Dandruff home remedies: தீராத பொடுகுத் தொல்லையால் அவதியா? இந்த ரெமிடிஸ் யூஸ் பண்ணுங்க

Best home remedies to get rid of dandruff for clean scalp: சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் சந்திக்கும் பொதுவான தலைமுடி சார்ந்த பிரச்சனைகளில் பொடுகு சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். இதிலிருந்து விடுபட சில ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்களைக் கையாள வேண்டும். இதில் பொடுகுத் தொல்லையைப் போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Dandruff home remedies: தீராத பொடுகுத் தொல்லையால் அவதியா? இந்த ரெமிடிஸ் யூஸ் பண்ணுங்க

How do you get rid of dandruff fast naturally: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, போதிய ஊட்டச்சத்து இல்லாமை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் முடி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதில் முடி உதிர்வு, வறண்ட முடி, பொடுகு பிரச்சனை, நுனி முடி பிளவு உள்ளிட்ட பல்வேறு முடி பிரச்சனைகள் எழுகின்றன. பொடுகு பிரச்சனை முக்கியமாக குளிர்காலத்தில் ஏற்படக்கூடியதாகும். இது மழைக்காலத்தில் மேலும் தீவிரமடையலாம்.

ஏனெனில், குளிர்ந்த காலநிலையில் வறண்ட ஈரப்பதம் காரணமாக ஏற்படும் உலர் காற்று பொடுகு பிரச்சனையைத் தூண்டுகிறது. ஈரமான உச்சந்தலையின் ஈரப்பதம் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க பலரும் சந்தையில் கிடைக்கும் முடி பராமரிப்புப் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் சில வேதிப்பொருள்கள் கலந்திருக்கலாம். இது பக்க விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புண்டு. இதில் பொடுகு பிரச்சனையைத் தவிர்க்க உதவும் எளிமையான வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Itchy Scalp Remedies: உச்சந்தலை அரிப்பால் அவதியா? இந்த ஐந்து பொருள்கள் போதும்!

பொடுகை நீக்க உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்கள்

வேம்பு ஹேர் மாஸ்க்

வேப்பங்கொட்டையில் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இது உலர் உச்சந்தலை, பொடுகு மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளின் எதிர்மறை விளைவுகளைக் குறைக்கிறது. மேலும் இதில் வைட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற முக்கிய தாதுக்கள் நிறைந்திருப்பதால் முடி உதிர்வு மற்றும் பொடுகை நிறுத்துவதற்கு உதவுகிறது.

உச்சந்தலையின் மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டம் முடியின் வேர்களை வலுவாக மற்றும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இது தலைமுடியை ஆரோக்கியமாகவும், வலுவாகவும், பளபளப்பாகவும் வைக்கிறது. இதற்கு கொதிக்கும் நீரில் நெல்லிக்காய் சாறு மற்றும் நொறுக்கப்பட்ட வேப்பம்பூ போன்றவற்றைச் சேர்த்து பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் குளிர்வித்து இந்த மாஸ்க் தயார் செய்யப்படுகிறது. இந்தக் கலவையைத் தலைமுடிக்குக் கீழே உச்சந்தலையில் தடவ வேண்டும். இதை 3 முதல் 5 நிமிடங்கள் மசாஜ் செய்வதன் மூலம் உச்சந்தலையில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது. இப்போது மென்மையான ஷாம்பு கொண்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்.

எலுமிச்சைச் சாறு, தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்

எலுமிச்சைச் சாற்றில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையிலிருந்து அதிகப்படியான எண்ணெயை அகற்ற உதவுகிறது. மேலும், தேங்காய் எண்ணெய் பொடுகை நீக்க சிறந்த எண்ணெய்களில் ஒன்றாகும். இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளது. இவை செதில் உச்சந்தலைக்கு சிகிச்சையளிக்கவும், வறட்சியைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்த ஹேர் மாஸ்க் தயார் செய்வதற்கு, முதலில் 4-5 தேக்கரண்டி அளவிலான தேங்காய் எண்ணெயுடன், 1-2 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதை நன்கு கலந்து பருத்தி உருண்டையைப் பயன்படுத்தி, இந்தக் கலவையை உச்சந்தலையில் தேய்த்துக் கொள்ளலாம். இதை 15 முதல் 20 நிமிடங்கள் வைத்து, பிறகு தலைமுடியை ஷாம்பூ கொண்டு கழுவிக் கொள்ளலாம். சிறந்த நன்மைகளைப் பெற வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Curry leaves for Dandruff: பொடுகு பிரச்சனை முற்றிலும் நீங்க… கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்திப் பாருங்க!

கற்றாழை ஜெல்

பொடுகை சுலபமான முறையில் தடுக்க உதவும் எளிய தீர்வுகளில் கற்றாழை ஜெல்லும் அடங்கும். இது நன்கு அறியப்பட்ட ஈரப்பதமிக்க பொருளாகும். தலைமுடிக்குக் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் பொடுகை ஏற்படுத்தும் உலர்ந்த உச்சந்தலைக்கு சிகிச்சையளிக்கிறது. இவை உச்சந்தலைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. இது முடி உதிர்தலைக் கட்டுப்படுத்துவதுடன், தலைமுடியை பட்டுப்போன்று வைக்க உதவுகிறது.

இதற்கு புதிய கற்றாழை இலையிலிருந்து ஜெல்லைப் பிரித்தெடுத்து, அதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, மென்மையான பேஸ்ட் உருவாகும் வரை கலக்க வேண்டும். வேண்டுமென்றால் இதில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஹேர் பேக்கை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவ வேண்டும். இதை ஒரு மணி நேரம் வைத்து பின் கழுவி விடலாம்.

டீ ட்ரீ எண்ணெய் மசாஜ்

இது அதன் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் குணங்களால் நன்கு அறியப்படுகிறது. டீ ட்ரீ எண்ணெய் ஆனது உலர்ந்த உச்சந்தலையில் மற்றும் பொடுகுக்கு முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட ஷாம்புகளில் ஒரு பொதுவான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹேர் பேக்கைத் தயார் செய்வதற்கு தேங்காய், ஜோஜோபா அல்லது ஆலிவ் எண்ணெயுடன் இந்த டீ ட்ரீ எண்ணெயைச் சில துளிகள் சேர்த்து உச்சந்தலையில் மசாஜ் செய்ய வேண்டும். இதை 10 நிமிடங்கள் அப்படியே வைத்து, பின் கழுவிக் கொள்ளலாம். எந்தவொரு வெப்ப உபகரணங்களையும் பயன்படுத்துவதற்கு முன்பாக ஹேர்பேக்கை அகற்றிய பின், தலைமுடியை உலர அனுமதிக்க வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: பொடுகுத் தொல்லையை விரைவில் போக்க முல்தானிமிட்டியை இப்படி யூஸ் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

தேங்காய் எண்ணெய் Vs தேங்காய் பால்: முடி வளர்ச்சிக்கு எது சிறந்தது.?

Disclaimer