All in All Aloe Vera: அரிதாக கிடைக்கும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், எளிதில் கிடைக்கக் கூடிய பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அப்படி நமக்கு அனைத்து இடத்திலும் கிடைக்கக் கூடிய தாவரம் தான் கற்றாழை. இதை நாம் அனைத்து இடத்திலும் காணலாம், அதேபோல் கற்றாழை எங்கும் எளிதாக வளரும், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இதற்கு அதிக கவனிப்பு தேவையில்லை.
இப்போதெல்லாம் இயற்கை வைத்தியத்தின் மீது மக்களின் நாட்டம் அதிகரித்துள்ளது, இதில் கற்றாழை முக்கியப்பங்கு வகிக்கிறது. சரும ஆரோக்கியம், முடி உதிர்வை நிறுத்த, உடல் எடையை வேகமாக குறைக்க என அனைத்து விஷயத்திற்கும் கற்றாழை நன்மை பயக்கும். ஆனால் இதை எப்படி முறையாக பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க: 666 Walking Rule: தினசரி இப்படி நடை பயிற்சி செய்தால் டபுள் மடங்கு பலன் உறுதி.. 666 நடைபயிற்சி விதி!
கற்றாழையின் ஊட்டச்சத்துக்கள் உடலை உள்ளிருந்து நீரேற்றமாக வைத்திருக்க உதவுகின்றன, இது பல நோய்களிலிருந்து நிவாரணம் பெற உதவும். சிலர் கற்றாழை சாறு குடிப்பார்கள், சிலர் அதன் இலைகளை வெட்டி முகத்தில் தடவுவார்கள், சிலர் சந்தையில் கிடைக்கும் அதன் ஜெல்லைப் பயன்படுத்துவார்கள். இப்படி கற்றாழையை பலர் பல விதமாக பயன்படுத்துகிறார்கள்.
கற்றாழையில் நிரம்பியுள்ள ஊட்டச்சத்துக்கள்
- கற்றாழையில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ, ஃபோலிக் அமிலம், கோலின், பி1, பி2, பி3, மற்றும் பி6 போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
- வைட்டமின் பி12 உள்ள தாவரங்களில் கற்றாழையும் ஒன்று.
- இதனுடன், கற்றாழை கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், குரோமியம், செலினியம், சோடியம் போன்றவை உள்ளது.
- அதேபோல் இரும்பு, பொட்டாசியம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட தாதுக்களின் நல்ல மூலமாகவும் கருதப்படுகிறது.
சரும ஆரோக்கியத்திற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்துவது?
- கற்றாழையுடன் வைட்டமின் ஈ காப்ஸ்யூலை கலந்து முகத்தில் தடவலாம். இதற்கு, 2 தேக்கரண்டி புதிய கற்றாழை ஜெல் எடுத்து, அதில் 1 வைட்டமின் ஈ காப்ஸ்யூலை தடவவும்.
- இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவலாம், அரை மணிநேரத்துக்கு பின் முகத்தை கழுவலாம்.
- அதேபோல் கற்றாழையை தேங்காய் எண்ணெய்க கலந்தும் முகத்தில் தடவலாம்.
- கற்றாழையை ரோஸ் வாட்டர் கலந்தும் முகத்தில் தடவலாம்.
- மேலும் பப்பாளி சாறு மற்றும் கற்றாழை ஜெல்லை கலந்தும் முகத்தில் தடவலாம்
- இந்த அனைத்து பயன்பாடும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பெருமளவு உதவியாக இருக்கும்.

முடி உதிர்வை குறைக்க உதவும் கற்றாழை
கற்றாழை மற்றும் தயிர் கலவை முடிக்கு மிகவும் நல்லது. இது முடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்க்க உதவும்.
கற்றாழை மற்றஉம் நெல்லிக்காய் சாற்றை கலந்து முடிக்கு தடவடினால் ஆகச்சிறந்த நன்மை கிடைக்கும். இது முடி கொட்டுவதை தடுக்க உதவுகிறது.
கற்றாழை மற்றும் வெங்காயச் சாறு கலந்து முடிக்கு தடவினால் முடி உதிர்தலை தடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
மேலும் படிக்க: Blood sugar chart: உணவுக்கு முன்னும் பின்னும் சர்க்கரை லெவல் எவ்வளவு இருக்கணும் தெரியுமா?
உடல் எடையை குறைக்க கற்றாழையை எப்படி பயன்படுத்துவது?
- கற்றாழை சாற்றை சிறிது தண்ணீரில் கலந்து குடிக்கவும். கற்றாழை சுவை விரும்பவில்லை என்றால் சிறிது கருப்பு உப்பு சேர்க்கவும்.
- கற்றாழை மற்றும் எலுமிச்சை சாறு உட்கொள்வதும் நன்மை பயக்கும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி கொழுப்பை எரிக்க உதவும்.
- காலையில் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் கற்றாழை சாறு சேர்த்து குடிப்பது உடல் எடை குறைக்க பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
- நீங்கள் விரும்பினால், உங்கள் காலை உணவோடு கற்றாழை சாற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
- அதேபோல் காலை உணவாக கற்றாழை சாற்றை உட்கொண்டால், அதிக எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்கள் உள்ள உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
image source: freepik