அதிகமாக ஷாம்பு போடுவது உச்சந்தலை வறட்சியை ஏற்படுத்துமா? நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்

Can over shampooing cause dry scalp: பொதுவாக அதிகமாக ஷாம்பு கொண்டு முடி கழுவுவது வறண்ட உச்சந்தலைப் பிரச்சினைக்குக் காரணமாகலாம். இது பொடுகு மற்றும் முடி உதிர்தல் போன்ற பல முடி தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதில் அதிகமாக முடி கழுவுவது உச்சந்தலை வறண்டதற்கு காரணமா? அதிகமாக ஷாம்பு செய்வதன் தீமைகள் என்ன என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
அதிகமாக ஷாம்பு போடுவது உச்சந்தலை வறட்சியை ஏற்படுத்துமா? நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்


இன்று பலரும் முடி நீளமாக, கருப்பாக மற்றும் அடர்த்தியாகவும் வளர விரும்புகின்றனர். இதற்கு பல்வேறு முடி சார்ந்த பராமரிப்பு முறைகளைக் கையாள்கின்றனர். இன்னும் சிலர் முடி ஆரோக்கியமாக இருக்க விரும்பி அடிக்கடி ஷாம்பு செய்து குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஷாம்பு போடுவது என்பது முடியை சுத்தம் செய்யும் ஒரு செயல்முறையாகும். இதில், முடியில் குவிந்துள்ள அழுக்கு மற்றும் எண்ணெயை சுத்தம் செய்வதோடு முடி துளைகளும் திறக்கப்படுகிறது. ஆனால், தலைமுடியை தேவைக்கு அதிகமாக சுத்தம் செய்வது நல்லது என நினைக்கிறீர்களா?

இதனால் தான் பலருக்கும் தலைமுடியை அதிகம் ஷாம்பு செய்வது உச்சந்தலையை உலர்த்தி முடியின் ஆரோக்கியத்தை பாதிக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது. இது குறித்த தகவல்களை பெங்களூர், ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனை, மருத்துவ அழகுசாதன தோல் மருத்துவம் டாக்டர். ஷிரீன் ஃபர்ட்டடோ அவர்கள் பகிர்ந்துள்ளார். இதில் அது குறித்த விவரங்களைக் காணலாம்.

அதிகமாக ஷாம்பு பயன்படுத்துவதால் உச்சந்தலை வறட்சி ஏற்படுமா?

டாக்டர் ஷிரீன் ஃபர்ட்டடோ அவர்களின் கூற்றுப்படி, தலைமுடியை அதிகமாக ஷாம்பு செய்வது உச்சந்தலையை உலர்த்தக்கூடும். மேலும் இது தலைமுடியின் அமைப்பைக் கூட பாதிக்கலாம். உண்மையில், தலைமுடியை அதிகம் ஷாம்பு செய்வதால் முடி துளைகள் அவற்றின் இயற்கையான எண்ணெயை இழக்கிறது. இது முடி உடைவதற்கு வழிவகுக்கிறது. அடிக்கடி ஷாம்பு செய்வதால், வறண்ட உச்சந்தலை பிரச்சனையைத் தவிர, சருமத்தில் எரிச்சல் மற்றும் அரிப்பு பிரச்சனை போன்றவை அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Daily hair washing: தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா? இதன் தீமைகள் இங்கே!

முடிக்கு அதிகம் ஷாம்பு செய்வதால் ஏற்படும் தீமைகள்

முடி மந்தமாவது

அதிகமாக ஷாம்பு போடுவது தலைமுடியை மந்தமாக காட்டுகிறது. உண்மையில், நாம் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான ஷாம்புகளில், அவை நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க அதில் பியூட்டில்பராபென், புரோபில்பராபென் மற்றும் மெத்தில்பராபென் போன்ற பாதுகாப்புப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இந்த இரசாயனங்கள் அனைத்துமே முடியிலிருந்து ஈரப்பதத்தை நீக்கி, முடி மந்தமாவதற்கு வழிவகுக்கிறது.

உச்சந்தலை வறட்சியால் பொடுகுத் தொல்லை

அதிகமாக ஷாம்பு போட்டு முடியை அலசுவது உச்சந்தலையில் வறட்சி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். இதனால் பொடுகு பிரச்சனையும் அதிகரிக்கும். உண்மையில், அடிக்கடி தலைமுடியை ஷாம்பு செய்யும்போது, உச்சந்தலையில் எண்ணெய் பசை குறைந்து, உச்சந்தலை நீரிழப்புடன் காணப்படுகிறது. இது மீண்டும் மீண்டும் பொடுகு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இந்த வகை பொடுகு விரைவாக குணமடையாது. மேலும் இது சில நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் வரக்கூடும்.

