ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்; கற்றாழையை கூந்தல், சரும பராமரிப்பிற்கு பயன்படுத்துவது எப்படி?

  • SHARE
  • FOLLOW
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்; கற்றாழையை கூந்தல், சரும பராமரிப்பிற்கு பயன்படுத்துவது எப்படி?

கற்றாழை ஜெல் நமது சருமத்தை அழகாக்குவது மட்டுமின்றி கூந்தலையும் அழகாக்குகிறது. சந்தையில் கிடைக்கும் பல அழகு சாதனப் பொருட்களில் இந்தக் கற்றாழை பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை ஜெல் சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும், சேதமடைந்த சருமத்தை சரிசெய்வதற்கும் சிறந்தது. கற்றாழை ஜெல் மிகவும் மென்மையானது என்பதால், தோல் மற்றும் முடிக்கு பயன்படுத்துவது எளிதானது.

வறண்ட சருமத்திற்கு:

வறண்ட சருமம் பலருக்கு இருக்கும் பிரச்சனை. இத்தகைய வறண்ட சருமம் உள்ளவர்கள் கற்றாழை ஜெல்லை உபயோகித்து பயன் பெறலாம். கற்றாழை உலர்ந்த சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.

இந்த ஜெல்லை நாம் சருமத்தில் தடவும்போது இந்த ஜெல்லில் இருக்கும் ஈரப்பதம் நல்ல பலன்களைத் தருகிறது. கற்றாழை ஜெல்லை நேரடியாக நம் சருமத்தில் தடவலாம். இதனால் உடல்நலக் கோளாறுகள் எதுவும் ஏற்படாது. இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் வறண்ட சருமம் புத்துயிர் பெறும்.

மேலும் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தினால் சருமம் என்னவாகுமோ? என்ற கவலையும் தேவையில்லை. ஏனெனில் இது அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது. கற்றாழை அனைவருக்கும் நன்மை பயக்கும். சருமத்தில் ஏற்படும் சொறி மற்றும் வெடிப்புகளை குறைக்கவும் உதவுகிறது.

இறந்த சரும செல்களை அகற்ற உதவுமா?

முகப்பரு என்பது இன்று ஒரு பொதுவான பிரச்சனை. இந்த பருக்கள் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி பருக்கள் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று இறந்த சரும செல்கள். நமது சருமத்தில் உள்ள ஆரோக்கியமான செல்கள் இறக்கும் போது முகப்பரு ஏற்படுகிறது.

கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் பிரச்சனை குறைகிறது. இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இந்த பிரச்சனையை குறைக்க உதவுகிறது. சருமத்திற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கிருமி நாசினியாகச் செயல்படுகிறது மற்றும் பாக்டீரியாவை திறம்பட எதிர்த்துப் போராடுகிறது. சரும பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது.

இந்த ஜெல்லை தொடர்ந்து பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்தக் கற்றாழை ஜெல்லில் சர்க்கரை கலந்து பயன்படுத்துவது அதிக பலன்களைத் தரும்.

இந்த கற்றாழை ஜெல்லை ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவினால், சருமத்தில் உள்ள சரும செல்கள் இறப்பது குறைந்து ஆரோக்கியம் அதிகரிக்கும்.

இரவு முழுவதும் சருமத்தை பாதுகாக்குமா?

படுக்கைக்குச் செல்வதற்கு முன் கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவுவது சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள். இரவில் படுக்கும் முன் கற்றாழை ஜெல்லைக் கொண்டு முகம், கழுத்து மற்றும் கைகளை மசாஜ் செய்வது, எழுந்தவுடன் அற்புதமான பலன்களைத் தரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவினால் சருமம் எண்ணெய் பசையாகாமல் இருக்கும். அதுமட்டுமின்றி, இது சருமத்திற்கு ஆழமான மாய்ஸ்சரைசரை வழங்குகிறது. காலையில் எழுந்தவுடன் நமது சருமம் மிகவும் மிருதுவாகவும், பட்டுப் போல மென்மையாகவும் இருக்கும்.

எனவே கற்றாழை ஜெல்லை படுக்கைக்குச் செல்வதற்கு முன் சருமத்தில் தடவுவது நல்லது. கற்றாழையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து சருமத்தில் தடவினால் சருமம் மிருதுவாகும்.

புருவங்களுக்கும் பயன்படும்:

கற்றாழை ஜெல் முக அழகுக்கு மட்டுமல்ல, பல பயன்பாடுகளையும் கொண்டுள்ளது. புருவங்களை அழகாக வைத்துக் கொள்ளவும் கற்றாழை ஜெல் பயன்படுகிறது. கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவதால் நமது புருவங்கள் மிகவும் அழகாகவும், மற்றவர்களை ஈர்க்கும் விதமாகவும் மாறும்.

கற்றாழை ஜெல்லை புருவங்களில் தடவுவதால் நம் இமைகள் க்ரீஸ் இல்லாமல் அழகாக இருக்கும். கற்றாழை ஜெல் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் கொண்டது, எனவே புருவங்களில் உள்ள முடிகளும் வளரும்.

கற்றாழை ஜெல்லுடன் ஆலிவ் எண்ணெயைக் கலந்து, புருவத்தில் தடவினால் அடர்த்தியான, கருமையான அழகான முடி வளர்ச்சியைக் காணலாம்.

முடியை பாதுகாக்குமா?

அலோ வேரா ஜெல் முடிக்கு நல்ல ஈரப்பதமூட்டும் முகவராக செயல்படுகிறது. இந்த ஜெல்லைப் பயன்படுத்துவதன் மூலம் பல வகையான கூந்தல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

உங்கள் தலைமுடி வறண்டு, கரடுமுரடாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், கற்றாழை ஜெல்லை தடவினால், இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கற்றாழையில் உள்ள புரோட்டியோலிடிக் என்சைம்கள் நம் உச்சந்தலையில் உள்ள இறந்த சரும செல்களை சரிசெய்கிறது.

கற்றாழை ஜெல்லில் தேன், ஆலிவ் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து தலைமுடிக்கு தடவுவது நல்லது. பின்னர் 30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை மென்மையாக அலசவும். இதைச் செய்வதன் மூலம், கூந்தல் தொடர்பான பிரச்சனைகள் அதன் நுண்ணறையிலிருந்து சரி செய்யப்படுகின்றன.

கற்றாழை ஜெல்லை ஷாம்பூவாக பயன்படுத்தலாமா?

கற்றாழை ஜெல்லை ஷாம்பூவாகப் பயன்படுத்துவதால் நம் தலைமுடிக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கற்றாழை ஜெல்லை ஹேர் ஷாம்பூவாகப் பயன்படுத்தினால் நம் தலைமுடி மிகவும் பளபளப்பாக இருக்கும்.

பலருக்கு பிஸியான வாழ்க்கையின் காரணமாக முடியை பராமரிக்க நேரம் கிடைக்காது. அப்படி நேரமில்லாதவர்கள் கற்றாழை ஜெல்லை ஷாம்புவுடன் சேர்த்து பயன்படுத்தினால் அதிக பலன்களைப் பெறலாம். இது உங்கள் தலையில் உள்ள பொடுகை நீக்குவதோடு, முடிக்கு புத்துயிர் அளிக்கிறது.

Image Source: Freepik

Read Next

Dark Lips: உங்க உதடு கருப்பா இருக்கா? ஒரே வாரத்தில் சிவப்பாக சூப்பர் வீட்டு வைத்தியம்!

Disclaimer

குறிச்சொற்கள்