பொடுகுத் தொல்லையை விரைவில் போக்க முல்தானிமிட்டியை இப்படி யூஸ் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
பொடுகுத் தொல்லையை விரைவில் போக்க முல்தானிமிட்டியை இப்படி யூஸ் பண்ணுங்க

அந்த வகையில் சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், முடி ஆரோக்கியத்திற்கு முல்தானி மிட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. பொடுகு ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவை உச்சந்தலையில் தொடர்ந்து அரிப்பு, செதில்கள் போன்றவற்றால் ஏற்படலாம். முடி தொடர்பான பிரச்சனைகளுக்கு முல்தானி மிட்டி மிகவும் சக்தி வாய்ந்ததாக அமைகிறது. இதில் அரிக்கும் உச்சந்தலையை பராமரிக்க முல்தானி மிட்டியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து காணலாம். இதன் ஆழமான சுத்திகரிப்பு மற்றும் குளிர்ச்சியான பண்புகள் பொடுகுக்கு சிறந்த இயற்கை தேர்வாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Dandruff Treatment: பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபட இந்த 3 எளிய வழிகளை பின்பற்றுங்கள்!

பொடுகுத் தொல்லையை நீக்கும் முல்தானி மிட்டி

முல்தானி மிட்டி ஆனது மெக்னீசியம், கால்சியம் மற்றும் சிலிக்கா போன்ற தாதுக்களைக் கொண்டுள்ளது. இவை உச்சந்தலையை மெதுவாக சுத்தப்படுத்த உதவுகிறது. முல்தானி மிட்டியில் உள்ள உறிஞ்சக்கூடிய பண்புகள் தலைமுடியில் பொடுகுக்கு பங்களிக்கக் கூடிய அதிகப்படியான எண்ணெய், அழுக்கு மற்றும் மயிர்க்கால்களை அடைக்கும் அசுத்தங்களைப் போக்க உதவுகிறது. மேலும் முல்தானி மிட்டியில் நிறைந்துள்ள குளிர்ச்சியான பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் வீக்கம் அல்லது எரிச்சலைக் குணப்படுத்துகிறது. மேலும் இவை அரிப்பிலிருந்து நிவாரணம் தருகிறது.

பொடுகு நீங்க முல்தானி மிட்டியைப் பயன்படுத்துவதற்கான வழிகள்

முல்தானி மிட்டி மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்

தேவையானவை

  • முல்தானி மிட்டி - 2 தேக்கரண்டி
  • தயிர் - 2 தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை

  • இந்த ஹேர் மாஸ்க் தயார் செய்வதற்கு தயிர், முல்தானி மிட்டி இரண்டையும் கெட்டியான பேஸ்ட்டாக கலக்க வேண்டும்.
  • பிறகு இதை உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
  • அதன் பிறகு தலைமுடியைக் கழுவிக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Clove Water Hair Benefits: பொடுகுத் தொல்லையை நீக்கும் கிராம்பு நீர். இப்படி பயன்படுத்துங்க.

முல்தானி மிட்டி மற்றும் கற்றாழை ஹேர் மாஸ்க்

தேவையானவை

  • முல்தானி மிட்டி - 2 தேக்கரண்டி
  • கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை

  • முல்தானி மிட்டியுடன் கற்றாழை ஜெல்லைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • பின் இதை 20 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவிக் கொள்ளலாம்.
  • கற்றாழையில் நிறைந்துள்ள இனிமையான பண்புகள் முல்தானி மிட்டியின் சுத்திகரிப்புச் செயலை நிறைவு செய்கிறது.
  • இது பொடுகைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது.

முல்தானி மிட்டி மற்றும் எலுமிச்சை ஹேர் மாஸ்க்

தேவையானவை

  • முல்தானி மிட்டி - 2 டேபிள் ஸ்பூன்
  • அரை எலுமிச்சைச் சாறு
  • தண்ணீர் - சிறிதளவு

பயன்படுத்தும் முறை

  • முல்தானி மிட்டியுடன் அரை எலுமிச்சைச் சாறு, சிறிதளவு தண்ணீர் போன்றவற்றைச் சேர்த்து பேஸ்ட்டாக கலக்க வேண்டும்.
  • இதை உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கலாம்.
  • அதன் பிறகு, வெதுவெதுப்பான நீரில் முடியைக் கழுவிக் கொள்ளலாம்.
  • முல்தானி மிட்டி மற்றும் எலுமிச்சைச் சாறு இரண்டும் பொடுகைக் குறைக்க உதவுகிறது.

இவ்வாறு எளிமையான முறையில் முல்தானி மிட்டியைப் பயன்படுத்தி பொடுகைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Veppilai For Dandruff: பொடுகு தொல்லையிலிருந்து சீக்கிரம் விடுபட வேப்பிலையை இந்த வழிகளில் பயன்படுத்துங்க.

Image Source: Freepik

Read Next

குளிக்கும்போது உங்கள் தலைமுடி உதிர்கிறதா?… அதைத் தடுக்க இந்த 4 விஷயங்கள் போதும்!

Disclaimer