர் ஆயில்கள், சீரம், ஷாம்பூக்கள் பயன்படுத்தியும் பலனின்றி தவிக்கிறார்கள்.
உண்மையில் முடி ஆரோக்கியம் பெற வேண்டுமெனில் வெளிப்புற பராமரிப்பு மட்டும் போதாது, உடலுக்குள் செல்லும் சத்துக்கள் சரியாக இருக்க வேண்டும் என டாக்டர் சுகன்யா நாயுடு கூறுகிறார். மேலும் இதற்காக என்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றிய பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அறிய பதிவை முழுமையாக படிக்கவும்.
முடிக்கு தேவையான சத்துக்கள்
இரும்புச் சத்து (Iron):
சிறுகீரை, பீட்ரூட், வெந்தயம், மாதுளை, பேரீச்சம்பழம் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்புச் சத்து குறைந்தால், முடி வேர் (hair root) போதுமான ஆக்ஸிஜன் பெறாது. இதனால் முடி பலவீனமடைந்து எளிதில் உதிரும்.
புரதச் சத்து (Protein):
பருப்பு வகைகள், பனீர், டோஃபு, முட்டை, பாசிப்பயறு, முளைகள் (sprouts), கேழ்வரகு போன்ற சிறுதானியங்களைச் சாப்பிட வேண்டும். புரதம்தான் முடிக்கு அடிப்படை கட்டுமானம். புரதம் குறைந்தால் முடி வளர்ச்சி தடையாகும்.
ஜிங்க் (Zinc):
பூசணிக்காய் விதைகள், சூரியகாந்தி விதைகள், பாதாம், வால்நட் போன்றவற்றில் ஜிங்க் சத்து நிறைந்துள்ளது. இது முடி வேர்களை பலப்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: முடி கொட்டாது, நரைக்காது, வழுக்கைக்கு வாய்ப்பே இல்ல! ஒரே ஒரு ஜூஸ் போதும்..
வைட்டமின் D:
காலை நேர சூரிய ஒளி, முட்டை மஞ்சள், காளான் போன்றவற்றில் கிடைக்கும். வைட்டமின் D குறைவானால் முடி வளர்ச்சி சுழற்சி பாதிக்கும். தேவைப்பட்டால் மருத்துவர் பரிந்துரைக்கும் சப்பிளிமென்ட்ஸையும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் முதலில் இரத்தப் பரிசோதனை அவசியம்.
வைட்டமின் B12:
முட்டை, பால் பொருட்கள், மீன், கோழி போன்றவற்றில் நிறைந்துள்ளது. சைவ உணவாளர்கள் (vegetarians) அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே தங்களின் B12 அளவை சரிபார்க்க வேண்டும்.