தரையைத் தொடும் அளவுக்கு முடி வேணுமா? இதோ வீட்டிலேயே செய்யப்பட்ட இந்த ஹெர்பல் ஆயிலை யூஸ் பண்ணுங்க

How to make herbal hair oil at home: மெதுவான முடி வளர்ச்சி அல்லது முடி உதிர்தலுடன் பலரும் போராடுகின்றனர். அவ்வாறே, முடி நீளமாக, அடர்த்தியாக வளர பலரும் பல வழிகளில் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு சிறந்த தீர்வாக இயற்கையான மூலிகைகள் மற்றும் எண்ணெய்களைப் பயன்படுத்துவது அடங்கும். இதில் முடி வளர்ச்சியை அதிகரிக்க பயனுள்ள மூலிகை எண்ணெய் ரெசிபிகள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
தரையைத் தொடும் அளவுக்கு முடி வேணுமா? இதோ வீட்டிலேயே செய்யப்பட்ட இந்த ஹெர்பல் ஆயிலை யூஸ் பண்ணுங்க

How to make ayurvedic hair oil at home: இன்று பலரும் முடி உதிர்தல் அல்லது மெதுவான முடி வளர்ச்சியுடன் போராடுகின்றனர். இதனால் கடைகளில் விற்பனை செய்யப்படும் சில முடி பராமரிப்புப் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும் எனக் கூற முடியாது. எனவே தான் சிலர் இயற்கை வைத்தியங்களைக் கையாள்கின்றனர். அவ்வாறு முடி வளர்ச்சிக்கு உதவும் மூலிகைகள் இயற்கையாகவே பல்வேறு சக்திவாய்ந்த மருந்துகளைக் கொண்டுள்ளது. இந்த மூலிகைகளைக் கொண்டு தயார் செய்யப்படும் எண்ணெய்கள் முடி வேர்களை வலுப்படுத்தவும், வளர்ச்சியைத் தூண்டவும், உச்சந்தலையை வளர்க்கும் ஊட்டச்சத்துக்களால் நிறைந்ததாகும்.

இதைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது, முடிக்கு பிரகாசத்தை மீட்டெடுக்க உதவுவதுடன், உடையக்கூடிய தன்மையைக் குறைக்கவும், ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த சிறந்த ஹெர்பல் ஆயில் ரெசிபிகளை நம் வீட்டிலேயே எளிமையான முறையில் தயார் செய்ய முடியும். இவை வலுவான, அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை ஊக்குவிக்க உதவுகிறது. இதில் தலைமுடி வளர்ச்சியை ஆதரிக்கவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் எளிய ஆனால் பயனுள்ள மூலிகை எண்ணெய் ரெசிபிகளைக் காணலாம்.

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் மூலிகை எண்ணெய் ரெசிபிகள்

செம்பருத்தி மற்றும் வெந்தய எண்ணெய்

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முனைகள் பிளவுபடுவதைத் தடுக்கவும் செம்பருத்தி பெரிதும் உதவுகிறது. அதே சமயத்தில் வெந்தயம் பொடுகை எதிர்த்துப் போராடவும், முடியின் வேர்களை வலுப்படுத்தவும் உதவுகிறது. இந்த இரண்டையும் கலந்த எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.

இந்த எண்ணெயைத் தயார் செய்ய, அரை கப் தேங்காய் எண்ணெய், 5 புதிய செம்பருத்தி பூக்கள் மற்றும் 1 தேக்கரண்டி வெந்தயத்தைச் சேர்த்து கலக்க வேண்டும். இதை 10 நிமிடங்கள் மெதுவாக சூடாக்கி, பிறகு ஆறவிட்டு வடிகட்டலாம். இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Vembalam pattai for hair: முடி நீளமா, அடர்த்தியா வேணுமா? வேம்பாளம்பட்டை எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க

நன்மைகள்

செம்பருத்தி, வெந்தயம் கலந்த இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது முடியை ஆழமாகப் பராமரிக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. மேலும் இது இயற்கையான மென்மையை மீட்டெடுக்கிறது. இது உரிதல் அல்லது சேதமடைந்த முடிக்கு ஏற்றதாக அமைகிறது.