முடி பலவீனம் மற்றும் வளர்ச்சி விகிதம் குறைவது

தலைமுடியை அடிக்கடி ஷாம்பு செய்வது முடியை பலவீனப்படுத்துவதுடன், அதன் வளர்ச்சியையும் பாதிக்கலாம். NIH அறிக்கைகளின் படி, அடிக்கடி தலைமுடியை ஷாம்பு போட்டு குளிப்பதும் முடி பலவீனத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர் குறிப்பிடுகிறார். இவை உச்சந்தலையில் உள்ள துளைகள் மற்றும் முடி வேர்களை சேதப்படுத்தில், முடி வளர்ச்சியைத் தடுக்கிறது. இதனால் முடி நீளம் அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையையும் அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: எவ்வளவு நாளுக்கு ஒருமுறை தலைமுடியைக் கழுவுவது நல்லது? டெர்மட்டாலஜிஸ்ட் தரும் விளக்கம் இதோ

முடியின் இயற்கை எண்ணெய்களைப் பாதிப்பு

முடியை கழுவுவதால் ஏற்படும் முக்கிய பாதிப்புகளில் ஒன்றாக, முடியிலிருந்து இயற்கையான எண்ணெய் பசை வெளியேறுவது அடங்கும். உண்மையில், ஷாம்பு என்பது தலைமுடியின் உச்சந்தலையில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் எண்ணெயை சுத்தம் செய்வதற்காகத் தயாரிக்கப்படுகிறது. ஆனால், அதில் காணப்படும் சில கடினமான இரசாயனங்கள், முடியின் துளைகளுக்கு தீங்கு விளைவிக்கிறது. இதனால் அவற்றின் இயற்கையான எண்ணெய் பசை இழக்க நேரிடலாம்.

செபோரியா தோல் அழற்சி

அதிகமாக ஷாம்பு போட்டு முடி கழுவுவதால் செபோரியா தோல் அழற்சி பிரச்சனை ஏற்படுகிறது. உண்மையில், தலைமுடியை அதிகமாக ஷாம்பு செய்யும்போது, உச்சந்தலை மிகவும் உணர்திறன் மிக்கதாக மாறுகிறது. பின்னர் அதில் தேங்கியுள்ள சருமம் அதிகரிக்கத் தொடங்குகிறது. மேலும், தொற்று ஏற்படும் அபாயமும் அதிகரிக்கலாம். இது போன்ற சூழ்நிலையில், செபோர்ஹெக் டெர்மடிடிஸின் அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். மேலும் இந்த பிரச்சனை ஏற்பட்டவுடன் மருத்துவரை அணுக வேண்டும்

ஒரு வாரத்திற்கு எத்தனை முறை ஷாம்பு போடலாம்?

தலைமுடியை வாரத்திற்கு அதிகபட்சம் 2 முறை ஷாம்பு செய்யலாம். இதை விட அதிகமாக ஷாம்பு செய்வது முடியின் வேர்களை சேதப்படுத்தும் எனவும், முடியின் அமைப்பை கெடுக்கும் எனவும் மருத்துவர் கூறுகிறார். இது தவிர, தலைமுடியைக் கழுவுவதற்கு முன்பு எப்போதும் ஷாம்பு செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதே சமயம், எப்போதும் மென்மையான ஷாம்பூவைப் பயன்படுத்த வேண்டும். இது முடியின் ஆரோக்கியத்தை பாதிக்காது.

மேலும், உச்சந்தலையை ஈரப்பதமாக்க கற்றாழை மற்றும் முட்டைகளைப் பயன்படுத்த வேண்டும். இந்த இரண்டு பொருட்களும் உச்சந்தலையை ஊட்டமளிப்பதோடு ஈரப்பதமாக்க உதவுகிறது. இது தவிர, இவை இரண்டும் முடியை ஊட்டமளிக்க உதவுகிறது. மேலும் இது முடியின் அமைப்பை மேம்படுத்தவும், உச்சந்தலை தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: அடிபொலி.. இனி Shampoo வேண்டாம்.. வீட்டில் இருக்கும் இந்த பொருட்கள் மட்டும் போதும்..

Image Source: Freepik

Read Next

Thyroid பிரச்னையால் கொத்து கொத்தா முடி கொட்டுதா.? மருத்துவர் கூறிய 5 எளிய டிப்ஸ் – இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்!

Disclaimer