Sat Sep 12, 2026 | 12:59 AM IST

Hair Growth Tips: உங்க தலைமுடி எலி வால் மாதரி ஒல்லியா இருக்கா? இந்த 3 ஹேர் மாஸ்கை பயன்படுத்துங்க!

Winter Hair Mask For Hair Growth: அடர்த்தியான மற்றும் நீளமான கூந்தல் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால், மாசுபாடு, மோசமான வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தவறான உணவு பழக்கங்களால் முடி உதிர்வு, முடி வறட்சி, அடர்த்தி குறைவு என பல பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக, குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியால் முடி அதிகமாக உதிரும்.

முடி உதிர்வை கட்டுப்படுத்த சந்தைகளில் பல வகையான எண்ணெய்கள் மாற்றும் மூலிகை பொருட்கள் கிடைக்கிறது. ஆனால், அவை சரியான பலனை நமக்கு தருவதில்லை. இதில் காணப்படும் கெமிக்கல்கள் உங்கள் தலைமுடி பிரச்சினையை அதிகரிக்கும். மட் உதிர்வை கட்டுப்படுத்தி முடியை நீளமாக வழக்க விரும்பினால், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஹேர் மாஸ்க் எப்படி செய்வது என நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். இவை முடி உதிர்வை கட்டுப்படுத்தி, நீளமாக வளர உதவும்.

இந்த பதிவும் உதவலாம் : Remedies For Silky Hair: பட்டு போல் பளபளக்கும் மிருதுவான கூந்தல் வேண்டுமா?… வீட்டுவைத்தியம் இதோ!

வெங்காய சாறு ஹேர் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

வெங்காய சாறு - 4 ஸ்பூன்.
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்.
எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்.
தேன் - 1 ஸ்பூன்.

வெங்காய சாறு ஹேர் மாஸ்க் செய்முறை:

வெங்காய சாறு ஹேர் மாஸ்க் செய்ய, ஒரு வெங்காயத்தை தட்டி அதன் சாறு எடுக்கவும். இந்த சாற்றில் அனைத்து பொருட்களையும் கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். அதன் பிறகு லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவவும். இந்த மாஸ்க் முடி வளர்ச்சியை அதிகரித்து முடியை பளபளப்பாக மாற்றுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Split Ends Removing Tips: நுனி முடி பிளவில் இருந்து விடுபட இந்த டிப்ஸ ஃபாலோப் பண்ணுங்க.

இலவங்கப்பட்டை மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்.
இலவங்கப்பட்டை தூள் - 2 ஸ்பூன்.

இலவங்கப்பட்டை ஹேர் மாஸ்க் செய்முறை:

இலவங்கப்பட்டை மற்றும் தேங்காய் எண்ணெயைக் கொண்டு ஹேர் மாஸ்க் தயாரிக்க, இரண்டையும் கலந்து பேஸ்ட்டைத் தயாரிக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை முடியின் வேர்களில் தடவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பிறகு, தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த முகமூடி உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : Mustard Oil For Hair: கரு கரு முடிக்கு கடுகு எண்ணெயுடன் இந்த 3 பொருள்களை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க.

வாழைப்பழம் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

பழுத்த வாழைப்பழம் - 1.
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்.

வாழைப்பழம் ஹேர் மாஸ்க் செய்முறை:

வாழைப்பழம் மற்றும் தேங்காய் எண்ணெயைக் கொண்டு ஹேர் மாஸ்க் செய்ய, இரண்டையும் கலந்து பேஸ்ட்டைத் தயாரிக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பிறகு லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவவும். பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம் முடி உடைவதைத் தடுத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த மாஸ்க் முடியை வளர்த்து பளபளப்பாக்குகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

கொத்து, கொத்தா முடி கொட்டுதா?… தடுப்பதற்கான எளிய வழிகள் இதோ!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content