கறிவேப்பிலை மற்றும் ஆமணக்கு எண்ணெய்

கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டின் மற்றும் முடி மெலிவதை எதிர்த்துப் போராட உதவும் புரதங்கள் உள்ளது. மேலும், ஆமணக்கு எண்ணெய் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

இதற்கு 2 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயை 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு கைப்பிடி புதிய கறிவேப்பிலையுடன் கலக்க வேண்டும். இதில் கறிவேப்பிலைகள் மொறுமொறுப்பாக மாறும் வரை கலவையை சூடாக்கலாம். பிறகு இதை ஆறவைத்து, வடிகட்டி, சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதை வாரத்திற்கு ஒரு முறை சூடான எண்ணெய் சிகிச்சையாக பயன்படுத்த வேண்டும்.

நன்மைகள்

கறிவேப்பிலை மற்றும் ஆமணக்கு எண்ணெயில் நிறைந்த ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

பிரிங்கராஜ் மற்றும் எள் எண்ணெய்

மூலிகைகளின் ராஜா என்றழைக்கப்படும் பிரிங்கராஜ் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்தலைத் தடுக்கவும் உதவும் ஒரு சிறந்த மூலிகை ஆகும்.

இந்த எண்ணெயைத் தயாரிப்பதற்கு 2 தேக்கரண்டி பிரிங்கராஜ் பொடியை ½ கப் எள் எண்ணெயுடன் கலக்க வேண்டும். இதை 5-7 நிமிடங்கள் குறைந்த தீயில் சூடாக்கி, பின்னர் ஆறவைத்து வடிகட்டலாம். இதை வாரத்திற்கு இரண்டு முறை உச்சந்தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.

நன்மைகள்

முடிக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மயிர்க்கால்களைப் புதுப்பிக்கவும் உதவுகிறது. மேலும் இவை அடர்த்தியான, ஆரோக்கியமான இழைகளைப் பெற உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Homemade hair oil: நீளமா, அடர்த்தியா, கருப்பான முடிக்கு வீட்டிலேயே தயாரித்த இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க! டாக்டர் தரும் டிப்ஸ்

ஆம்லா மற்றும் தேங்காய் எண்ணெய்

ஆம்லா வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்ததாகும். இவை கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், முடி நுண்குழாய்களை வலுப்படுத்தவும் உதவுகின்றன.

இந்த எண்ணெயைத் தயாரிக்க, 1 கப் தேங்காய் எண்ணெயுடன் 2 தேக்கரண்டி உலர்ந்த நெல்லிக்காய் பொடி அல்லது புதிய நெல்லிக்காய் துண்டுகளைச் சேர்த்து, அது கருமையாகும் வரை சூடாக்க வேண்டும். பின்னர் இதை குளிர்வித்து வடிகட்டி சேமித்து வைத்துக் கொள்ளலாம். வாரத்திற்கு 2-3 முறை இதை உச்சந்தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.

நன்மைகள்

ஆம்லா, தேங்காய் எண்ணெய் கலவையைத் தொடர்ந்து பயன்படுத்துவது முடி உதிர்தலைக் குறைக்கவும், முன்கூட்டியே நரைப்பதைத் தாமதப்படுத்தவும் உதவுகிறது. மேலும் இவை மந்தமான கூந்தலுக்கு அழகான பளபளப்பை சேர்க்கின்றன.

வேம்பு மற்றும் ஆலிவ் எண்ணெய்

வேம்பு ஒரு சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு மூலிகையாக செயல்படுகிறது. இது அரிப்பைக் குறைக்கவும், உச்சந்தலையை சுத்தப்படுத்தவும், பொடுகை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. மேலும் ஆலிவ் எண்ணெய் உச்சந்தலையை ஈரப்பதமாக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

அரை கப் ஆலிவ் எண்ணெயை 2 தேக்கரண்டி உலர்ந்த வேப்ப இலைகள் அல்லது வேப்பம்பூப் பொடியுடன் கலக்க வேண்டும். இதை மெதுவாக சூடாக்கி, 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்த எண்ணெயை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.

நன்மைகள்

இந்த எண்ணெயை முடிக்கு பயன்படுத்துவது உச்சந்தலையில் உள்ள கொழுப்பை நீக்கி, முடி வேர்களை வலுப்படுத்தி, ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Oils For Hair Growth: தலைமுடி தரையைத் தொடும் அளவுக்கு வளரனுமா? - இந்த எண்ணெய்களை பயன்படுத்திப் பாருங்க!

Image Source: Freepik

Read Next

இரவில் உச்சந்தலையில் அரிப்பு ஏற்பட என்ன காரணம்.?

Disclaimer