How to make onion hair oil at home: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுமுறையால் பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்குகிறது. இதனால் முடி உதிர்வு, முடி வறட்சியடைவது, நுனி முடி பிளவு உள்ளிட்ட பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். எனவே இது போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு சிலர் கடைகளில் விற்பனை செய்யப்படும் முடி பராமரிப்புப் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை சில சமயங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
இதனைத் தவிர்க்க, நாம் வீடுகளிலேயே சில பராமரிப்பு முறைகளைக் கையாளலாம். அதன் படி, நாம் முடிக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய்களைக் கூட நம் வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம். இவை முடி பிரச்சனைகளைக் குறைக்கவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் நீண்ட கால ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடியதாக அமைகிறது. அந்த வகையில், வெங்காயம் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல பண்புகளை கொண்டுள்ளது. இதில் வெங்காய எண்ணெய் வீட்டில் எவ்வாறு தயாரிப்பது மற்றும் அதன் நன்மைகள் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: முடிக்கு விளக்கெண்ணெய் யூஸ் பண்ணுவது இவ்வளோ நல்லதா.? தெரிஞ்சுக்கலாம் வாங்க..
முடிக்கு வெங்காய எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு
வெங்காயத்தில் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. நமது உச்சந்தலையில் pH அளவை பராமரிக்கவும், சிறந்த பளபளப்பான மற்றும் மென்மையான கூந்தலை பெறுவதற்கும் வெங்காய எண்ணெய் உதவுகிறது. இதன் மூலம் புது முடி வளர்ச்சியை ஊக்குவித்து முடி அடர்த்தியை தருவதற்கு ஏதுவாக அமைகிறது.
முக்கிய கட்டுரைகள்
கூந்தலின் வலிமையை அதிகரிக்க
வெங்காய எண்ணெயில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற தொற்றுகளை தடுக்கக்கூடிய நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. எனவே தொடர்ந்து வெங்காய எண்ணெயைத் தலைக்குப் பயன்படுத்துவது, முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது இரசாயனங்கள் மற்றும் எந்த கலப்பும் இன்றி இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் எண்ணெயாகும். எனவே இது மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இவ்வாறு கூந்தலின் வலிமையை மேம்படுத்தலாம்.
இயற்கை கண்டிஷனராக
தலைமுடியை மென்மையாக மற்றும் பளபளப்பாக வைப்பதற்கு, கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவது அவசியமில்லை. ஏனெனில் தற்போது இரசாயனங்கள் கலக்காத இயற்கையான முறையில் தயாரித்த வெங்காய எண்ணெயைத் தயார் செய்யலாம். இதை கூந்தலுக்கு பயன்படுத்துவது இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. இதற்கு குளிப்பதற்கு ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பாக இந்த எண்ணெயைக் கூந்தலில் தடவி சிறிது நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பின்னர் மிதமான அல்லது கெமிக்கல் அல்லாத ஷாம்புகளை பயன்படுத்தி தலையை கழுவி கொள்ளலாம். இது கூந்தலுக்கு பளபளப்பையும் மென்மையையும் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Oils For Hair Growth: தலைமுடி தரையைத் தொடும் அளவுக்கு வளரனுமா? - இந்த எண்ணெய்களை பயன்படுத்திப் பாருங்க!
ஃப்ரீ ரேடிக்கல்களின் வளர்ச்சியைத் தடுக்க
வெங்காய எண்ணெயில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க கூடிய ஃப்ளவனாய்டுகள் எனப்படும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை முடி வளர்ச்சியை ஊக்குவித்து முடி உதிர்வை தடுக்க உதவுகிறது. மேலும் முடி உதிர்வை ஏற்படுத்தக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. வெங்காய எண்ணெயில் உள்ள பண்புகள் முன்கூட்டியே முடி நரைப்பு போன்ற பாதிப்புகளை தடுப்பதற்கு உதவுகின்றன. இது முடி வளர்ச்சியை ஊக்குவித்து முடி உதிர்வைத் தடுக்கிறது.
வெங்காய எண்ணெயைத் தயார் செய்வது எப்படி?
தேவையானவை
- சிறிய வெங்காயம் - 1 கப் (வெங்காயத்தை எடுத்து அதனை இரண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்)
- தேங்காய் எண்ணெய் - 1 கப்
செய்யும் முறை
- வெங்காயத்திலிருந்து சாற்றைப் பிரித்தெடுப்பதற்கு, அதை நன்கு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு இரும்பு வாணலி ஒன்றில் தேங்காய் எண்ணெயை சேர்த்து மிதமான வெப்பத்தில் சூடு படுத்த வேண்டும்.
- இப்போது அரைத்து வைத்திருக்கும் வெங்காய சாற்றை இந்த எண்ணெயில் கலந்து கொள்ளலாம்.
- இதை மிதமான வெப்பத்தில் தொடர்ந்து நன்கு கிளறி விடலாம். இந்த கலவை கொதிக்கும் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.
- இந்நிலையில், தீயை நன்கு குறைத்து தொடர்ந்து கிளற வேண்டும். இப்போது எண்ணெய் தனியாக பிரிந்து வர தொடங்குகிறது.
- இந்த நிலையில் அடுப்பை அணைத்து இந்த கலவையை ஆற விட வேண்டும்.
- பின்னர் எண்ணெயை வடிகட்டி, காற்று புகாதவாறு ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து பயன்படுத்தலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: தரையைத் தொடும் அளவுக்கு முடி வேணுமா? இதோ வீட்டிலேயே செய்யப்பட்ட இந்த ஹெர்பல் ஆயிலை யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik