கற்றாழை என்பது “குணப்படுத்தும் செடி” என்று அழைக்கப்படுகிறது. மருத்துவக் குணங்கள் மட்டுமல்லாமல், அழகு பராமரிப்பிலும் இது ஒரு அற்புத மூலிகை. குறிப்பாக தலைமுடி ஆரோக்கியத்தில் aloe vera gel தனித்துவமான பங்கு வகிக்கிறது.
இரவில் பூசினால் அதிக பலன்
- தூங்கும் நேரத்தில் செல்கள் புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுகின்றன.
- இரவில் வியர்வை குறைவாக இருக்கும். அதனால் ஜெல் முழுமையாக ஊடுருவும்.
- காலை வரை அலோவேரா ஜெல் வேர் வரை சென்று ஊட்டச்சத்தை தரும்.
கற்றாழை ஜெல் பூசுவதால் கிடைக்கும் நன்மைகள்
- கற்றாழை வைட்டமின் A, C, E நிறைந்தது. இவை வேர்களை வலுப்படுத்தி கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்துகின்றன.
- கற்றாழையின் அண்டிபாக்டீரியல் மற்றும் Anti Fungal பண்புகள் தலையின் ஈரப்பதத்தை சமநிலைப்படுத்தி பொடுகை அகற்றுகின்றன.
- கற்றாழையில் உள்ள நீர்ச்சத்து மற்றும் அமினோ ஆசிட்கள் கூந்தலை ஈரமாக வைத்ததால், இயற்கை கருமை நீடிக்கும்.
- கற்றாழை ஜெல் தலைமுடிக்கு இயற்கையான ப்ரொடெக்டிவ் லேயர் போல் செயல்படும்.
- கற்றாழை மென்மையான குணம் கொண்டதால் split ends குறையும்.
- கற்றாழை என்சைம்கள் நிறைந்ததால் புதிய தலைமுடி வளர்ச்சியை தூண்டும்.
- கற்றாழையை இரவும் முடியில் தடவி, காலையில் அலசினால், கூந்தல் மென்மையாகவும் பிரகாசமாகவும் மாறும்.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் 8 Glass.. முடி Mass.! வாழ்நாள் முழுவதும் வழுக்கையே இருக்காது.!
பயன்படுத்தும் முறை (Step by Step)
- புதிய கற்றாழையை எடுத்து உள்ளிருக்கும் ஜெல் மட்டும் பிரித்தெடுக்கவும்.
- அதை மிக்சியில் அடித்து பசைபோல் ஆக்கவும்.
- தலைமுடி வேரிலிருந்து நுனி வரை தடவவும்.
- மெதுவாக 5 நிமிடம் மசாஜ் செய்யவும்.
- Cotton cap அல்லது துணி கட்டிக்கொண்டு தூங்கவும்.
- மறுநாள் காலை மென்மையான ஹெர்பல் ஷாம்புவால் அலசவும்.
நிபுணர் கருத்து
ஆயுர்வேத ஹேர் கேர் நிபுணர் சாந்தி கூறுகையில், முடி ஆரோக்கியத்திற்கு மார்க்கெட் கெமிக்கல் ப்ரொடக்ட்ஸை விட அலோவேரா ஜெல் பாதுகாப்பானது. வாரத்திற்கு 2-3 முறை இரவில் பூசி தூங்கினால், தலைமுடி ஆரோக்கியம் மிக விரைவில் மேம்படும் என்றார்.
யார் பயன்படுத்தலாம்?
- பெண்கள், ஆண்கள் இருவரும் பயன்படுத்தலாம்.
- குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பானது.
- டையபட்டீஸ், ஹார்மோன் பிரச்சினை உள்ளவர்களுக்கும் side effect இல்லை.
எச்சரிக்கைகள்
- கற்றாழை தோலுக்கு அலர்ஜி தருகிறதா என patch test செய்து பார்க்கவும்.
- மிகக் குளிரான காலத்தில் அடிக்கடி பயன்படுத்த வேண்டாம்.
- ஹென்னா, டை, ஹார்ஷ் கெமிக்கல்ஸ் போட்டிருக்கும் நாட்களில் தவிர்க்கவும்.
குறிப்பு
இயற்கையான overnight remedy தேடுபவர்களுக்கு Aloe Vera Gel ஒரு அற்புத பரிசு. இரவில் பூசி தூங்குவது தலைமுடிக்கு ஆழமான ஊட்டச்சத்தை வழங்கி, பிரகாசமும், ஆரோக்கியமும் தருகிறது.