Home Remedies for Dry Hair : நாம் அனைவரும் நீண்ட மற்றும் அடர்த்தியான முடியைப் பெற ஆசைப்படுவோம். இதற்காக ஒவ்வொரு நாளும் புதிய புதிய பராமரிப்பு முறைகளை கடைபிடிப்போம். நம்மில் சிலர் நேரம் இருக்கும் போது பார்லருக்கு சென்று முடியை சரியாக பராமரிப்பும். நேரம் இல்லாதவர்கள் அதை அப்படியே கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். இன்னும் சிலருக்கு நேரம் இருந்தாலும் பணம் இருக்காது.
உங்கள் தலைமுடிக்கு சலூன் ஸ்டைல் டிரீட்மென்ட் கொடுக்க விரும்பினால், வீட்டில் உள்ள சில இயற்கையான பொருட்களை வைத்து தலைமுடியை எப்படி பராமரிப்பது என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதுடன், தலைமுடிக்கு எந்த விதமான தீங்கையும் ஏற்படுத்தாது.
இந்த பதிவும் உதவலாம் : கோடையில் ஆரோக்கியமான கூந்தல் பெற மனதில் கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்!
ஹேர் மாஸ்க் செய்ய தேவையான பொருட்கள் :
வாழைப்பழம் - 2.
முட்டை - 2.
எலுமிச்சை பழம் - 1.
வாழைப்பழத்தை முடிக்கு தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்

- வாழைப்பழத்தை தலைமுடியில் தடவினால் கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
- இது கூந்தலில் உருவாகும் சுருட்டையையும் குறைக்கும்.
- பிளவு முனைகளைக் குறைக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : முடி உதிர்வதை தடுக்கும் இயற்கையான மூலிகை எண்ணெயை இனி வீட்டிலேயே செய்யலாம்!!!
முட்டையை முடிக்கு பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
- முட்டையில் அதிக புரதம் உள்ளது. இது முடியை வேர்களில் இருந்து வலுப்படுத்த உதவுகிறது.
- முட்டையின் வெள்ளைப் பகுதி உச்சந்தலையில் உள்ள எண்ணெயை சுத்தம் செய்ய உதவுகிறது.
- பொடுகை விரட்டவும் முட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
- முட்டையில் உள்ள கூறுகள் முடிக்கு ஊட்டமளிக்க உதவுகிறது.
எலுமிச்சை சாறு நன்மைகள்

- எலுமிச்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடியை எந்தவிதமான தொற்று நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
- சுத்தப்படுத்தும் குணம் இதில் உள்ளது. இது முடியில் இருக்கும் பொடுகை நீக்குவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : ஆரோக்கியமான முடி வேண்டுமா? இந்த 7 ரகசியத்தை தெரிந்துக்கொள்ளுங்களேன்!
ஹேர் மாஸ்க் செய்முறை :

- வீட்டில் கூந்தலுக்கு சலூன் ஸ்டைலில் சிகிச்சையளிக்க, சுமார் 2 வாழைப்பழங்களை பிசைந்து கொள்ளவும்.
- அதில் 2 முட்டை வெள்ளைக்கரு மற்றும் 1 எலுமிச்சை பழத்தின் சாற்றை கலக்கவும்.
- இவை அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
- இந்த ஹேர் மாஸ்க்கை உச்சந்தலையில் இருந்து முடியின் நீளம் வரை தடவவும்.
- தலைமுடியில் சுமார் 1 மணி நேரம் அப்படியே விடவும்.
- இறுதியாக சுத்தமான தண்ணீரில் முடியை கழுவவும்.
- இந்த செய்முறையை வாரத்திற்கு 2 முறை வரை பயன்படுத்தலாம்.
- தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், சில நாட்களில் வித்தியாசத்தைக் காணத் தொடங்குவீர்கள்.
Image Credit: freepik