Clove Water Benefits For Reduce Dandruff: இன்று பலரும் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறையில் ஏற்படும் பல்வேறு இடையூறுகள் காரணமாக, முடி மற்றும் சரும பராமரிப்புகளில் கவனம் செலுத்துவதில்லை. இதன் விளைவாக, முடி மற்றும் சருமம் தொடர்பான பிரச்சனைகளின் ஆபத்தும் அதிகரிக்கிறது. இதில் முடி பராமரிப்பு கவனமின்மையால் முடி உதிர்தல், முன்கூட்டியே முடி நரைத்தல், பொடுகு மற்றும் உயிரற்ற மற்றும் மந்தமான முடி பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம்.
தற்போது பல்வேறு முடி பராமரிப்புப் பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன. எனினும் அதன் தயாரிப்பில் இராசயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் பல்வேறு வகையான விளைவுகள் ஏற்படலாம். இதற்கு மாற்றாக, மூலிகைகள் மற்றும் இயற்கை பொருள்களைப் பயன்படுத்தி முடி பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கலாம். இதைப் பயன்படுத்துவதால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. அதன் படி, கிராம்பு நீரை முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Coconut Water Hair Mask: நீளமான, கருகரு கூந்தலுக்கு தேங்காய் தண்ணீர் ஹேர் மாஸ்க்கை இப்படி பயன்படுத்துங்க.
பொடுகு நீக்க கிராம்பு நீர் தரும் நன்மைகள்
உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கிராம்பு பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இதில் உள்ள மருத்துவ குணங்கள், பல்வேறு நோய்களுக்கு நன்மை தருகிறது. ஆயுர்வேதத்தில் கிராம்பு ஆனது சளி, இருமல், காய்ச்சல், மற்றும் வைரஸ் தொற்றுக்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதன் பண்புகள் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
இது குறித்து ஆரோக்யா ஹெல்த் சென்டரின் ஆயுர்வேத டாக்டர் எஸ்.கே.பாண்டே அவர்கள் கூறுகையில், “வைட்டமின்கள், கால்சியம், புரதம், இரும்பு, பொட்டாசியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ் போன்றவை உள்ளன. இது தவிர வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் போன்றவை கிராம்புகளில் காணப்படுகிறது. முடிக்கு கிராம்புகளை பல வழிகளில் பயன்படுத்தலாம்” எனக் கூறியுள்ளார்.
பொடுகு எப்படி உருவாகிறது தெரியுமா?
முடி மற்றும் உச்சந்தலையில் முறையற்ற சுத்தத்தினால், அழுக்குகள் குவியலாம். இந்த அழுக்கு காரணமாக, தலையில் பொடுகு அதிகரிக்கும் அபாயம் உண்டாகும். இதன் காரணமாக, முடி உதிர்தல், உச்சந்தலையில் தொற்று உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரச்சனைகள் ஏற்டலாம். முடியில் பொடுகு அதிகமாகும் போது, கூந்தலுக்குக் கிடைக்க வேண்டிய போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல், முடி பலவீனமடையலாம்.
இந்த பொடுகை நீக்க இயற்கை வழியாக கிராம்பு எண்ணெயை முடி மற்றும் உச்சந்தலையில் தடவலாம். கிராம்புகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் போன்ற பண்புகள் நிறைந்துள்ளது. இவை தலைமுடியில் உள்ள அழுக்குகளுடன் பொடுகை நீக்க உதவுகிறது. இது தவிர கிராம்பு நீரில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் செப்டிக் பண்புகள் உள்ளது. இவை அழற்சி மற்றும் தொற்றுக்கான அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Egg Hair Mask: முடி வறட்சி, முடி கொட்டும் பிரச்சனையா? இந்த ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க.
தலைக்கு கிராம்பு நீர் பயன்படுத்துவது எப்படி
தலைமுடிக்கு கிராம்பு தண்ணீரை வீட்டிலேயே எளிதாக தயார் செய்யலாம். இதில் கிராம்பு நீர் தயாரிக்கும் முறை குறித்து காணலாம்
- முதலில் பாத்திரம் ஒன்றில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் கிராம்புகளைப் போட வேண்டும்.
- இந்த நீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- இதில் சில துளி தேயிலை மர எண்ணெயைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- பிறகு இந்த நீரை நன்கு கலந்து ஸ்ப்ரே பாட்டில் ஒன்றில் வைக்கவும்.
- இப்போது உச்சந்தலை மற்றும் கூந்தலில் ஸ்ப்ரேயைத் தடவி, நன்றாக மசாஜ் செய்து இரவு முழுவதும் விட வேண்டும்.
- காலையில் சுத்தமான தண்ணீர் அல்லது லேசான ஷாம்பு கொண்டு முடியைக் கழுவலாம்.
- இவ்வாறு வாரத்திற்கு இரு முறை செய்து வர பொடுகு விரைவில் நீங்கி விடும்.

கிராம்பு நீர் தரும் மற்ற நன்மைகள்
தலைமுடிக்கு கிராம்பு நீரைப் பயன்படுத்துவது, பொடுகு தொல்லை மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகளுக்கு நிவாரணம் தருகிறது. இது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும், உச்சந்தலையில் தொற்று தொடர்பான பிரச்சனைகளைக் குணப்படுத்தவும் உதவுகிறது.
எனினும், உச்சந்தலையில் அல்லது முடி தொடர்பான ஒவ்வாமை பிரச்சனை கொண்டவர்கள், கிராம்பு நீரைப் பயன்படுத்தும் முன்னதாக கட்டாயம் மருத்துவர் அல்லது நிபுணரை அணுக வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Hibiscus For Hair: கரு கரு கூந்தலுக்கு செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க.
Image Source: Freepik