Homemade hair oil: நீளமா, அடர்த்தியா, கருப்பான முடிக்கு வீட்டிலேயே தயாரித்த இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க! டாக்டர் தரும் டிப்ஸ்

How to make ayurvedic hair oil for hair growth at home: முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், ஆரோக்கியமாக வைக்கவும் ஆயுர்வேத முறையில் வீட்டிலேயே சில எண்ணெய்களைத் தயார் செய்யலாம். இதில் முடி வளர்ச்சிக்கு டாக்டர் ஹன்சாஜி யோகேந்திரா அவர்கள் தரும் சில குறிப்புகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Homemade hair oil: நீளமா, அடர்த்தியா, கருப்பான முடிக்கு வீட்டிலேயே தயாரித்த இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க! டாக்டர் தரும் டிப்ஸ்

How to make ayurvedic hair oil at home: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். போதிய பராமரிப்பு இல்லாமை மற்றும் போதுமான ஊட்டச்சத்து இல்லாமை போன்ற காரணங்களால் முடி உதிர்வு, முடி உடைதல், நுனி முடி பிளவு, நரைமுடி போன்ற முதுமை சார்ந்த பிரச்சனைகளும் எழக்கூடும். இது போன்ற சூழ்நிலையில் முடி ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு வீட்டிலேயே தயாரித்த எண்ணெய், ஷாம்பு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்.

சில ஆயுர்வேத வைத்தியங்கள் முடி வளர்ச்சியை பெரிதும் ஆதரிக்கிறது. அதன் படி, தி யோகா இன்ஸ்டியூட் யூடியூப் தளத்தில் டாக்டர் ஹன்சாஜி யோகேந்திரா அவர்கள் முடி வளர்ச்சிக்கு வீட்டிலேயே செய்யக் கூடிய எண்ணெய் தயாரிப்பு குறித்து காணலாம். இதில் அவர் கூந்தல் பிரச்சனைகளுக்கு விடைபெற்று, அழகான கூந்தலைப் பெறவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி வேர்களை வலுப்படுத்தவும் உதவும் சிறந்த 3 கூந்தல் எண்ணெய்களைப் பகிர்ந்து கொள்கிறார். இதில் முடி வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் தயாரிப்புகள் குறித்து விரிவாகக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Ginger oil for hair: முடிக்கு இந்த ஒரு எண்ணெயை யூஸ் பண்ணுங்க. வேணாம்னு சொல்ற அளவுக்கு முடி வளரும்

முடி அடர்த்தியாக வளர உதவும் எண்ணெய்

வெந்தயம் மற்றும் கருஞ்சீரக எண்ணெய் (Fenugreek and black seed oil)

இந்த எண்ணெயானது முடி உதிர்தல் மற்றும் மந்தமான முடியால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். தோல் மருத்துவரின் கூற்றுப்படி வெந்தய விதைகள் பொடுகு மற்றும் உச்சந்தலையில் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது சேதமடைந்த முடியை மீண்டும் நல்ல நிலையில் உருவாக்கவும், முடி உதிர்தலைக் குறைக்கவும், முடியை வலுப்படுத்தி பளபளப்பை சேர்க்கவும் உதவுகிறது.

கருஞ்சீரக விதை எண்ணெய் பல நூற்றாண்டுகளாகவே பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதை தலைமுடிக்குப் பயன்படுத்துவது புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடிக்கு ஊட்டமளித்து பலப்படுத்தவும் உதவுகிறது. இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உடைப்பு மற்றும் மெலிதலைக் குறைக்கிறது. மேலும் உச்சந்தலையில் தொற்றுக்கு சிகிச்சையளிக்கவும், உதிர்தலைக் குறைத்து பராமரிக்கவும் உதவுகிறது. இவை முன்கூட்டியே நரைப்பதை தாமதப்படுத்தவும், ஆரோக்கியமான உச்சந்தலை சூழலைப் பராமரிக்கவும் உதவுகிறது.

