How To Apply Oil To Hair according ayurveda: நாம் அனைவரும் நீண்ட, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான தலை முடியைப் பெறவே விரும்புகிறோம். ஆரோக்கியமான மற்றும் நீளமான கூந்தலை பெற தலைக்கு தவறாமல் எண்ணெய் வைக்க வேண்டும் என நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தலைமுடிக்கு சரியான முறையில் எண்ணெய் வைப்பது எப்படி என உங்களுக்கு தெரியுமா?
தலைமுடிக்கு என்னை வைப்பதால், தூக்கத்தின் தரம் மேம்படும், மனதை அமைதிப்படுத்தும், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள். ஆரோக்கியமான கூந்தலை பெற நாம் சந்தைகளில் கிடைக்கும் இரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கூந்தல் பராமரிப்பிற்கு இயற்கை பொருட்கள் மிகவும் நல்லது.
இந்த பதிவும் உதவலாம் : Curry Leaves Hair Oil: கரு கரு முடிக்கு கறிவேப்பிலை ஹேர் ஆயில்! வீட்டிலேயே இப்படி செய்யுங்க
ஆயுர்வேதத்தில் கூந்தல் பராமரிப்புக்கு பல தீர்வுகள் உள்ளன. இது முடியை ஆரோக்கியமாக வைப்பது மட்டுமல்லாமல், அவற்றை வலுவாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகிறது. கூந்தலுக்கு எண்ணெய் தடவுவதற்கான சரியான வழி நம்மில் பலருக்கு தெரியாது. முடிக்கு எண்ணெய் தடவுவதற்கான சரியான வழி ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்_
ஆயுர்வேதத்தின்படி முடிக்கு எண்ணெய் எப்படி தடவ வேண்டும்?

பெரும்பாலும் இரவில் தலைமுடிக்கு எண்ணெய் தடவி, மறுநாள் காலை ஷாம்பூவைக் கொண்டு தலையை சுத்தம் செய்வது தவறு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆயுர்வேதத்தின் படி, பகலில் தலைமுடிக்கு எண்ணெய் தடவி, பின்னர் 1-2 மணி நேரம் முடியில் எண்ணெய் விட்டு, பின் கழுவ வேண்டும்.
இது முடியின் வேர்களை பலப்படுத்துகிறது மற்றும் உச்சந்தலையில் ஊட்டச்சத்தை அளிக்கிறது. இரவில் எண்ணெய் தடவினால் சளி, இருமல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, பகலில் மட்டுமே தலைமுடிக்கு எண்ணெய் தடவ வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : Curd Hairmask: ஸ்ட்ராங்கான, பளபளப்பான முடிக்கு தயிருடன் இந்த பொருள்களைச் சேர்த்து யூஸ் பண்ணுங்க
முடிக்கு எந்த எண்ணெய் தடவ வேண்டும்?
ஆயுர்வேதத்தில், பல்வேறு வகையான எண்ணெய்களின் பயன்பாடு முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. எள் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் எண்ணெய் ஆகியவை ஆயுர்வேதத்தில் முடிக்கு மிகவும் ஏற்றதாகக் கருதப்படுகிறது. எள் எண்ணெய் உச்சந்தலையில் ஊட்டமளிக்கிறது மற்றும் முடி வேர்களை பலப்படுத்துகிறது. தேங்காய் எண்ணெய் முடியை ஆழமாக வளர்த்து பளபளப்பாக்குகிறது.
நெல்லிக்காய் எண்ணெய் முடி வளர்ச்சியை அதிகரித்து அவற்றை அடர்த்தியாக்குகிறது. ஆயுர்வேதத்தில் மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களுக்கும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு. பிரமி, பிரங்கிராஜ், கறிவேப்பிலை, துளசி போன்ற மூலிகைகளை வீட்டில் எண்ணெயில் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தலாம். இந்த மூலிகைகள் முடியின் வேர்களை பலப்படுத்துகிறது, பொடுகுத் தொல்லையிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : முடி உதிர்வுக்குக் காரணமாகும் வைட்டமின் குறைபாடுகள் என்னென்ன தெரியுமா?
உச்சந்தலையில் எண்ணெய் மசாஜ் செய்வதன் நன்மைகள்

தொடர்ந்து எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இது மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. ஆயுர்வேதத்தின் படி, எண்ணெய் மசாஜ் மனதை அமைதிப்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வாரத்திற்கு எத்தனை முறை முடிக்கு எண்ணெய் தடவ வேண்டும்?
கோடையில் உச்சந்தலையில் அதிக ஈரப்பதம் இருக்கும். இந்நிலையில், நமக்கும் நிறைய வியர்க்கிறது. இதன் காரணமாக கோடையில் முடி விரைவாக எண்ணெய் மிக்கதாக மாறும். ஆனால், கோடையில் கூந்தலுக்கு எண்ணெய் தடவுவதை முற்றிலும் தவிர்ப்பது தவறானது. உங்கள் தலைமுடியில் ஈரப்பதத்தை பராமரிக்க, நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை முடிக்கு எண்ணெய் தடவலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Hair Care Remedies : பார்லருக்கு செல்லாமல் வீட்டிலேயே உங்க தலைமுடியை ஷைனிங்காக மாற்றலாம்!
முடி வளர்ச்சிக்கு என்ன செய்யணும்?

- உங்கள் உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும்.
- தினமும் உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் செய்யுங்கள்.
- நடைப்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ளவும், தினமும் நடைப்பயிற்சி செய்யவும்.
- தினமும் தலைமுடிக்கு ஷாம்பு போடுவதை தவிர்க்கவும்.
- ரசாயனங்கள் கொண்ட முடி தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- போதுமான அளவு தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள்.
- உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் தடவ மறக்காதீர்கள்.
உங்களுக்கு முடி நரைத்திருந்தால், உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவதுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும், துரித உணவு, இரவு வரை விழித்திருப்பது போன்ற கெட்ட பழக்கங்களைக் கைவிடவும்.
Pic Courtesy: Freepik