பெண்கள் Sports Bra அணிவதில் நன்மைகள் உண்டா? அல்லது இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் பாதிப்பு உண்டா? என்ற கேள்வி பல பெண்களின் மனதிலும் நீண்ட நாட்களாக உள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் மருத்துவர் டாக்டர் ஐசக் அப்பாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார்.
பெண்கள் மார்பகத்தின் அமைப்பு எப்படி இருக்கிறது?
மருத்துவர் விளக்கத்தின் படி, ஆண்களின் நெஞ்சுப் பகுதி Pectoralis Minor, Pectoralis Major போன்ற தசைகளின் உதவியுடன் உறுதியானதாக இருக்கும். ஆனால் பெண்களின் மார்பகம் தசைகளால் அமைக்கப்படவில்லை. அது வெறும் Cooper’s Ligaments எனப்படும் ஜவ்வால் மட்டுமே தாங்கப்படுகிறது.
இந்த அமைப்பு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க உதவுவதற்காக இயற்கையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் பெண்களின் மார்பகம் இயல்பாக தொங்கும் அமைப்புடன் இருக்கும்.
சாதாரண Bra போதுமா?
பெண்கள் தினசரி செய்யும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, குதிப்பு போன்ற உடற்பயிற்சிகளின் போது, சாதாரண Bra அணிந்திருந்தால், மார்பகம் சுமார் 15 செ.மீ. வரை மேல்மேலும் கீழ்மேலும் அசைகிறது.
இந்த அசைவினால் Breast Ptosis எனப்படும் பிரச்சனை உருவாகிறது. அதாவது, மார்பகத்தை தாங்கும் Cooper’s Ligaments நீண்டு, மார்பகம் தளர்ந்து தொங்கும் நிலை ஏற்படும். இதனால், நீண்ட காலத்தில் மார்பக வடிவம் பாதிக்கப்படுவதோடு, முதுகு வலி போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.
Sports Bra-வின் நன்மைகள் என்ன?
இத்தகைய பிரச்சனைகளைத் தவிர்க்க Sports Bra முக்கிய பங்கு வகிக்கிறது என்று மருத்துவர் கூறுகிறார். Sports Bra, மார்பகத்தின் அசைவினை சுமார் 78% வரை குறைக்கிறது. Cooper’s Ligaments மீது ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. மார்பக தளர்ச்சி மற்றும் வடிவம் கெடுதல் போன்ற பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது. உடற்பயிற்சி செய்யும் போது முதுகு வலி ஏற்படாமல் தடுக்கும்.
பெரிய மார்பகமுள்ளவர்களுக்கு மட்டுமல்ல!
மருத்துவர் விளக்கத்தில் முக்கியமாக கூறியிருப்பது என்னவென்றால், Sports Bra-வின் தேவையென்பது பெரிய மார்பகம் கொண்ட பெண்களுக்கே மட்டும் அல்ல. அளவில் சிறிய மார்பகம் கொண்டவர்களும் Sports Bra அணிய வேண்டும். ஏனெனில், அவர்களுக்கும் காலப்போக்கில் மார்பக தளர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளது.
எப்போது Sports Bra அணிய வேண்டும்?
* ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது
* நடைப்பயிற்சி / ஜாக்கிங்
* யோகா மற்றும் ஏரோபிக்ஸ்
* குதித்து செய்யும் பயிற்சிகள்
இவை போன்ற செயல்பாடுகளில் Sports Bra அணிவது மார்பகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
View this post on Instagram
இறுதியாக..
பெண்களின் மார்பக ஆரோக்கியத்தை பாதுகாக்க Sports Bra மிக அவசியமானது. இது ஒரு பேஷன் சாய்ஸ் அல்ல; உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முக்கிய உபகரணம். மருத்துவர் ஐசக் அப்பாஸ் கூறியபடி, Sports Bra அணிவதால் மார்பக தளர்ச்சி, முதுகு வலி போன்ற பிரச்சனைகளை குறைக்கலாம். எனவே, தினசரி உடற்பயிற்சிகள் அல்லது ஓட்டப்பயிற்சிகளில் பெண்கள் Sports Bra அணிவது அத்தியாவசியம்.