நம் தினசரி சமையலில் அவசியம் பயன்படுத்தப்படும் கருவேப்பிலை (Curry Leaves) குறித்து, “முடி உதிர்வைத் தடுக்கிறது, வெள்ளை முடியை கருப்பாக மாற்றுகிறது” என்ற நம்பிக்கைகள் பரவலாக இருக்கின்றன. ஆனால், உண்மையில் இது எவ்வளவு உண்மை? இதற்கான விளக்கத்தை மருத்துவர் சாந்தோஷ் ஜேக்கப் (Orthopedic & Sports Surgeon) தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கருவேப்பிலை பற்றிய உண்மை
குறைந்த கலோரி.. அதிக சத்து..
100 கிராம் கருவேப்பிலையில் சுமார் 60–70 கலோரி மட்டுமே உள்ளது. அதில் பெரும்பாலும் தண்ணீரே உள்ளது. 20 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 4 கிராம் புரதம் உள்ளது. அதனால், உணவில் “கில்ட்-ஃப்ரீ” சேர்க்கையாக கருதலாம்.
முடி வளர்ச்சிக்கு சிறந்ததா?
கருவேப்பிலை சாப்பிட்டால் மட்டும் முடி உதிர்வு, வெள்ளை முடி போன்ற பிரச்சனைகள் தீரும் என்ற நம்பிக்கை தவறு. உண்மையில், முடி ஆரோக்கியம் மரபியல் (Genetics), வாழ்க்கை முறை (Lifestyle) ஆகியவற்றைப் பொறுத்தது.
வைட்டமின் மற்றும் கால்சியம் வல்லமை
கருவேப்பிலையில், சாதாரண காய்கறிகளைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமான Vitamin A உள்ளது. மேலும், நம் தினசரி தேவையான Calcium-இன் 80% அளவை இது தருகிறது. கண் பார்வை, எலும்பு மற்றும் பற்கள் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
லேப் ரிசர்ச்
கருவேப்பிலையின் Carbazole alkaloids லேப் டெஸ்ட்களில் Anti-diabetic, Anti-cholesterol, Anti-inflammatory நன்மைகளை காட்டினாலும், அதை உணவு மூலமாக பெற வேண்டிய அளவு மனிதர்களுக்கு சாத்தியமில்லை.
ஊட்டச்சத்து அதிகம்
கருவேப்பிலை நம் உணவிற்கு சுவையும் மணமும் சேர்க்கும், Vitamin A & Calcium-ஐ அதிகரிக்கும். ஆனால், அற்புத மருந்து போல கருத வேண்டாம்.
சுவையான பயன்பாடுகள்
கருவேப்பிலையை ரசம், சட்னி, டீ போன்றவற்றில் சேர்த்து கொள்ளலாம். அல்லது, நெய் / எண்ணெய்-யில் வதக்கி சேர்த்தால் சுவை + சத்தும் கூடும்.
மருத்துவர் கூறும் எச்சரிக்கை
“கருவேப்பிலை ஆரோக்கியம் தருகிறது. ஆனால் முடி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு என கருத வேண்டாம். உணவு பழக்கம், உடற்பயிற்சி, மரபியல் ஆகியவை தான் முக்கியம்” என டாக்டர் சாந்தோஷ் ஜேக்கப் வலியுறுத்தியுள்ளார்.
Disclaimer: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான ஆரோக்கிய மற்றும் உணவுக் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இது மருத்துவரின் ஆலோசனைக்கு மாற்றாக கருதப்படக்கூடாது. உங்கள் உடல்நிலை, நோய் வரலாறு அல்லது மருந்து பயன்பாடு குறித்து சந்தேகங்கள் இருந்தால், தயவுசெய்து தகுதியான மருத்துவரை அல்லது சுகாதார நிபுணரை அணுகி ஆலோசனை பெறவும்.