$
How To Remove Dandruff Permanently At Home Naturally: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, போதிய ஊட்டச்சத்து இல்லாமை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் முடி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதில் முடி உதிர்வு, வறண்ட முடி, பொடுகு பிரச்சனை, நுனி முடி பிளவு உள்ளிட்ட பல்வேறு முடி பிரச்சனைகள் எழுகின்றன. பொடுகு பிரச்சனை முக்கியமாக குளிர்காலத்தில் ஏற்படக்கூடியதாகும். இது மழைக்காலத்தில் மேலும் தீவிரமடையலாம்.
ஏனெனில் பருவமழையில் காணப்படும் அதிக ஈரப்பதம் காரணமாக காற்றை மேலும் உலர வைக்கிறது. இந்த வறண்ட காற்று மற்றும் பருவமழை காலநிலை பருவமழை ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. ஈரமான உச்சந்தலையின் ஈரப்பதம் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கிறது. எனினும், பொடுகுத் தொல்லையை சமாளிக்க பலரும் சந்தையில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் சில வேதிப்பொருள்கள் கலந்திருக்கலாம். இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே சில எளிமையான வீட்டு உபயோகப் பொருள்களைப் பயன்படுத்தி பொடுகை நீக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Dandruff Treatment: பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபட இந்த 3 எளிய வழிகளை பின்பற்றுங்கள்!
பொடுகை நீக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்
வேம்பு மற்றும் மஞ்சள் கலவை
மஞ்சள் மற்றும் வேம்பு இரண்டுமே ஆண்டிமைக்ரோபியல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இவை வைட்டமின் சி நிறைந்த சிறந்த வளமான ஆதாரங்களாகும். இவை பொடுகு சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. மேலும் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

வெந்தய ஹேர் மாஸ்க்
வெந்தயத்தின் ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்தல் மற்றும் பொடுகு இரண்டுக்குமே மிகவும் பயனுள்ள மற்றும் இயற்கையான தீர்வுகளில் ஒன்றாக அமைகிறது. குறிப்பாக இதில் நிறைந்திருக்கும் நிகோடினிக் அமிலம் மழைக்காலத்தில் முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லைக்கு எதிராகப் போராட உதவுகிறது. வெந்தய ஹேர் மாஸ்க் தயார்செய்வதற்கு ஓரிரவு முழுவதும் ஊறவைத்த இரண்டு தேக்கரண்டி வெந்தய விதைகளை பேஸ்ட்டாக உருவாக்கி, உச்சந்தலையில் தடவ வேண்டும். இதை 30 நிமிடங்கள் வைத்து பிறகு லேசான ஷாம்பு கொண்டு கழுவி விடலாம்.
எலுமிச்சை மற்றும் கடுகு எண்ணெய்
எலுமிச்சை சாறு, கடுகு எண்ணெய் இரண்டுமே பொடுகு நீங்க தீர்வாக அமைகிறது. இவை பொடுகை ஏற்படுத்தும் கூடுதல் கட்டமைப்பை அகற்றி, தலைமுடியை பிரகாசிக்க வைக்கிறது. இந்த சிகிச்சையின் குறைபாடு என்னவெனில், இந்த எண்ணெயை அகற்ற தலைமுடியை இரண்டு அல்லது மூன்று முறை ஷாம்பு செய்வதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Dandruff Treatment: பொடுகு தொல்லையால் அவதியா? இதை ட்ரை பண்ணுங்க ஒரே வாரத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!
ஹேர் ஸ்டைலிங்கைக் குறைப்பது
தலைமுடிக்கு ஹேர் ஸ்டைலிங் செய்வது முடியை வலுவிழக்கச் செய்வதுடன், முடி ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. பலரும் இந்த ஹீட் ஸ்டைலிங் முறையில் முடிக்கு வெப்பத்தை அளித்து முடியை நேராக்கவும், சுருள் முடியாக்கவும் செய்கின்றனர். ஆனால், முடிக்கு இவ்வாறு வெப்பத்தை அளிப்பது முடியை மெலிதாக்குகிறது. இது தவிர முடி உதிர்வை அதிகரிக்கச் செய்கிறது. இவை பொடுகுக்கும் வழிவகுக்கலாம். எனவே ஹீட் ஸ்டைலிங்கைக் குறைப்பது அவசியமாகும்.
வெங்காய ஹேர் மாஸ்க்
வெங்காய ஹேர் மாஸ்க் ஆனது சிறந்த பூஞ்சை காளான் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஊட்டச்சத்துக்கள் மிகுந்ததாகும். தலைமுடிக்கு இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது. இதன் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்புப் பண்புகள் பொடுகை நீக்குகிறது. இந்த ஹேர் மாஸ்க்கிற்கு வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி, உச்சந்தலையில் தேய்க்கலாம்.

முல்தானி மிட்டி
இதில் நிறைந்துள்ள பல்வேறு முக்கிய தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இவை நுண்ணறைகளை வலுப்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் இவை தலைமுடியில் உள்ள ரசாயனங்களை நீக்கி சுத்தப்படுத்துகிறது. தலைமுடிக்கு முல்தானி மிட்டியைப் பயன்படுத்துவது உச்சந்தலையில் பொடுகு மற்றும் அரிக்கும் தோலழற்சியைத் தடுக்க உதவுகிறது. மேலும் இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை
கற்பூரம், தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டும் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பை நீக்கி பொடுகை நீக்குகிறது. இதற்கு இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்புப் பண்புகளே காரணமாகும். மேலும் கற்பூரம் குளிர்ச்சி தன்மை கொண்டதாகும். இவை வீக்கம் மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் தன்மையைக் கொண்டுள்ளது. இதில் எரிச்சல் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் போது பொடுகுத் தொல்லையை உண்டாக்கும் பூஞ்சை வளர்ச்சியைத் தணிக்கலாம். இவ்வாறு பொடுகுத் தொல்லையைக் குறைக்கிறது.
இது போன்ற சிறந்த வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் பொடுகைக் குறைக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Rice Water for Dandruff: பொடுகு தொல்லை நீங்க அரிசி கழுவிய நீரை இப்படி பயன்படுத்துங்க!
Image Source: Freepik