Ways To Use Rosemary For Hair: முடி வளர்ச்சியை அதிகரிக்க பல்வேறு வழிகள் உள்ளன. இருப்பினும் இயற்கையாக தயாரிக்கப்படும் சில வகைப் பொருள்கள் முடி வளர்ச்சியை அதிகரிப்பதுடன், எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் இயற்கை முறையில் வளர்க்கலாம். முடி உதிர்தல், அரிப்பு, முடி வெடிப்பு போன்றவை முடி மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளாகும். தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைப் பயன்படுத்துவதற்குப் பதில் இயற்கை முறைகளை நாடுவது மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும். அந்த வகையில், இயற்கைத் தாவரமான ரோஸ்மேரி முடி மற்றும் உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. முடி வளர்ச்சிக்கு உதவும் ரோஸ்மேரியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் காணலாம்.
முடி வளர்ச்சிக்கு ரோஸ்மேரியை எப்படி பயன்படுத்துவது?
முடிக்கு ரோஸ்மேரியை பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம். இப்போது முடி வளர்ச்சிக்கு ரோஸ்மேரியைப் பயன்படுத்தும் சில வழிகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Thick Hair Tips : மெலிந்த தலைமுடியை அடர்த்தியாக்க இதை ஃபாலோ பண்ணுங்க!!
ரோஸ்மேரி எண்ணெய்
ரோஸ்மேரியைப் பயன்படுத்தும் பொதுவான வழியாக எண்ணெய் உள்ளது. இதன் இனிமையான நறுமணம் மற்றும் நன்மைகள் முடி வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது. இவை சிறந்த அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றாகும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முடி வளர்ச்சியைத் தூண்டி முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது. இவற்றை நேரடியாக முடிக்குப் பயன்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.
மற்ற எண்ணெய்களுடன் சேர்த்தல்
ரோஸ்மேரி எண்ணெயை தலைமியில் மசாஜ் செய்ய மற்றொரு வழியாக, இதனை மற்ற எண்ணெய்களுடன் கலந்து பயன்படுத்தலாம். அதாவது இந்த எண்ணெயை ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம். மேலும், இதனை அதிக அளவில் பிசுபிசுப்பு தரும் எண்ணெய்கள், லாவெண்டர் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்றவற்றில் சேர்த்துப் பயன்படுத்தலாம். இது போன்று மற்ற எண்ணெய்களுடன் கலந்து ரோஸ்மேரி ஆயிலை மசாஜ் செய்வது கூடுதல் பலன்களைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Hair Fall In Men: ஆண்களின் தலைமுடி உதிர்வதற்கான அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்
ஷாம்புடன் ரோஸ்மேரி
ரோஸ்மேரி எண்ணெயை மற்றொரு விதமாக ஷாம்பூவில் கலந்து பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்துவது அதன் சுத்திகரிப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது. ஷாம்பூ உடன் 5 முதல் 8 சொட்டு வரையிலான ரோஸ்மேரி எண்ணெயைச் சேர்த்துக் கொள்ளலாம். பின் இந்த ஷாம்பூவை உச்சந்தலையில் சுமார் 3 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். மற்ற எண்ணெய்களைப் போல அல்லாமல், இந்த ரோஸ்மேரி எண்ணெயில் அதிக கொழுப்பு இல்லை. இவற்றை ஷாம்பூவுடன் சேர்த்து பயன்படுத்துவது முடி உதிராமல் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.
ரோஸ்மேரி தேநீர் வகை
ரோஸ்மேரியை ஆயிலாக மட்டுமல்லாமல் ரோஸ்மேரி தேநீரை முடி வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம். ரோஸ்மேரியில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள், பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் மற்றும் பூஞ்சை காளாண் பண்புகள் போன்றவை உள்ளன. சில தேக்கரண்டி ரோஸ்மேரியை எடுத்து ஒரு கப் அல்லது இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கலாம். சுமார் 3-5 நிமிடங்களுக்குப் பிறகு வெப்பம் குறைந்தவுடன், அது குளிராகும் வரை காத்திருந்து பின்பு அதனை வைத்து முடியைக் கழுவலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Natural Hair Oil: முடி கொட்டும் கவலை இனி வேண்டாம்.. இயற்கை முறை தீர்வு இதோ!
ரோஸ்மேரி டீயை உட்கொள்ளுதல்
கூந்தல் வளர்ச்சிக்கும், உடலின் பல்வேறு நன்மைகளுக்கும் ரோஸ்மேரியை டீயாக தயாரித்து அருந்தலாம். இவை முடி ஆரோக்கியத்தை உடலின் உட்புறத்தில் இருந்து மேம்படுத்துகிறது. ரோஸ்மேரியில் உள்ல உர்சோலிக் அமிலம் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கிறது. மேலும், இவை முடி உதிர்வைத் தடுப்பதுடன் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. இவை முடியில் மயிர்க்கால்கள்கள் வரை இரத்த ஓட்டத்தை சீராக்கி சிறந்த ஊட்டச்சத்துகளை அளிக்கிறது. இது கூந்தலுக்கு பளபளப்பையும், மிருதுவான தன்மையையும் அதிகரிக்கிறது.
இது போன்ற வழிகளில் ரோஸ்மேரியைப் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தலைத் தவிர்த்து கூந்தலை வலுவாக்கி வளர்ச்சியடையச் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Remedy : ஒரே மாதத்தில் முடி இடுப்புவரை நீளமாக வளர இதை செய்தால் போதும்!
Image Source: Freepik