வெந்தயம் கருஞ்சீரக எண்ணெய் தயார் செய்யும் முறை

தேவையானவை

  • வெந்தய விதைகள் - 2 தேக்கரண்டி
  • கருஞ்சீரக எண்ணெய் - நான்கில் ஒரு பங்கு கப் அளவு (குளிர் அழுத்தப்பட்டது)

செய்முறை

  • முதலில், வெந்தய விதைகளை மென்மையாக்க இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
  • பின்னர், காலையில் ஊறவைத்த வெந்தய விதைகளை நன்றாக பேஸ்ட் செய்யலாம்.
  • இந்த பேஸ்டை கருஞ்சீரக எண்ணெயுடன் கலக்க வேண்டும்.
  • பிறகு இந்தக் கலவையை 5 முதல் 7 நிமிடங்கள் குறைந்த தீயில் மெதுவாக சூடாக்க வேண்டும். இவ்வாறு சூடாக்கும் போது எண்ணெயில் வெந்தயத்தின் சத்துக்கள் கலந்து விடும்.
  • இந்தக் கலவையை ஒரு இருண்ட கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

எள் மற்றும் பிரிங்ராஜ் எண்ணெய்

இந்த எண்ணெய் கலவையானது ஆயுர்வேத முடி பராமரிப்பில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெயானது முடி வளர்ச்சியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எள் எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இவை உச்சந்தலையை ஆழமாக வளர்க்க உதவுகிறது. மேலும், பிரிங்ராஜ் மூலிகைகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இது முடி மீண்டும் வளர ஊக்குவிக்கவும், முன்கூட்டியே முடி நரைப்பதைத் தடுக்கவும் உதவுகிறது. இந்த எண்ணெய் கலவையைப் பயன்படுத்துவது முடி வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தாமல் மந்தமான, உயிரற்ற முடியை உயிர்ப்பிக்கிறது.

தேவையானவை

  • நல்லெண்ணெய் - அரை கப்
  • பிரிங்ராஜ் தூள் - 2 தேக்கரண்டி

(பிரிங்ராஜ் தூளுக்குப் பதிலாக உலர்ந்த இலைகளையும் எடுத்துக் கொள்ளலாம்)

இந்த பதிவும் உதவலாம்: Vembalam pattai for hair: முடி நீளமா, அடர்த்தியா வேணுமா? வேம்பாளம்பட்டை எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க

எள் பிரிங்ராஜ் எண்ணெய் தயார் செய்யும் முறை

  • முதலில் அரை கப் நல்ண்ணெயை குறைந்த தீயில் சூடாக்க வேண்டும்.
  • பின்னர், 2 தேக்கரண்டி பிரிங்ராஜ் தூள் அல்லது உலர்ந்த இலைகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
  • பிறகு இதை வடிகட்டி, அதன் ஆற்றலைப் பாதுகாக்க இருண்ட பாட்டிலில் சேமித்து வைக்க வேண்டும்.
  • இதை உச்சந்தலையில் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கலாம். பிறகு லேசான ஷாம்பூ கொண்டு கழுவி, தலைமுடி உயிர் பெறுவதை உணரலாம்.

கடுகு, கறிவேப்பிலை எண்ணெய்

இந்த எண்ணெய் கலவை முடியை புத்துணர்ச்சியூட்ட உதவுகிறது. கடுகு எண்ணெய் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டின் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கடுகு, கறிவேப்பிலை எண்ணெய் கலவையானது செயலற்ற நுண்ணறைகளை எழுப்ப ஒரு இயற்கை தூண்டுதலாக செயல்படுகிறது.

தேவையானவை

  • கடுகு எண்ணெய் - கால் கப்
  • புதிய கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

கடுகு, கறிவேப்பிலை எண்ணெய் தயார் செய்யும் முறை

  • முதலில் கால் கப் கடுகு எண்ணெயை குறைந்த தீயில் வேகவைக்க வேண்டும்.
  • பிறகு, ஒரு கைப்பிடி புதிய கறிவேப்பிலைகளைச் சேர்த்து, இலைகள் கரும் பச்சை நிறமாக மாறும் வரை கொதிக்க விட வேண்டும்.
  • இதை ஆறவைத்து, வடிகட்டி சேமித்து வைத்து, பின்னர் நேரடியாக உச்சந்தலையில் தடவலாம்.
  • சிறந்த பலனுக்கு குளிர்கால மாதங்களில் இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Curry Leaves For Hair: கறிவேப்பிலையை இப்படி யூஸ் பண்ணா இந்த முடி பிரச்சனை எதுவும் வராதாம்.

Image Source: Freepik

Read Next

Hair Growth Foods: நீளமான முடி வேணுமா.? இந்த உணவுகள் கட்டாயம்.!

Disclaimer