Fatty Liver: கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தால் கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படத் தொடங்குகிறது. இந்த பிரச்சனையால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இதுபோன்ற பிரச்சனை தனக்கு இருக்கிறது என்றே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இந்த பிரச்சனை முத்திய நிலைக்கு வந்த பிறகு தான் இதன் அறிகுறிகளே தென்படும்.
பல்வேறு காரணங்களால் கல்லீரலில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது. சில நேரங்களில் அதிகப்படியான மது அருந்துதல் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. மது அருந்தாவிட்டாலும் வெவ்வேறு காரணங்களால் கூட இது நிகழலாம். இருப்பினும், மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) என குறிப்பிடப்படுகிறது.
மேலும் படிக்க: 666 Walking Rule: தினசரி இப்படி நடை பயிற்சி செய்தால் டபுள் மடங்கு பலன் உறுதி.. 666 நடைபயிற்சி விதி!
கொழுப்பு கல்லீரல் நோய்க்கான முக்கிய காரணங்கள்
இந்த வகையான கொழுப்பு கல்லீரல் நோய்க்கான முக்கிய காரணங்கள் அதிக பதப்படுத்தப்பட்ட உணவு, உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சியின்மை உள்ளிட்டவைகள் ஆகும். உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
உங்கள் உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் கொழுப்பு கல்லீரல் நோயை நிர்வகிக்கவும் தடுக்கவும் முடியும். பொதுவாக, கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறைந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அத்தகைய டாப் 5 உணவு வகைளை இப்போது பார்க்கலாம்.
கொழுப்பு கல்லீரல் நோயை தீர்க்க உதவும் டாப் 5 உணவுகள்
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியில்யில் மார்பகம், புரோஸ்டேட், பெருங்குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் உள்ளிட்ட சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைத்து, ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பல சேர்மங்கள் உள்ளன.
எலிகளின் கல்லீரலில் கொழுப்பு படிவதைத் தடுக்க ப்ரோக்கோலி உதவும் என்று ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.
பச்சை காய்கறிகளை உட்கொள்வது எடை இழப்பை ஊக்குவிக்கிறது.
வால்நட்
வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன, இது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு அமில நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ள் கல்லீரல் கொழுப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வால்நட் பருப்புகளை உட்கொள்வது அவர்களின் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
பூண்டு
பூண்டு உலகம் முழுவதும் ஆரோக்கியமான உணவாகவும் இயற்கை மருந்தாகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
மருத்துவ ஆராய்ச்சியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூண்டுப் பொடி சப்ளிமெண்ட்ஸ் கொடுப்பது கொழுப்பு மற்றும் உடல் எடை இரண்டையும் குறைக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
பச்சை தேயிலை தேநீர் (க்ரீன் டீ)
- கொழுப்பு கல்லீரல் நோய் உட்பட பல நோய்களைத் தடுப்பதிலும் சிகிச்சையளிப்பதிலும் கிரீன் டீ நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.
- பொதுவாகவே க்ரீன் டீ உடலுக்கு பல நன்மைகளை பயக்கும்.
- உடல் எடை குறைப்பது முதல் இதய ஆரோக்கியம் வரை பல நன்மைகளை க்ரீன் டீ வழங்குகிறது.
- காரணம் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.
மேலும் படிக்க: Blood sugar chart: உணவுக்கு முன்னும் பின்னும் சர்க்கரை லெவல் எவ்வளவு இருக்கணும் தெரியுமா?
காபி
- காபி குடிப்பது கொழுப்பு கல்லீரல் நோயிலிருந்து உங்கள் கல்லீரலைப் பாதுகாக்க ஒரு சிறந்த வழியாக கருதப்படுகிறது.
- அன்னல்ஸ் ஆஃப் ஹெபடாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, காபியில் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
- இது கல்லீரல் வீக்கம் மற்றும் ஃபைப்ரோஸிஸைக் குறைக்கும் ஒரு சக்திவாய்ந்த கலவை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
image source: freepik