$
முடி இருந்தால் மட்டும் போதாது, அழகாக இருப்பதும் முக்கியம். மென்மையான முடியை அடைய வீட்டிலேயே நீங்கள் பின்பற்ற வேண்டிய சில இயற்கை வைத்தியங்கள் இதோ…
பழங்கால காப்பியங்கள் முதல் இன்றைய ஹைக்கூ கவிதைகள் வரை பெண்களின் அழகை விட அவர்களது கூந்தல் பற்றி வர்ணிக்கப்படும் வரிகள் அதிகம் உண்டு. அந்த அளவிற்கு பெண்ணின் அழகிற்கு கூந்தல் முக்கியமானதாக கருதப்படுகிறது. கூந்தல் நீளமாக இருந்தால் மட்டும் போதாது, பட்டு போன்ற மிருதுவான கூந்தல் தான் பார்க்க வசீகரமாக இருக்கும்.

பலருக்கும் வறட்சி, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு சரியான முடி பராமரிப்பு இல்லாதது முக்கிய காரணமாகும். எனவே உங்கள் கூந்தலை பட்டு போல் பராமரிக்க உதவக்கூடிய வீட்டு வைத்தியங்களை கொண்டு வந்துள்ளோம்
ஆளி விதைகள்:
கூந்தல் பராமரிப்பு என்று வந்தாலே, ஆளி விதைகள் முதலிடம் பிடிக்கிறது. இதனை தண்ணீரில் ஊறவைத்தால் கிடைக்கக்கூடிய ஜெல்லானது கூந்தலுக்கு இயற்கையான கன்டிஷ்னராக செயல்படுகிறது.

இதை முடியில் அப்ளே செய்து குளித்து வந்தால், வறட்சி நீங்குவதோடு, முடி வளர்ச்சியும், அழகும் பெறும்.
கற்றாழை:

அலோ வேரா ஜெல் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஈ முடி பளபளப்பிற்கும், மிருதுவாகவும் மிகவும் நல்லது. பொடுகு போன்ற பல பிரச்சனைகளுக்கு கற்றாழை ஜெல் சிறந்த தீர்வாகும். கற்றாழை ஜெல் முடிக்கு இயற்கையான மாய்ஸ்சரைசர். அதை முடிக்கு தடவலாம். அது நன்றாக இருக்கும்.
வெந்தயம், கஞ்சி தண்ணீர்:
கெரட்டின் சிகிச்சையானது கூந்தலுக்கு மிருதுவாகவும் பொலிவும் தரக்கூடிய ஒன்றாகும். இதை வீட்டிலேயே செய்யலாம். இதற்கு வெந்தயம் மற்றும் கஞ்சி தண்ணீர் மட்டும் போதும்.

அரைத்த வெந்தயத்துடன், கஞ்சி தண்ணீரை சேர்த்து கெட்டியான பேஸ்ட்டை தயார்படுத்திக் கொள்ளவும். இதனை முடியில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசவும். இது முடியை பளபளப்பாகவும் மிருதுவாகவும் ஆக்குகிறது. மேலும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் முடி வேர்களை பலப்படுத்துகிறது.
தயிர், முட்டை:

தயிர் மற்றும் முட்டை முடி பளபளப்பிற்கு நல்லது. தயிரை மட்டும் கூட தலையில் நேரடியாக தடவலாம். முட்டையை இதனுடன் சேர்த்து தடவுவது கூடுதல் பளபளப்பை தரும். கற்றாழை போன்றவற்றை தயிரில் கலந்து தடவலாம். இதேபோல், முட்டையை கூந்தல் பராமரிப்பிற்கான பிற பொருட்களுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் முடியை பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாற்றும். முடி வளர்ச்சிக்கும் நல்லது.
தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த முடி கண்டிஷனர் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். எனவே தினந்தோறும் முடிக்கு தேங்காய் எண்ணெய் தடவுவது அல்லது தேங்காய் எண்ணெய் வைத்து தலை குளிப்பது கூந்தல் வறட்சியை நீக்கி, பொலிவை அதிகரிக்க உதவும்.
Image Source: Freepik