Doctor Verified

முடி ஸ்ட்ராங்கா வளர வீட்டிலேயே தயார் செய்த ரோஸ்மேரி சீரம் செய்யலாம்.. எப்படி தயாரிப்பது?

How to make hair growth serum at home with rosemary: ரோஸ்மேரியில் உள்ள பண்புகள் கூந்தலுக்கு நன்மை பயக்கும். இந்நிலையில் கூந்தலை ஆரோக்கியமாகவும், நல்ல வளர்ச்சியும் அடைய ஹேர் சீரம் தயாரித்து பயன்படுத்தலாம். இதில் ரோஸ்மேரியிலிருந்து முடி வளர்ச்சி சீரம் எப்படி தயாரிப்பது என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
முடி ஸ்ட்ராங்கா வளர வீட்டிலேயே தயார் செய்த ரோஸ்மேரி சீரம் செய்யலாம்.. எப்படி தயாரிப்பது?


How to make hair growth serum at home with rosemary: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்குகிறது. இதனால் பெரும்பாலான மக்களுக்கு முடி உதிர்தல், உடைப்பு, பலவீனமடைதல் மற்றும் முடி வறட்சி போன்ற முடி பிரச்சினைகள் எழலாம். பொதுவாக இது ஊட்டச்சத்துக்கள் இல்லாதது, மோசமான இரத்த ஓட்டம் மற்றும் இன்னும் பல பிரச்சனைகளால் ஏற்படலாம். இது போன்ற சூழ்நிலையில், ரோஸ்மேரி போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்த ஆயுர்வேத மூலிகைகள் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

இதற்கு ரோஸ்மேரியில் நல்ல அளவு பாக்டீரியா எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை இருப்பதே காரணமாகும். இவை பல வழிகளில் முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்நிலையில், முடி வளர்ச்சியை ஊக்குவிக்க, வீட்டிலேயே ரோஸ்மேரியிலிருந்து சீரம் தயாரித்து பயன்படுத்தலாம். அதன் படி, டாவின் செக்டர் 12 இல் உள்ள ஆர்ச்சிட் ஆயுர்வேத கிளினிக்கின் மருத்துவர் ஆனந்த் திரிபாதி அவர்கள் முடி வளர்ச்சிக்கு வீட்டிலேயே ரோஸ்மேரியிலிருந்து சீரம் தயாரிப்பது எப்படி என்பது குறித்து விளக்கியுள்ளார். இதில் அதைப் பற்றிக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Rosemary For Hair Growth: வேகமாக முடி வளர ரோஸ்மேரியை இப்படி பயன்படுத்துங்க

முடி வளர்ச்சிக்கு உதவும் ரோஸ்மேரி சீரம்

ரோஸ்மேரி மற்றும் அரிசி நீர் முடி சீரம்

பொதுவாக அரிசி நீரில் நல்ல அளவிலான அமினோ அமிலங்கள், வைட்டமின் பி மற்றும் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளன. இவை முடியை மென்மையாக்கவும், நன்கு வளர்ச்சியடையவும் உதவுகிறது. இதைப் பயன்படுத்துவது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

முடிக்கு ரோஸ்மேரி மற்றும் அரிசி நீர் சீரம் தயாரிப்பது எப்படி?

இந்த சீரம் தயார் செய்ய, அரிசியைக் கழுவி, 1 கப் தண்ணீரில் 24 முதல் 48 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இப்போது இந்த தண்ணீரை வடிகட்டி, அதில் 1 கப் தண்ணீர் மற்றும் வைட்டமின்-ஈ மற்றும் ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய் சேர்க்கலாம். இப்போது அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து முடி மற்றும் உச்சந்தலையில் தெளிக்க வேண்டும். முக்கியமாக, இதைப் பயன்படுத்துவதற்கு முன்பாக ஒரு பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும். உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

ரோஸ்மேரி மற்றும் தேங்காய் எண்ணெய் முடி சீரம்

ரோஸ்மேரியுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்த சீரம் பயன்படுத்துவது முடியை வலுப்படுத்தவும், முடி உடைவதைத் தடுக்கவும், உச்சந்தலையை வளர்க்கவும், முடி சேதத்திலிருந்து பாதுகாக்கவும், முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Rosemary Hair Benefits: முடி வளர்ச்சிக்கு ரோஸ்மேரி தரும் ஆரோக்கிய நன்மைகள்

ரோஸ்மேரி மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் சீரம் தயாரிப்பது எப்படி?

பாத்திரம் ஒன்றில், 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்க வேண்டும். இப்போது 1 தேக்கரண்டி ரோஸ்மேரி இலைகளைச் சேர்த்து சூடாக்கலாம். இப்போது, அதை அணைத்து, அது குளிர்ந்ததும் வடிகட்ட வேண்டும். அதன் பின், அதில் சில துளிகள் எடுத்து உள்ளங்கையில் தடவி முடி மற்றும் உச்சந்தலையில் தடவலாம். பின்னர், லேசான கைகளால் உச்சந்தலையை மசாஜ் செய்ய வேண்டும். இதை அரை மணி நேரம் அல்லது இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்த பிறகு, காலையில் லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி முடியைக் கழுவி விடலாம்.

ரோஸ்மேரி மற்றும் கற்றாழை ஹேர் சீரம்

இந்த ஹேர் சீரத்தை முடிக்கு பயன்படுத்துவது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், உச்சந்தலையை தளர்த்தவும், உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், வறட்சியை நீக்கவும், உச்சந்தலையை ஈரப்பதமாக்கவும் உதவுகிறது. இந்த இயற்கையான ஈரப்பதத்தின் மூலம் முடியை பளபளப்பாகவும் மாற்றலாம். இது தவிர, இந்த சீரம் பயன்படுத்துவது முடியை ஆழமாக ஊட்டமளிக்க உதவுகிறது. மேலும் முடி உடைதலைத் தடுக்கிறது.

ரோஸ்மேரி மற்றும் கற்றாழை ஹேர் சீரம் தயாரிக்கும் முறை

இந்த ஹேர் சீரம் தயார் செய்ய, 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை 1 தேக்கரண்டி ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய் அல்லது ரோஸ்மேரி நீர் மற்றும் 1 தேக்கரண்டி ஜோஜோபா எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலக்க வேண்டும். இப்போது இதை முடி மற்றும் வேர்களில் லேசாக தடவி மசாஜ் செய்யலாம். அதன் பின்னர், உச்சந்தலையை சுத்தம் செய்ய வேண்டும்.

முடிவுரை

முடி வளர்ச்சியை விரைவாக அதிகரிக்கவும், ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் மாற்ற ரோஸ்மேரியுடன் இந்த பொருள்கள் கலந்த சீரம் தயாரித்து தடவ்லாம். ரோஸ்மேரி, அரிசி நீர், ரோஸ்மேரி மற்றும் கற்றாழை போன்றவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், முடி தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Rosemary for Hair: தலைமுடி நீளமாக, அடர்த்தியாக வளர… இந்த 3 ஆயிலை இப்படி யூஸ் பண்ணுங்க!

Image Source: Freepik

Read Next

அதிகமாக ஷாம்பு போடுவது உச்சந்தலை வறட்சியை ஏற்படுத்துமா? நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்

Disclaimer