How to make DIY Hair Mask at Home: தூசி மற்றும் மாசுபாட்டால், நம் முடி உலர்ந்து உயிரற்றதாகிறது. அதுமட்டுமின்றி, வெள்ளை முடி, முடி உதிர்தல் என பல பிரச்சனைகளும் ஏற்படுகிறது. உட்கார்ந்த வாழ்க்கை, மாசுபாடு மற்றும் நாம் உண்ணும் உணவு போன்றவற்றால் பலர் இளம் வயதிலேயே முடி பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.
இதுபோன்ற நேரங்களில் விலை உயர்ந்த ஷாம்பு, கண்டிஷனர், சீரம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள நிறைய பணம் செலவழிக்கிறோம். இருப்பினும், நாம் எடுக்கும் சிகிச்சைகள் தற்காலிக தீர்வை தருவதோடு, சிறிது காலத்திற்கு பிறகு கூந்தலில் கடும் சேதத்தையும் ஏற்படுத்துகிறது.
அதிக பணம் செலவழிக்காமல் வீட்டிலேயே எளிதாக ஹேர் ஜெல் தயாரிப்பது எப்படி என்று இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொள்ளுங்கள். இந்த ஜெல் உங்கள் தலைமுடியை மிகவும் வலிமையாக்கும்.மேலும் பட்டு போல் பளபளப்பாக்கும்.
மேலும் படிக்க: அளவுக்கு அதிகமா முடி உதிருதா? காரணங்கள் இதுவாக கூட இருக்கலாம்!
பட்டர் ஹேர் மாஸ்க்கிற்கு தேவையான பொருட்கள்:
- அலோ வேரா ஜெல் - 1 கிண்ணம்
- சியா விதைகள் - 1 சிறிய கிண்ணம் அளவு
- தண்ணீர் - 5 கிளாஸ்
இப்படி ஹேர் ஜெல் தயார் செய்யவும்:
- முதலில் ஹேர் ஜெல்லுக்கு 5 கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் 1 கிண்ண சியா விதைகளை போடவும். இந்த கலவையை 5-7 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- தண்ணீரில் கொதிக்கும் போது விதைகளை சரியாக கலக்கவும். தண்ணீரின் தன்மை ஜெல் போல் ஆனதும் அடுப்பை நிறுத்தவும். பின்னர் சியா விதைகளிலிருந்து ஜெல்லை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- அதன் பிறகு கற்றாழை தண்டுகளில் உள்ள ஜெல்லை மிக்ஸியில் அரைக்கவும்.
- இப்போது சியா சீட்ஸ் ஜெல் உள்ள பாத்திரத்தில் கற்றாழை ஜெல் சேர்த்து, இரண்டையும் நன்கு கலக்கவும்.
- வெள்ளை கிரீம் அல்லது வெண்ணெய் போல் தோன்றும் வரை இரண்டையும் தொடர்ந்து கலக்கவும்.
- பட்டர் க்ரீம் தயாரானதும் பட்டர் ஹேர் ஜெல் ரெடி.
முடிக்கு இந்த ஜெல்லை பயன்படுத்துவது எப்படி?
- பட்டர் ஹேர் ஜெல் தயாரானவுடன், உச்சந்தலையில் இருந்து முடியின் நுனி வரை தடவவும்.
- ஜெல்லை முழுமையாக கூந்தல் உறிஞ்சும் வரை காத்திருக்கவும். சுமார் 30 நிமிடங்களுக்கு கூந்தலில் ஜெல்லை தடவி இருக்க வேண்டும்.
- முப்பது நிமிடம் கழித்து லேசான ஷாம்பு கொண்டு தலையை அலசவும். பின்னர் மென்மையான துண்டை பயன்படுத்தி கூந்தலை துவட்டவும்.
- உங்கள் தலைமுடி முன்பை விட பட்டுப் போலவும், பளபளப்பாகவும் இருப்பதைக் காண்பீர்கள்.
இதையும் படிங்க: இவங்க எல்லாம் மறந்தும் ஹேர் ஆயில் பயன்படுத்தக்கூடாது; ஏன் தெரியுமா?
முடிக்கு கற்றாழை மற்றும் சியா விதைகளின் நன்மைகள்:
பட்டர் ஹேர் ஜெல், கற்றாழை மற்றும் சியா விதைகளால் செய்யப்படுகிறது. இது உங்கள் முடியின் பளபளப்பையும் மென்மையையும் அதிகரிக்கச் செய்கிறது. முடி உதிர்தலையும் குறைக்கிறது. இது முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் தலைமுடியை மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கிறது.
- கற்றாழையில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ நிறைந்துள்ளதால் தலைமுடிக்கு மிகவும் நல்லது.
- கற்றாழை உச்சந்தலையை சுத்தப்படுத்த உதவுகிறது, முடியை மென்மையாக்குகிறது.
- அதுமட்டுமின்றி, வலுவான கூந்தலுக்கு கற்றாழை மிகவும் சிறந்தது.
- சியா விதைகளில் புரதம் நிறைந்துள்ளது. இது முடியை வலிமையாக்கும்.
- சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. iது முடியை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் முடியில் ஈரப்பதத்தை பராமரிக்க சிறப்பாக செயல்படுகிறது.
Image Source: Freepik