Curd Hairmask: ஸ்ட்ராங்கான, பளபளப்பான முடிக்கு தயிருடன் இந்த பொருள்களைச் சேர்த்து யூஸ் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Curd Hairmask: ஸ்ட்ராங்கான, பளபளப்பான முடிக்கு தயிருடன் இந்த பொருள்களைச் சேர்த்து யூஸ் பண்ணுங்க

எனினும், சில இயற்கை முறைகளைக் கையாள்வதன் மூலம் இந்த முடி சார்ந்த பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். இது மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன், எந்தவொரு பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாதவாறு அமையலாம். அந்த வகையில் முடி ஆரோக்கியத்திற்கு உதவும் மிகப்பெரிய முடி பராமரிப்பு பொருட்களில் ஒன்று தயிர் ஆகும். இதில் உள்ள புரதம் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை தலைமுடியை வலுப்படுத்தவும், பளபளப்பாக வைக்கவும் உதவுகிறது. இதில் தலைமுடிக்கு தயிர் ஹேர் மாஸ்க் தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Control Hair Fall: மழைக்காலத்தில் முடி உதிர்வை குறைக்க இந்த உணவு திட்டத்தை பின்பற்றுங்க!

தலைமுடிக்கு தயிர் பயன்படுத்தும் முறைகள்

தயிர் ஹேர் மாஸ்க்

கிளாசிக் யோகர்ட் மாஸ்க் என்பது தலைமுடி மற்றும் உச்சந்தலையில் வெறும் தயிரை நேரடியாக தடவுவதாகும். இதில் தயிரில் இயற்கையான புரதம் மற்றும் ஈரப்பதம் நிறைந்துள்ளதால் முடியை சீரமைக்கவும் வலுப்படுத்தவும் உதவுகிறது. தயிரை நேரடியாக தலைமுடியில் தடவி சுமார் 30 நிமிடங்கள் அப்படியே விட்டு, பிறகு வழக்கம் போல வெதுவெதுப்பான நீர் மற்றும் ஷாம்பூவுடன் நன்கு கழுவ வேண்டும். இதை முடி பராமரிப்பு வழக்கத்தில் சேர்ப்பது தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.

தயிர் முட்டை ஹேர் மாஸ்க்

இந்த ஹேர் மாஸ்க் உடையக்கூடிய முடியுடன் போராடுபவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. தயிருடன் முட்டை சேர்த்த ஹேர் மாஸ்க் முடிக்குத் தேவையான ஊக்கத்தை அளிக்கிறது. இதற்கு அரை கப் தயிருடன் ஒரு முட்டையைச் சேர்த்துக் கொள்ளவும். இந்த புரதம் நிறைந்த ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் வைக்க வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவலாம். இவ்வாறு பயன்படுத்தி வருவதன் மூலம் பளபளப்பான முடியைப் பெறலாம்.

தயிர் மற்றும் வெந்தயம் ஹேர் மாஸ்க்

முடி உதிர்தல் பிரச்சனை இன்று பலரும் சந்திக்கக் கூடிய ஒன்றாகும். இதற்கு தயிர் மற்றும் வெந்தயம் கலந்த ஹேர் மாஸ்க் பெரிதும் உதவுகிறது. இந்த ஹேர் மாஸ்க் தயார் செய்வதற்கு இரண்டு டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை ஓரிரவு முழுவதும் ஊறவைத்து பின்னர் பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த பேஸ்ட்டை அரை கப் தயிருடன் கலந்து உச்சந்தலையிலும் முடியிலும் தடவ வேண்டும். இதனை 30-40 நிமிடங்கள் வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். இதில் வெந்தய விதைகள் மயிர்க்கால்களை வலுப்படுத்தி, வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் இந்த ஹேர் மாஸ்க் பயன்பாடு முடி அடர்த்தியை மேம்படுத்துவதற்கும், உதிர்வதைக் குறைப்பதற்கும் ஏற்றதாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Fenugreek Oil For Hair: ஒன்றா இரண்டா பல நன்மைகளை அள்ளித் தரும் வெந்தய எண்ணெய்! எப்படி தயாரிப்பது?

தயிர் மற்றும் வெண்ணெய்ப்பழம் ஹேர் மாஸ்க்

இது ஆழமான ஈரப்பதமூட்டும் சிகிச்சைக்கு ஏற்ற ஹேர் மாஸ்க் ஆகும். இந்த ஹேர் மாஸ்க் தயார் செய்வதற்கு அரை கப் தயிருடன் அரை அவகேடோ பழத்தைக் கலக்க வேண்டும். அவகேடோ அல்லது வெண்ணெய் பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இதில் தயிரில் உள்ள புரதத்துடன் அவகேடோ பழம் இணைந்து சக்திவாய்ந்த கண்டிஷனிங் ஹேர்மாஸ்க்கை உருவாக்குகிறது. இந்தக் கலவையை தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் வைத்து, பிறகு தலைமுடியை அலசலாம். இது தலைமுடியை மென்மையாக மாற்றுவதன் மூலம் வறட்சி மற்றும் உரித்தல் போன்றவற்றைச் சமாளிக்க உதவுகிறது.

தேன் மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்

வறண்ட, அரிப்பு உச்சந்தலையுடன் போராடுபவர்களுக்கு இந்த ஹேர் மாஸ்க் ஒரு சிறந்த தீர்வாகும். இதற்கு டன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். இதில் தேன் ஈரப்பதத்தை பூட்டக்கூடிய ஒரு பிரபலமான ஈரப்பதமூட்டியாகும். அதே சமயம், எலுமிச்சை சாறு உச்சந்தலையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் மூலமாகும். இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி 20-30 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். அதன் பிறகு தலைமுடியை அலசி விடலாம். இவை முடி ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்துகிறது.

இவ்வாறு தயிர் பயன்படுத்திய ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்துவது தலைமுடியை வலுவாகவும், மென்மையாகவும் மாற்றுவதுடன் பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: தலைமுடி அடர்த்தியாக வளர தயிருடன் இந்த ஒரு பொருள் சேர்த்து பயன்படுத்துங்க

Image Source: Freepik

Read Next

Hair Care Remedies : பார்லருக்கு செல்லாமல் வீட்டிலேயே உங்க தலைமுடியை ஷைனிங்காக மாற்றலாம்!

Disclaimer

குறிச்சொற்கள்