Mustard Oil For Hair Growth: குளிர்காலம் என்றாலே பலரும் பல வகையான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அந்த வகையில் முடியின் தரம் மோசமடைவதும் அடங்கும். எனவே குளிர்ந்த காலநிலையில் தலைமுடிக்குக் கூடுதல் பராமரிப்பு தேவைப்படுகிறது. முடி வறட்சி, முடி உதிர்தல், முடி உடைதல் போன்றவை குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவன பிரச்சனைகளே.
இந்த பிரச்சனைகளுக்குச் சிறந்த தீர்வாக கடுகு எண்ணெய் பெரிதும் உதவுகிறது. கடுகு எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் முடியின் தரத்தை மேம்படுத்தலாம் மற்றும் முடியின் வளர்ச்சி அதிகரிக்கலாம். இதில், முடி உதிர்வு பிரச்சனையைத் தவிர்த்து முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்க கடுகு எண்ணெயுடன் சில பொருள்களைக் கலந்து பயன்படுத்தலாம். இது கூடுதல் நன்மைகளைத் தரும்.
இந்த பதிவும் உதவலாம்: Guava Leaves For Black Hair: வெள்ளை முடி கருப்பாக மாற கொய்யா இலையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்துங்க.
முடி வளர்ச்சியடைய கடுகு எண்ணெயுடன் சேர்க்க வேண்டியவை
கடுகு எண்ணெயுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைச் சேர்த்து பயன்படுத்தும் போது, முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் முடியை ஆரோக்கியமாக வளர வைக்கிறது.
கருஞ்சீரகம் விதைகள்
கடுகு எண்ணெயுடன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருஞ்சீரகத்தைச் சேர்ப்பது அதன் ஊட்டச்சத்தை அதிகரிக்க உதவுகிறது. இது கலோஞ்சி அல்லது நைஜெல்லா விதைகள் என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றை உணவில் பல வழிகளில் பயன்படுத்தலாம். நைஜெல்லா விதைகள் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதற்கு இந்த விதைகளில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளே ஆகும். இது முடியை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.
செம்பருத்தி பூக்கள்
முடி வளர்ச்சிக்கு உதவும் ஆரோக்கியமானவற்றில் செம்பருத்தி பூக்களும் ஒன்றாகும். கடுகு எண்ணெயுடன் செம்பருத்தி பூக்களைக் கலந்து பயன்படுத்துவது முடி வளர்ச்சியடைவதை ஊக்குவிக்கிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பல வகையான வைட்டமின்கள் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
கறிவேப்பிலை
கறிவேப்பிலையை நிறைய உண்பதால் முடி கருப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளரும் என்று பலரும் சொல்வதை நாம் அறிந்திருப்போம். கறிவேப்பிலையும் வைட்டமின் பி, புரதம் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது முடியைப் பலப்படுத்துவதுடன், முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Clove Water Hair Benefits: பொடுகுத் தொல்லையை நீக்கும் கிராம்பு நீர். இப்படி பயன்படுத்துங்க.
முடி வளர்ச்சிக்கு கடுகு எண்ணெய் தயாரிக்கும் முறை
தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் கடுகு எண்ணெயை இந்த வழிகளில் தயாரித்து பயன்படுத்தலாம்.
- முதலில் கடுகு எண்ணெயை இரும்பு பாத்திரம் ஒன்றில் 200 மிலி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் இதில் 2 ஸ்பூன் நைஜெல்லா விதைகள், 5 செம்பருத்திப் பூக்கள், 20-25 கறிவேப்பிலை போன்றவற்றைச் சேர்க்கவும்.
- பிறகு மிதமான தீயில் 10 நிமிடங்கள் எண்ணெயை சமைக்க வேண்டும்.
- இதில் சேர்க்கப்பட்ட பொருள்கள் கடுகு எண்ணெயுடன் நன்றாகக் கலந்திருப்பதைப் பார்க்கலாம்.
- அதன் பின் எரிவாயுவை அணைத்து எண்ணெயை 10 மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.
- 10 மணி நேரத்திற்கு பிறகு, எண்ணெயை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் வைக்க வேண்டும்.
- இந்த எண்ணெயை உச்சந்தலையில் நன்கு மசாஜ் செய்து, 2 மணி நேரம் கழித்து லேசான ஷாம்பு கொண்டு கழுவி விடலாம்.

இந்த வழிகளில் கடுகு எண்ணெயைத் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும் முடியும். எனினும், முடி அல்லது உச்சந்தலையில் ஏதேனும் பிரச்சனை இருப்பின், இந்த எண்ணெயைப் பயன்படுத்தும் முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Veppilai For Dandruff: பொடுகு தொல்லையிலிருந்து சீக்கிரம் விடுபட வேப்பிலையை இந்த வழிகளில் பயன்படுத்துங்க.
Image Source: Freepik